Published:Updated:

`டெலிவரி பாய் பணி... தினமும் 20 கி.மீ நடை!’ - ரஷ்ய லாக் டெளன் நாள்களைக் கடக்கும் மாஸ்கோ தொழிலதிபர்

தொழிலதிபர் செர்ஜேய்
News
தொழிலதிபர் செர்ஜேய் ( AP )

இந்தப் புதிய வேலை தனக்கு உடல் அளவில் அதிக நம்பிக்கைத் தருவதாகச் சொல்லும் செர்ஜேய், தங்களின் யெல்லோ நிறத்திலான ஆடைகள்தான் கவனிக்கப்படுவதாகவும் டெலிவரி செய்யப்படும் நபர்களை மக்கள் கவனிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் கிடையாது. அனைவரிடமும் ஒரே மாதிரிதான் பரவுகிறது. எனினும், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள லாக் டெளன், ஏழை மக்களைக் கொஞ்சம் கூடுதலாகப் பாதித்துள்ளது.

தொழிலதிபர் செர்ஜேய்
தொழிலதிபர் செர்ஜேய்
AP

இந்த நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவர், லாக் டெளனில் தினமும், இந்திய மதிப்பில் 1,000 முதல் 1,500 ருபாய்க்கு டெலிவரி பாய் ஆக வேலை பார்க்கிறார். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று ரஷ்யாவிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் நீண்ட காலமாக வீட்டிலே அடைந்து இருந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த தொழிலதிபர் செர்ஜேய் நோச்சொவ்னிக்கு இணைய உலகம் வெகு சீக்கிரமாகவே போர் அடித்துவிட்டது. தொடர்ந்து வீட்டில் இருப்பது அவருக்கு போர் அடித்தது.

தொழிலதிபர் செர்ஜேய்
தொழிலதிபர் செர்ஜேய்
AP

அதே நேரம் அரசாங்கத்தின் உத்தரவை மீறி வெளியே செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அப்போதுதான், மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க டோர் டெலிவரிகள் நடப்பதை கவனித்தார், சற்றும் யோசிக்காமல், டெலிவரி பாய் பணிக்கு சேர்ந்துவிட்டார். கன்சல்ட்டிங் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வரும் செர்ஜேய்யின் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வருடம்தான் சொந்த ஊரான மாஸ்கோ திரும்பியுள்ளார் செர்ஜேய். அதற்கு முன்னர் வரை சீனாவில் 12 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தற்போது தினமும் சுமார் 20 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று உணவுப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்.

தொழிலதிபர் செர்ஜேய்
தொழிலதிபர் செர்ஜேய்
AP

இந்தப் புதிய வேலை தனக்கு உடல் அளவில் அதிக நம்பிக்கை தருவதாகச் சொல்லும் செர்ஜேய், தங்களின் யெல்லோ நிறத்திலான ஆடைகள்தான் கவனிக்கப்படுவதாகவும் டெலிவரி செய்யப்படும் நபர்களை மக்கள் கவனிப்பதில்லை என்றும் தெரிவித்தார். எனினும், தனது தொழில் எதுவும் நஷ்டத்தை சந்திக்கவில்லை என்றும் புதிதாக டெலிவரி நிறுவனத்துடன் தனது நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். லாக் டெளனை மறுபக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் செர்ஜேய்!