Published:Updated:

`ஒரேநாளில் 931 பேருக்கு பாசிட்டிவ்; வெளிநாட்டு மக்களே அதிகம்!’ - சிங்கப்பூரில் கொரோனா பரவலின் நிலை

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

சிங்கப்பூரில், அந்நாட்டு மக்களைவிட அங்கு பணிபுரியும் இந்தியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 931 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் உட்பட பல வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஒட்டு மொத்தமாகக் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனா - சிங்கப்பூர்
கொரோனா - சிங்கப்பூர்
Pixabay

நேற்று பதிவான புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 15 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள், மற்றவர்கள் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இதனால் சிங்கப்பூரில் 13,624 பேர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்தியர்களே. கொரோனா பாதிப்பால், சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களைவிட வெளிநாட்டுத் தொழிலாளர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கொரோனா தொற்று பரவத்தொடங்கியதும், பரவலான சோதனை, கடுமையான தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு மூலம் சிங்கப்பூர் அரசு பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. எனினும், தற்போது இரண்டவாது அலையாக சிங்கப்பூரில் கொரோனா தொற்று வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

இதன் காரணமாக இப்போதிலுருந்து ஐந்து வாரங்கள் அங்கு சமூகப் பரவலைக் கண்காணித்து, பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கமாக மாறியதும், வெளிநாட்டினர்களின் தங்குமிடங்களில் சூழல் மேம்பட்டதாக உள்ளதா என்றும் கண்காணித்த பிறகே சர்க்கிட் பிரேக்கர் படிப்படியாகக் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`இந்தியத் தொழிலாளர்களைக் கவனிக்கவேண்டியது எங்கள் கடமை!’ -மோடிக்கு உறுதியளித்த சிங்கப்பூர் பிரதமர்

இதுகுறித்து பேசிய சிங்கப்பூர் பேராசிரியர் தம்பியா, ``கொரோனா அறிகுறி மற்றும் பாதிப்பு உள்ளவர்களை மட்டுமல்லாது ஃப்ளு, காய்ச்சல் போன்ற பாதிப்படைந்தவர்களைக் கண்காணிப்பதன் மூலமாக கொரோனா தொற்றைக் கண்டறிகிறோம். அதேபோல், மருத்துவமனைகளில் நிமோனியா போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலமாகவும் கொரோனா தொற்றைக் கண்டறிந்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

``இதன்மூலம் கண்மூடித்தனமான எண்ணிக்கையில் நாங்கள் தொற்றை உறுதி செய்யவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து அப்படியான சூழலை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ எனச் சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் சான் சுன் சுங் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு