Published:Updated:

ஒருவருக்கு கொரோனா தொற்று - 300 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி!

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

டந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரதாண்டவம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூரில் டி.பி.எஸ் என்ற பிரபல வங்கியின் கிளை ஒன்றில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தக் கிளையில் வேலைசெய்யும் அனைத்து ஊழியர்களும் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பு மருந்து... ஆஸ்திரேலிய வாழ் இந்திய விஞ்ஞானியின் நம்பிக்கை தரும் ஆய்வு!

சர்வதேச அளவில், அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சிங்கப்பூரில் பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

corona outbreak
corona outbreak

இந்நிலையில், கடந்த செய்வாய்க் கிழமையன்று டி.பி.எஸ் வங்கிக் கிளை ஒன்றில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவருக்குச் சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே, இது மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க அந்தக் கிளையில் வேலைசெய்யும் 300 ஊழியர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, வீட்டிலிருந்தே வேலைசெய்யும்படி வங்கியின் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தெர்மாமீட்டர், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் வழங்கியுள்ளது வங்கி நிர்வாகம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`சிக்கலான இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட ஊழியருக்கும் அவரின் குடும்பத்துக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் நாங்கள் அளிப்போம்' என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

பின் செல்ல