Published:Updated:

6,400 உயிர்களைக் காத்து கொரோனாவை எதிர்த்து இறுதிவரை போராட்டம்... ஒரு மரணத்தால் கலங்கிய இரான்!

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த ஷிரீன்
கொரோனா பாதிப்பால் மரணமடைந்த ஷிரீன்

மருத்துவத்துறையில் பின்தங்கியுள்ள இரான் நாட்டில், கொரோனா பாதிப்புக்குள்ளான மக்களைக் காப்பாற்ற இரவு பகலாக மருத்துவர்கள் போராடிவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவிய சீனாவில், போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சீனாவில் காற்று மாசு குறைந்துவிட்டதாக 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வழியாகத் தெரியவந்துள்ளது. எனினும், மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. அமெரிக்காவிலும் 218 பேர் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இத்தாலியில் உலகிலேயே அதிகமாக, கொரோனா வைரஸ் உருவான சீனாவைக் காட்டிலும் 4,000 பேர் வரை பலியாகியிருக்கின்றனர்.

கொரோனா
கொரோனா

இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டிவருகிறார். ''கொரோனா பற்றிய உண்மைத் தகவல்களை சீனா மறைத்துவிட்டது. இதனால், உலகம் அதற்கான விலையைக் கொடுத்துவருகிறது '' என்று ட்ரம்ப் சீனாவைக் குறை கூறியுள்ளார். உலகில் இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின்,இரான் ஆகிய நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரானில் 1,433 பேரை கொரோனா காவுவாங்கியுள்ளது.

மருத்துவத்துறையில் பின்தங்கியுள்ள இரான் நாட்டில், கொரோனா பாதிப்புக்குள்ளான மக்களைக் காப்பாற்ற இரவு பகலாக மருத்துவர்கள் போராடிவருகின்றனர். மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துள்ளனர். அந்த வகையில், இரானில் 6,400 கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றிய மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் கொரோனாவுக்கு பலியானது, அந்த நாட்டு மக்களைக் கலங்கடித்துள்ளது. பக்ஷாத் நகரிலுள்ள ஷோகாதா மருத்துவமனையில் ஷிரீன் பணியாற்றி வந்தார். இரானில் கொரோனா தாக்குதலால் கொத்துக் கொத்தாக மக்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவந்தனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனாவுக்கு சிகிச்சை

இந்த மக்களுக்கு சிகிச்சையளித்த ஷிரீனையும் கொரோனா தாக்கியது. எனினும், சோர்வடையாத ஷிரீன், தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்தார். அவ்வப்போது, தனக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டு, நோயாளிகளையும் அவர் கவனித்துக்கொண்டார். தனக்கு சிகிச்சை எடுப்பதற்காக, தன் கையில் intravenous- ஐயும் அவர் பொருத்தியிருந்தார்.

ஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம்?! -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்

தன்னலம் பார்க்காமல் அவ்வப்போது ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ஷிரீன் பணியாற்றினார். இவரால், இரானில் 6, 400 கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். இறுதியின் தன் உயிரையும் கொரோனாவுக்குப் பறிகொடுத்தார். தற்போது, இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

டாக்டர்களை 'கடவுள்' என்று சொல்வார்கள். அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உலகுக்கு உணர்த்திச் சென்றுள்ளார் ஷிரீன்.

அடுத்த கட்டுரைக்கு