ஒருபாலீர்ப்புடைய ஆண் அல்லது இருபாலின ஈர்ப்புடையவர்கள், பால்மாற்று சிகிச்சை (Conversion therapy) செய்ய இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தடை விதிக்க அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் திருநர்களுக்கு மட்டும் மாற்று சிகிச்சை செய்வதற்கான தடையிலிருந்து விலக்கு அளிக்க உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சிகிச்சை ஒரு தனி மனிதரின் பாலின அடையாளத்தை மாற்ற முயல்கிறது என இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை வழங்கி வரும் NHS தெரிவித்துள்ளது. இந்தத் தடை அறிவிப்பானது LGBT குழுக்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் சிலரின் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் தெரசா மே 2018-ம் ஆண்டு, ஒருவரின் பாலின அடையாளத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடைமுறையை ஒழிப்பதாக உறுதி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது, இந்த விஷயத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்துக்கு அதிக அழுத்ததை ஏற்படுத்தியுள்ளது.