Published:Updated:

10 வருடங்களாக பாஸ்தா, Croissant மட்டுமே சாப்பிட்டு வந்த சிறுமி... விநோத முடிவின் பின்னணி!

croissant and pasta ( pixabay )

``எனக்கு நினைவிருக்கும் வரை, இவளின் இரண்டாவது வயதில் இருந்தே வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வருகிறாள்...”

இங்கிலாந்து நாட்டின் கென்ட் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சியாரா பிராங்கோ. இவர் புதுவித உணவுகளை உண்பதில் உள்ள பயத்தால், சுமார் 10 வருடங்களாக வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.

food
food
pixabay

அதாவது இச்சிறுமி குழந்தையாக இருந்தபோது, மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியதில் இருந்து, புதுவித உணவுகளை சுவைப்பதில் பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னுடைய பதின்ம வயதை எட்டும் வரையில், மதிய உணவுக்கு Croissant மற்றும் டின்னருக்கு பாஸ்தா மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் தாய் ஏஞ்சலா கூறுகையில், ``எனக்கு நினைவிருக்கும் வரை, இவளின் இரண்டாவது வயதில் இருந்தே வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வருகிறாள். எப்போதாவது கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்க்கப்பட்ட மொறுமொறு பண்டங்களை சாப்பிடுவாள்.

ஆனால், ஒவ்வொரு நாளும் மதியம் Croissant மற்றும் டின்னருக்கு பாஸ்தாதான் உணவு. இந்தப் பழக்கத்தில் இருந்து அவளை வெளியே கொண்டுவர மிகவும் சிரமப்பட்டேன்.

10 வருடங்களாக பாஸ்தா, Croissant மட்டுமே சாப்பிட்டு வந்த சிறுமி... விநோத முடிவின் பின்னணி!

பிறகு, பத்திரிகையில் வந்த இதே போன்ற பயத்தைக் குறித்து, டேவிட் கில்முர்ரி என்ற ஹிப்னோதெரபிஸ்ட் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன்.

பின் அவரிடம் சிகிச்சைக்காக என் மகளை அழைத்துச் சென்றேன். தற்போது அவளின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் தெரிகிறது. சீன உணவுகள் மற்றும் அன்னாசி போன்ற பழங்களை உண்ணத் தொடங்கியுள்ளாள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.