Published:Updated:

கொரோனா: 10 மடங்கு அதிகரித்த ஆக்ஸிஜன் விலை; சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு; திணறும் இந்தோனேசியா!

ஜாவா தீவில் உற்பத்தி அளவைவிட ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கிறதாம். அங்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலை வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளுடன் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜனுக்காக அலறிய அவலக் குரல்கள், வரிசையாக எரியூட்டப்பட்ட சடலங்கள் என நம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத துயர நினைவுகளைக் கொடுத்துவிட்டு இந்தியாவில் தணியத் தொடங்கியிருக்கும் கொரோனா இரண்டாவது அலை, இந்தோனேசியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

coronavirus outbreak in Bekasi, West Java, Indonesia
coronavirus outbreak in Bekasi, West Java, Indonesia
AP Photo/Achmad Ibrahim
கொரோனா: `அடுத்த வாரம் என்ன நடக்குமோ?' - 500% அதிகரித்த தொற்று; கலக்கத்தில் நெதர்லாந்து!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக ஆரம்பித்தது. ஜூன் 1-ம் தேதி அங்கு தினசரி பாதிப்பு 4,824 ஆக இருந்தது. மாத இறுதியில் அது 20,000-ஐ தாண்டியது. ஜூலை மாதத்தில் தினசரி பாதிப்பு 40,000-ஐ தாண்டும் என்று வல்லுநர்கள் கணித்தனர், இப்போது தினசரி பாதிப்பு 50,000-ஐ கடந்திருக்கிறது. ஜூன் 1-ம் தேதி 145 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, ஜூலை 17-ம் தேதி, 1,092 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் தினசரி அதிக இறப்பு எண்ணிக்கை இந்தோனேசியாவில்தான் பதிவாகிறது. அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 73,000-ஐ கடந்திருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா எப்படி ஆக்ஸிஜனுக்காகத் திணறியதோ அதே நிலைதான் இப்போது இந்தோனேசியாவிலும் நடக்கிறது. அங்கு தேசிய அளவில் மருத்துவமனைகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்ஸிஜன் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக, தலைநகர் ஜகர்தா, ஜாவா தீவு மற்றும் பாலி தீவில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அங்கு நிலைமை கைமீறிப் போவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்திருக்கிறது.

People pray outside an ambulance carrying the body of a relative who died from the coronavirus before the burial at a cemetery in Surabaya, East Java, Indonesia
People pray outside an ambulance carrying the body of a relative who died from the coronavirus before the burial at a cemetery in Surabaya, East Java, Indonesia
AP Photo/Trisnadi

இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் 2,262 டன்தான். தற்போது அங்கு ஒரு நாளைய ஆக்ஸிஜன் தேவை 1,928 டன்களாக இருக்கிறது. குறிப்பாக, ஜாவா தீவில் உற்பத்தி அளவைவிட ஆக்ஸிஜன் தேவை அதிகமாக இருக்கிறதாம். அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தோனேசியாவுக்கு ஆக்ஸிஜன் உதவி வழங்க முன்வந்திருக்கின்றன. தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அந்தநாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் பலரும் வீட்டுத்தனிமையிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. ஜூன் மாதம் வீட்டுத் தனிமையிலிருந்தவர்கள் மட்டும் 453 பேர் மரணமடைந்துள்ளதாகத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் பலர் மரணிக்கின்றனர்.

Workers wearing mask to curb the spread of coronavirus carry a coffin specially made for burial with COVID-19 protocol at their workshop in Jakarta, Indonesia
Workers wearing mask to curb the spread of coronavirus carry a coffin specially made for burial with COVID-19 protocol at their workshop in Jakarta, Indonesia
AP Photo/Tatan Syuflana
கொரோனா: `அடுத்த 100 நாள்கள் மிகவும் முக்கியமானவை!' - மத்திய அரசின் புதிய எச்சரிக்கை

கடந்த மாதத்திலிருந்து அந்நாட்டின் பல மாகாணங்களில் கல்லறை அமைக்கும் பணிகளும், சவப் பெட்டிகள் தேவையும் அதிகரித்துள்ளன. ஜகர்தாவில் கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றனவாம். அங்கு தேவைக்கேற்ற அளவு சவப்பெட்டிகள் செய்வது சிரமமாகியிருப்பதால் தன்னார்வலர்கள் உதவிபுரிகின்றனர்.

ஜூலை 15-ம் தேதி இந்தோனேசியாவில் 56,757 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 17-ம்தேதி 51,952 ஆக பாதிப்பு குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அங்கு படிப்படியாகப் பாதிப்பு குறைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு