Published:Updated:

பிரசவத்துக்குப்பின் அக்குளில் பால் சுரந்த போர்ச்சுகல் பெண்; மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

குழந்தை பிறந்து இரண்டாவது நாளில் அவரின் வலதுகை அக்குளில் வலி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. கூடவே, அக்குளிலிருந்து ஒருவித வெள்ளை நிறத்திரவமும் வெளிவர, அதிர்ந்து போனவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

பிரசவமடையும் தாய்மார்களுக்கு மார்பகங்களில் பால் சுரக்கும். சமீபத்தில், குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு அசாதாரணமான முறையில் அக்குளில் பால் சுரக்கத் தொடங்க, அது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

 தாய்ப்பால் - Representational Image
தாய்ப்பால் - Representational Image
Covid Questions: கொரோனா பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?

போர்ச்சுகலைச் சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணிக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டாவது நாளில் அவரின் வலதுகை அக்குளில் வலி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. கூடவே, அக்குளிலிருந்து ஒருவித வெள்ளை நிறத்திரவமும் வெளிவர, அதிர்ந்து போனவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். பரிசோதனையில் அவரின் வலதுகை அக்குளில் மூன்றாவது மார்பகம் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாது, அக்குளில் கசிந்துகொண்டிருந்த வெள்ளை நிறத்திரவம் தாய்ப்பால் என்றும் உறுதிசெய்தனர் மருத்துவர்கள்.

உலகில் 6 சதவிகிதப் பெண்களுக்கு, மார்பகச் செல்கள் அக்குளில் வளரும் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறது ஆய்வு. பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னை `பாலிமஸ்டியா’ (polymastia) என மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போதே அக்குளில் மார்பக செல்கள் இருந்தாலும் கர்ப்பம் தரிக்கும்போது தான் அவை செயல்பட ஆரம்பித்து பால் சுரக்கச் செய்கிறது. இதனால், குழந்தை பிறந்து பால் சுரக்கும்போதுதான் இந்தப் பிரச்னை இருப்பதையே பெண்கள் கண்டறிகிறார்கள். குழந்தை பிறக்கும்போது அக்குளில் பால் சுரப்பதென ஆரம்பமாகும் இந்தப் பிரச்னை குழந்தை வளரும்போது தானாகவே நின்றும்விடுகிறது.

Breast Feeding
Breast Feeding
Pixabay
தாய்ப்பால் கட்டாம இருக்க எப்படி Breast Pump Use பண்ணனும்? | Breast Pump Types Explained | Say Swag

மார்பகப் பகுதிகளில் கூடுதல் திசுக்கள் காணப்பட்டால் புற்றுநோய்க்கான பரிசோதனை எடுப்பது அவசியம். அதைப் போலவே, அந்த போர்ச்சுகல் பெண்ணுக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் அவர் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்திருக்கிறது. அக்குளில் இருக்கும் மார்பகத் திசுக்களிலிருந்து வெளிவரும் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா மற்றும் மார்பகங்களில் கட்டிக்கொள்ளும் பாலை பம்ப்பிங் செய்து வெளியே எடுப்பது போல இதை வெளியே எடுக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை மருத்துவ உலகம்தான் விளக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு