Published:Updated:

`தினமும் டைரி எழுதுங்கள்!' - நியூசிலாந்து பிரதமரின் கொரோனா அட்வைஸ்

ஜசிந்தா - கொரோனா
ஜசிந்தா - கொரோனா ( David White )

அங்கே இதுவரை பாதிக்கப்பட்ட 1,440 பேரில் 974 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் என்கிற இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் அப்படியே இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 105 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து நோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இன்றளவும் கொரோனா சமூகத் தொற்றாகியுள்ளது என அரசு அறிவிக்கவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஆப்பிரிக்கா அமெரிக்கா என உலகின் பல்வேறு இடங்களிலும் கொரோனாவின் சமூகத் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் இதுவரை 2,00,000 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனாவிலிருந்து ஓரளவுக்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும் நாடாக நியூசிலாந்து இருக்கிறது. அங்கே இதுவரை பாதிக்கப்பட்ட 1,440 பேரில் 974 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் என்கிற இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் அப்படியே இருக்கிறது.

Corona
Corona

இதற்கிடையே லாக்ட டௌனைப் படிப்படியாகக் குறைப்பது பற்றி அந்த நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆலோசித்து வருகிறார். நான்காவது கட்டத்தில் இருந்த லாக் டௌன் தற்போது மூன்றாவது கட்டத்துக்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம். கட்டுமானத் தொழில், காடுகள் பராமரிப்பு உள்ளிட்ட தொழில்கள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக் டௌன் தளர்த்தப்படும் நிலையில் மக்களுடைய சமூகத் தொடர்பு அதிகரிக்கும். இதனால் யாரைச் சந்தித்தார்கள் எனக் கண்டுபிடிப்பது கடினம். இதற்குத் தீர்வு காணும் வகையில் பிரதமர் ஜசிந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மக்களை ஒவ்வொரு நாளும் தாங்கள் யாரையெல்லாம் சந்தித்தோம் யாருடன் எல்லாம் அன்றைய தினத்தில் தொடர்பில் இருந்தோம் என்பதை ஒரு டைரியில் எழுதி வைக்கச் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சமூகப் பரவல் என அரசு அறிவிக்கும்வரை காத்திருக்காமல் ஒவ்வொருவருமே டைரி எழுதும் இந்த யோசனையைப் பின்பற்றலாம், பலரது உயிரைப் பாதுகாக்கும்.
மருத்துவமனை பணியாளர்கள்
மருத்துவமனை பணியாளர்கள்
DIXITH

சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பலகோடி ரூபாய் முதலீட்டில் Contact tracing அப்ளிகேஷன்களை வடிவமைத்து வருகின்றன. ஒருபக்கம் இந்த அப்ளிகேஷன்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் அப்ளிகேஷன்களுக்குப் பெரிய முதலீடு தேவையா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில்தான் ஜசிந்தாவின் இந்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

டைரியில் தாங்கள் சந்தித்தவர்களையும் தொடர்பிலிருந்தவர்கள் பற்றியும் எழுதுவது தொடர்புகளின் தடயத்தைக் கண்டறியும் எளிய வகையிலான வழி. பெரிய அளவிலான முதலீடுகளும் இதற்குத் தேவையில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
எம். விஜயகுமார்

இருந்தாலும் ஒவ்வொரு நாளும் முன்பின் தெரியாதவர்களைக்கூட நாம் சந்திக்க நேரும் சூழலில் இந்த வழிமுறையை 100 சதவிகிதம் செயல்படுத்த முடியுமா என்கிற சவாலும் இதில் அடங்கியிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சமூகப் பரவல் என அரசு அறிவிக்கும் வரை காத்திருக்காமல் தவிர்க்க முடியாத சூழலில் வெளியில் செல்லும் அனைவருமே டைரி எழுதும் இந்த யோசனையைப் பின்பற்றலாம், பலரது உயிரைப் பாதுகாக்கும்.

அடுத்த கட்டுரைக்கு