Published:Updated:

Covid -19: மீண்டும் அதிகரிக்கும் தொற்று; கோவிட் தடுப்பில் தோற்றுவிட்டதா நியூசிலாந்து?

நியூசிலாந்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஆக்லாந்தில் ஒருநாள் பாதிப்பு 206 என்று பதிவாகியிருக்கிறது. கோவிட் தொற்றை மிகச் சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்ட நியூசிலாந்துக்கே இந்த நிலை என்றால், மற்ற நாடுகளின் நிலை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

உலக அளவில் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் முன் மாதிரியாகக் கொண்டாடப்பட்டது நியூசிலாந்து. பெண் பிரதமர் ஜெசிந்தாவின் நிர்வாகத்தையும் உலகமே வியந்து பாராட்டியது. இந்நிலையில் நியூசிலாந்தில் மீண்டும் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது உலக நாடுகளின் கவனத்துக்கும் கவலைக்கும் உள்ளாகியிருக்கிறது. அங்கே ஒருநாள் பாதிப்பு 200-ஐ கடந்து பதிவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நியூசிலாந்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஆக்லாந்தில் ஒருநாள் பாதிப்பு 206 என்று பதிவாகியிருக்கிறது. கோவிட் தொற்றை மிகச் சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்ட நியூசிலாந்துக்கே இந்த நிலை என்றால், மற்ற நாடுகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, கோவிட் தொற்றுத் தடுப்பு நிர்வாகத்தில் நியூசிலாந்து தோற்றுவிட்டதா என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம்.

பூங்குழலி
பூங்குழலி

``பொதுவாகவே கோவிட் தொற்று பாதிப்பை நியூசிலாந்து கையாண்ட விதம் உலகளாவிய பாராட்டை அந்த அரசுக்குப் பெற்றுத் தந்தது. கொரோனாவை விரட்டுவதில் நியூசிலாந்து, சீனாவின் கொள்கையைப் பின்பற்றியதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்கூட தெரிவித்திருந்தார். கோவிட் தொற்றை விரைவாகக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துக் காட்டிய நாடுகளில் ஒன்று சீனா. அதே பாணியில் தொற்றுப்பரவலைத் தடுக்க தீவிர லாக்டௌன் கொள்கைதான் நியூசிலாந்து கையிலெடுத்த முதல் ஆயுதம். அடுத்து அங்கே தடுப்பூசிகளும் பெரும்பாலான மக்களுக்குப் போடப்பட்டுவிட்டன. அதன் தொடர்ச்சியாக லாக்டௌனில் தளர்வுகளை அறிவித்து, முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளுடன், நம்மைப் போலவே மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பார்வை நேரத்தில் உடலுறவு:  `கொரோனா சூழல் இல்லாதபோதும் கூட அது வேண்டாமே..!’ - நியூசிலாந்து பிரதமர்

கிட்டத்தட்ட 70 நாள்கள் லாக்டௌனுக்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களாகத்தான் லாக்டௌனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி இப்போது மீண்டும் அங்கே கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதன் பின்னணியில் சில விஷயங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அதன்படி, தீவிர லாக்டௌன், அதையடுத்த தளர்வு முக்கிய காரணம்.

அடுத்தது தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத டெல்டா வேரியன்ட் வைரஸ். மூன்றாவதாக அங்குள்ள குடிசைவாழ் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தொடரும் தயக்கம். சமீபத்திய தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு இவையெல்லாம் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், நியூசிலாந்தின் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இதுவரை வெற்றி பெற்றிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று எண்ணிக்கை 206 என்று காட்டினாலும், இறப்பு எண்ணிக்கையும் தொற்றுப் பரவும் விகிதமும் குறைவாகவே இருக்கின்றன.தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

Covid -19 Pandemic
Covid -19 Pandemic
Pixabay
நியூசிலாந்து: மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடு... அப்படி என்ன ஸ்பெஷல்?! நாடுகளின் கதை - 5

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போரும் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். தளர்வுகளை அறிவித்ததன் விளைவாகக் குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதுதான் அவர்கள் சந்திக்கும் தற்போதைய பெரிய சவால்.

எனவே, கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் நியூசிலாந்து தோற்றுவிட்டது என்று சொல்வது சரியானதல்ல. இதுவரையிலான நியூசிலாந்தின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இது அவர்களுக்குத் தற்காலிகப் பின்னடைவுதான். கோவிட் தொற்றுக்கு எதிரான அவர்களுடைய கடந்தகால அணுகுமுறை பெருமளவில் வெற்றிபெற்றிருப்பதால் தற்போதைய நிலையிலிருந்தும் நியூசிலாந்து நிச்சயம் மீண்டுவரும் என்று நம்பலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு