Published:Updated:

`2020-ன் முதல் குழந்தை பிஜி தீவில்; உலகம் முழுவதும் 3,92,078' - யுனிசெஃப் தகவல்!

ஒரு புதிய ஆண்டு புதிய சகாப்தத்தின் ஆரம்பம், நமது நம்பிக்கைகள் நமது எதிர்காலத்துக்கு மட்டுல்ல நமக்குப் பின் வருபவர்களின் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வாய்ப்பாகும்.

குழந்தை
குழந்தை ( representational image )

உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுனிசெஃப் நிறுவனம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது. புத்தாண்டு தினமான 2020 ஜனவரி 1-ம் தேதி உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் பிஜி தீவில்தான் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. 1,98,722 குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன.

குழந்தைகள்
குழந்தைகள்
representational image

அதிகபட்சமாக இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும், காங்கோவில் 10,247, எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள யுனிசெஃப் தலைவர், ``ஒரு புதிய ஆண்டு புதிய சகாப்தத்தின் ஆரம்பம், நமது நம்பிக்கைகள் நமது எதிர்காலத்துக்கு மட்டுல்ல நமக்குப் பின் வருபவர்களின் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வாய்ப்பாகும். ஒவ்வொரு ஜனவரியிலும் காலண்டர் புரட்டும்போது, ஒவ்வொரு குழந்தையும் அவரது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்து சாத்தியங்களும் திறன்களும் நமக்கு நினைவூட்டப்படுகின்றன. அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

யுனிசெஃப்
யுனிசெஃப்
Gorky

யுனிசெஃப் அறிக்கையின் படி 2018-ம் ஆண்டு 2.5 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளன. மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள், பிறந்த ஒரே நாளில் உயிரிழந்துள்ளன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை முன்கூட்டியே பிறப்பு பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தொற்று நோய்கள் போன்ற காரணிகளால் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.