Published:Updated:

``23 மணி நேரம் படுத்தே இருப்பேன்... எனக்கு புவியீர்ப்பு விசை அலர்ஜி'': விநோத நோய், அவதியுறும் பெண்!

புவியீர்ப்பு - சித்திரிப்பு படம் ( pixabay )

2015-ம் ஆண்டில் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலியும், முதுகுவலியும் ஏற்பட்டுள்ளன. வாந்தி, ஒரேநாளிலேயே 10 முறை மயக்கம் என இந்த அறிகுறிகள் மோசமாகியுள்ளன.

சில பேருக்குச் சிலவற்றின் மீது அலர்ஜி இருக்கும். உதாரணத்துக்கு, சிலருக்குப் பூனை அலர்ஜியாக இருக்கும், சிலருக்குத் தூசி அலர்ஜியாக இருக்கும், ஒரு சிலருக்கு சில மாத்திரைகள் அலர்ஜியாக இருக்கும். இப்படிப் பல அலர்ஜிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதிலிருந்து தப்பிக்க அந்தச் சூழலில் சிக்கிக்கொள்ளாமல் முன்கூட்டியே தடுத்துவிட்டால் போதும்.

ஆனால், புவியீர்ப்பு விசையின் மீது ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் என்ன செய்வது... சிந்தித்துப் பார்க்கவே சற்று சிரமமாக உள்ளதல்லவா..?

அலர்ஜி - சித்திரிப்பு படம்
அலர்ஜி - சித்திரிப்பு படம்
pixabay

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது லிண்ட்சி ஜான்சன் என்ற பெண் கடற்படையில் வேலை செய்து வந்துள்ளார். 2015-ம் ஆண்டில் அவருக்கு வயிற்றுவலியும், முதுகு வலியும் ஏற்பட்டுள்ளன. வாந்தி, ஒரு நாளிலேயே 10 முறை மயக்கம் என இந்த அறிகுறிகள் மோசமாகியுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல வருட சிகிச்சைக்குப் பிறகு, 2022 பிப்ரவரியன்று மருத்துவர்கள், போஸ்டுரல் ஆர்த்தோஸ்டேடிக் டேக்கிகார்டியா சிண்ட்ரோமால் (postural orthostatic tachycardia syndrome - PoTS) இந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தனர். அதாவது, ஒரு நபர் நிற்கும்போது அல்லது உட்காரும்போது அவரின் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

``23 மணி நேரம் படுத்தே இருப்பேன்... எனக்கு புவியீர்ப்பு விசை அலர்ஜி'': விநோத நோய், அவதியுறும் பெண்!

இந்த சிண்ட்ரோம் குறித்து அப்பெண் தெரிவிக்கையில், ``எனக்குப் புவியீர்ப்பு விசை என்றால் அலர்ஜி. இப்படி நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்; ஆனால் அதுதான் உண்மை. மயக்கமில்லாமல் என்னால் மூன்று நிமிடங்களுக்கு மேல் எழுந்து நிற்க முடியாது. படுத்திருந்தால் நன்றாக உணர்கிறேன்.

நாள் முழுவதும் படுக்கையில் கழிக்கிறேன். ஒரு நாளைக்கு 23 மணி நேரம் வரை படுக்கையில் இருப்பேன். 28 வயதில் ஷவர் நாற்காலியை உபயோகிக்க வேண்டிய நிலை வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இனி என்னுடைய வீட்டைவிட்டு வெளியேற முடியாது. இதற்கு சிகிச்சையும் இல்லை. ஆனால், என்னிடம் என்ன உள்ளதோ அதற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.