Published:Updated:

கொரோனாவால் உயிரிழந்த தந்தைக்கு ஸ்மார்ட்போனில் இறுதிச்சடங்கு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

பிப்ரவரி 29 அன்று உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் 91 வயதான பைக். குடும்பத்தார், நிமோனியா என நினைக்க, அது தவறானது.

உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா. சமூக நோய்ப்பரவலைத் தடுக்க எல்லோரும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். நல்லது கெட்டது என எந்த நிகழ்வையும் நேரில் சென்று பார்க்க முடியாத சூழல் பலருக்கும்.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்

அமெரிக்காவின் கனெக்டிகட்டில், பில் பைக் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த நேரம் அவரின் குடும்பத்தார் குவாரன்ட்டைனில் இருந்தனர். பிப்ரவரி மாதம் 29 அன்று உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் 91 வயதான பைக். அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று குடும்பத்தார் நினைக்க, அது தவறானது. கொரோனாவுடனான நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்துள்ளார் பைக்.

உயிர் பிரிவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் போன் செய்து தாங்கள் அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து, அவருக்குச் சிகிச்சை அளித்த நர்ஸ், பைக்கின் காதருகே போனை பிடித்துக்கொள்ள, பாதிரியார் பீட்டர் வால்ஷ் இறுதிச் சடங்குகளுக்கான மந்திரங்களைச் சொல்லியுள்ளார். அடுத்த பத்தாவது நிமிடம் பைக்கின் உயிர் பிரிந்திருக்கிறது. ஸ்மார்ட்போன் வழியே இறுதிச்சடங்குகளை நிகழ்த்தியது இதுவே முதல்முறை என்றும் மிக அழகான இறுதிச்சடங்காக இருந்ததாகவும் பீட்டர் நெகிழ்ந்திருக்கிறார்.

கொரோனா
கொரோனா

பைக்-கின் மகன் டேனியல் பைக் தந்தையின் மரணம் குறித்துப் பேசுகையில், ``நாங்கள் யாரும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நினைக்கவில்லை. நிமோனியா என்றே நினைத்தோம். தந்தையின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரின் 91 ஆண்டுக்கால சேவைகளையும் செயல்களையும் நினைத்துப் பெருமை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

கேரளாவில்கூட தனித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நபர், தன் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்துள்ளார். தனக்கு அறிகுறிகள் இருந்த உடனேயே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது தந்தையின் மரணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது,

அடுத்த கட்டுரைக்கு