Published:Updated:

மன அழுத்தத்தின்போது சாப்பிடத் தோன்றுகிறதா? காரணம் இதுதான்... ஆய்வு சொல்லும் தகவல்!

stress ( pixabay )

`வானம் முழுக்க மேகம்... என்னோட மனசெல்லாம் சோகம்’ என இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தில் எப்படித் தோன்றுகிறது இந்த உணவு உண்ணும் எண்ணம்? ஆய்வு சொல்வது என்ன தெரியுமா?

மன அழுத்தத்தின்போது சாப்பிடத் தோன்றுகிறதா? காரணம் இதுதான்... ஆய்வு சொல்லும் தகவல்!

`வானம் முழுக்க மேகம்... என்னோட மனசெல்லாம் சோகம்’ என இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தில் எப்படித் தோன்றுகிறது இந்த உணவு உண்ணும் எண்ணம்? ஆய்வு சொல்வது என்ன தெரியுமா?

Published:Updated:
stress ( pixabay )
'மன அழுத்தத்தில் இருக்கும்போது எனக்கு பசிக்கும்' என்பவர்களையும், 'எனக்கு வர சோகத்துக்கு என்ன பண்ணுறேன் பாரு' என சொல்லிவிட்டு சாப்பாட்டைப் பார்த்ததும் மனம் மாறி விடுபவர்களையும் கவனித்து இருக்கிறீர்களா?

`வானம் முழுக்க மேகம் என்னோட மனசெல்லாம் சோகம்’ என இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தில் எப்படித் தோன்றுகிறது இந்த உணவு உண்ணும் எண்ணம்?

எல்லா செயல்களையும் கட்டுப்படுத்துவது மூளைதான் எனில், மன அழுத்தத்தின்போது மூளை நம்மை அதிகம் சாப்பிடச் சொல்லித் தூண்டுகிறதா என்ற கேள்வி எழுகிறதல்லவா..?

Stress
Stress
pixabay.com

இதை அறிய, சமீபத்தில் ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், மன அழுத்தம் பருமனானவர்களிடமும், ஒல்லியானவர்களிடமும் எப்படி பசியுணர்வைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிய முயன்றது. இதற்காக 16 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் என மொத்தம் 29 வயது பெரியவர்கள், சோதனையின் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களில் 17 பேர் பருமனானவர்கள், 12 பேர் ஒல்லியானவர்கள். இவர்களுக்கு இரண்டு எஃப் எம்.ஆர்.ஐ ஸ்கேனும் (fMRI), சோஷியல் மற்றும் பிசியலாஜிகல் ஸ்ட்ரெஸ் சோதனையும் எடுக்கப்பட்டன. இந்தசட சோதனைகளின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு ஸ்கேன் எடுக்கும்போது, உணவின் பெயர்களுக்கு மூளை எப்படி வேலை செய்கிறது என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவர்களுக்கு ஒவ்வோர் உணவின் பெயரும், அந்த உணவு எப்படி இருக்கும், அதன் வாசம், சுவை, உங்களுக்கு அந்த உணவிலிருந்து எந்த அளவிற்கு வேண்டும் என அனைத்தையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்லப்பட்டது.

இந்த ஆய்வில், வறுக்கப்பட்ட சீஸ் போன்ற உயர் கலோரி உணவுகளின் பெயர்களைக் கேட்டபோது, பருமனானவர்கள் நடத்தை மற்றும் அறிவாற்றல் கட்டுப்பாட்டின் செயல்பாடு (cognitive control) குறைவாக இருந்துள்ளது. அதோடு இரு குழுக்களிலும் மன அழுத்தம், மூளையில் உணவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.

 சீஸ்
சீஸ்

இது குறித்து பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் சூசன் கார்னெல் கூறுகையில்,``இரு குழுக்களிலும் மன அழுத்தம் மற்றும் மூளையின் ரெஸ்பான்ஸ் இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பை நாங்கள் கண்டறிந்தோம்.

உணர்ச்சி வசப்படும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, அந்த நேரத்தில் சாப்பிடுவது உங்களை நன்றாக உணர வைக்கும். அதே வேளையில், அதிகப்படியான உணவு உண்கிறோம் என்ற குற்ற உணர்வையும் இது உங்களுக்கு ஏற்படுத்தும். இதைச் சமாளிக்கச் சிறந்த வழி, உங்கள் உணர்வுகளை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கையாள்வது தான். கவனமாக இருப்பதோடு, உங்கள் தூக்க சுழற்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு குறித்தான தகவல்கள் PLOS ONE என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூளைக்கு, மூளையே இல்லனு தோணுதோ?