Published:Updated:

Doctor Vikatan: நான்காவது அலை வருவதற்குள் பூஸ்டர் டோஸின் செயல்திறன் போய்விடாதா?

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: நான்காவது அலை வருவதற்குள் பூஸ்டர் டோஸின் செயல்திறன் போய்விடாதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி

நானும் என் கணவரும் 70 வயதைக் கடந்தவர்கள். கொரோனா தடுப்பூசியின் 3வது பூஸ்டர் டோஸை, அது போட ஆரம்பித்த உடனேயே செலுத்திக்கொண்டோம். இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் நான்காவது அலை வரலாம் என்று சொல்கிறார்கள். அதற்குள் நாங்கள் செலுத்திக்கொண்ட பூஸ்டர் டோஸின் செயல்திறன் போய்விடாதா? ஒருவேளை நான்காவது அலை வந்தால் நான்காவது டோஸ் போட்டுக்கொள்ளச் சொல்வார்களா? இன்னும் எத்தனை டோஸ் தேவைப்படும்?

- சுமதி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

``உங்களுடைய கவலை தேவையற்றது. இப்போதைக்கு நீங்கள் போட்டுக்கொண்ட பூஸ்டர் டோஸ் தடுப்பூசியே போதுமானது. நான்காவது அலை வருமா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் இல்லை. கணிப்புகளை நினைத்துக் கவலைப்படத் தேவையுமில்லை. ஒருவேளை கணிப்புகளின்படி ஜூன் மாதம் நான்காவது அலை வந்தாலும், அதிலிருந்து உங்களைப் பாதுகாக்க பூஸ்டர் டோஸ் போதுமானதாக இருக்கும்.

வயதானவர்கள் மற்றும் எளிதில் தொற்று பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களுக்கு ஃப்ளூ காய்ச்சலுக்கான வருடாந்தர தடுப்பூசியைப் போலவே, கோவிட் தொற்றிலிருந்து காக்கவும் வருடந்தோறும் போடப்படும் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும்.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

அதுவரை வழக்கமான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே போதும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?