Published:Updated:

`சாக்லேட்டில் இருந்து பரவும் புதிய நோய்!' - எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்

சாக்லேட்

`பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து `சால்மோனெல்லா டைபிமுரியம்' (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய் பரவுகிறது!' - உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான், அந்தச் செய்தி.

`சாக்லேட்டில் இருந்து பரவும் புதிய நோய்!' - எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்

`பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து `சால்மோனெல்லா டைபிமுரியம்' (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய் பரவுகிறது!' - உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான், அந்தச் செய்தி.

Published:Updated:
சாக்லேட்

கொரோனாவுக்குப் பின்னர், புதுப்புது வைரஸ் தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகி, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப் பட்டிருக்கும் புதிய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அது, இதுவரை நாம் கேட்டிராத வகையில் திகைப்பையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருக்கிறது.

WHO
WHO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து `சால்மோனெல்லா டைபிமுரியம்' (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய்த்தொற்று பரவுகிறது!' - உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான், அந்தச் செய்தி. இது, இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கும் நோய்க்கிருமியாகக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய வகை நோய்க்கிருமியானது, மல்டிடிரக் - ரெசிஸ்டென்ட் சால்மோனெல்லா டைபிமுரியம் எனப்படுகிற நோய்த்தொற்று குழுவைச் சேர்ந்தாகச் சொல்லப்படுகிறது. ``பெல்ஜியத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுகள் மட்டுமன்றி, 113 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளிலும் இந்த நோய்த்தொற்றுக்கான மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன" என்று முதல்கட்ட தகவலைக் கூறியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து கூடுதல் தகவல்களை வெளியிட்டிருக்கும் அந்த நிறுவனம், ``தற்போதுவரை உலகில் 11 நாடுகளிலிருந்து 151 மரபணு சம்பந்தப்பட்ட உட்கூறுகள், இந்தப் புதிய நோய்க்கிருமியுடன் சம்பந்தப்பட்ட சாக்லேட் தயாரிப்புகளுடன் சந்தேகிக்கப்படுகின்றன. இருப்பினும், ஐரோப்பிய பிராந்தியத்திலும், உலகின் மற்ற நாடுகளிலும் இந்த நோய்த்தொற்று பரவும் வேகம் மிதமானதாகவே இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட்
சாக்லேட்
Photo by Charisse Kenion on Unsplash

இந்தத் தொற்று, மல்டிடிரக் எதிர்ப்பு வகையில் 'S Typhimurium' எனும் மூலக்கூறு தட்டச்சு பாக்டீரியா உட்பிரிவுடன் இணைந்ததாக இருக்கிறது. இந்தத் தடயங்கள், பெல்ஜியத் திலிருந்து கண்டறியப்பட்ட குறிப்பிட்ட சில சால்லேட்டுகளில் தென்படும் நோய்க்கிருமிகளுடன் ஒன்றிப்போவதாகவும் தெரியவந்துள்ளது. அவை, கடந்த ஏப்ரல் 25-ம் தேதியிலிருந்து 113 நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள் விழிப்புடன் இருக்குமாறு அழுத்தமான எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism