Published:Updated:

`கோவிஷீல்டு இங்கு ஏற்கப்படாது!' - இங்கிலாந்தின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; அரசின் பதில் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Travel - Representational Image
Travel - Representational Image ( Image by Rudy and Peter Skitterians from Pixabay )

மற்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளை வரவேற்றாலும், இந்தியாவிலிருந்து வரும் கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட பயணிகளை, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக இங்கிலாந்து அரசு அங்கீகரிக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா அலைகளுக்குப் பின் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்ட தொடக்கத்தில் சீனப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாகத் தடை உத்தரவுகள் தீவிரமாக்கப்பட்டு, பல நாடுகளிலிருந்தும் பயணிகள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்துள்ள அமெரிக்க அரசு சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து, முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளை அனுமதிக்கிறது. ஆனால், கடந்த வாரம் முதல் கோவிட் தொற்று அதிகரித்து வருவதனால் வெள்ளை மாளிகையின் முடிவுக்குச் சிலர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

America
America
AP
`உயிரிழப்பிலிருந்து கோவிஷீல்டு 98% பாதுகாப்பு அளிக்கும்!' -ராணுவக் குழுவின் புது ஆய்வு கூறுவது என்ன?

நவம்பர் தொடக்கத்திலிருந்து பயணிகளுக்கு அனுமதி என்பதைத் தவிர மற்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை. எனினும் 150 நாடுகளிலிருந்து பயணிகளை அமெரிக்கா அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகள், பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகட்டிவாக இருக்க வேண்டும் என்றும், அமெரிக்கா சென்றவுடன் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ``கட்டுப்பாடுகளை எளிதாக்குவது அரசியல் நடவடிக்கை அல்ல, அறிவியல் பூர்வமாகவே முடிவு செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் முதல் டெல்டா வைரஸினால் அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிறு மட்டும் 29,000 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் (சிடிசி) அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பயணிகள் கோவிட் பரிசோதனை சான்றிதழுடன் தடுப்பூசி சான்றிதழைக் காட்டினால் போதும், அவர்களை தனிமைப்படுத்த அவசியம் இல்லை. இந்த தளர்வுகளுக்கு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.

ஆனால் இங்கிலாந்தில் இதற்கு மாறான போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து மற்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளை வரவேற்றாலும், இந்தியாவிலிருந்து வரும் கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட பயணிகளை, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக இங்கிலாந்து அரசு அங்கீகரிக்கவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியப் பயணிகள், இதனால் இங்கிலாந்து சென்ற பின்னர் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

A view of part of Regent Street after Britain's Prime Minister Boris Johnson introduced Tier 4 restrictions for London
A view of part of Regent Street after Britain's Prime Minister Boris Johnson introduced Tier 4 restrictions for London
AP Photo/Stefan Rousseau
கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்? | Doubt of Common Man

இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் ட்விட்டர் பதிவில், ``கோவிஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்தப்படுவது, இனவெறியைத் தூண்டும் நடவடிக்கையாகும்'' எனக் கூறியிருக்கிறார்.

இது குறித்து வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், ``இங்கிலாந்து அரசின் நடவடிக்கை பாரபட்சமானது மற்றும் இங்கிலாந்து செல்லும் நம் நாட்டு பயணிகளை பாதிக்கக்கூடியது. இங்கிலாந்து வெளியுறவு செயலாளரிடம் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் இது குறித்து பேசியிருக்கிறார். பிரச்னை சரிசெய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு