Published:Updated:

கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா? #DoubtOfCommonman

வௌவால்
News
வௌவால்

``விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கொரோனா வைரஸ் வகைகள் இதுவரை மட்டும் 5-6 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வகைதான் மிகவும் ஆபத்தான வைரஸ் வகையாகும்."

Published:Updated:

கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா? #DoubtOfCommonman

``விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கொரோனா வைரஸ் வகைகள் இதுவரை மட்டும் 5-6 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வகைதான் மிகவும் ஆபத்தான வைரஸ் வகையாகும்."

வௌவால்
News
வௌவால்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே உண்மையா?" என்ற கேள்வியைக் கேட்டிருந்தார் விகடன் வாசகர். அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

``கொரோனா பாதிப்பு காரணமாக பல நாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மக்களிடையே கொரோனாவைப் பற்றிய பல கேள்விகளும் குழப்பங்களும் இருக்கின்றன. கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்தும் பாம்புகளில் இருந்தும் மனிதனுக்குப் பரவியதாகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது. அது உண்மையா?'' என்று வாசகர் கார்த்திக் #DoubtOfCommonMan பகுதியில், கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் கேள்விக்கான பதிலை, பிரபல மருத்துவர் ஜீவானந்தத்திடம் கேட்டோம்.

கொரோனா
கொரோனா

``பொதுவாக வைரஸ்களில் D.N.A மற்றும் R.N.A இயல்பாகவே இருக்கும் அதன்மூலமாகத்தான் வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். ஆனால், இந்தக் கொரோனா வைரஸில் D.N.A கிடையாது. வெறும் R.N.A மட்டும்தான் இருக்கிறது. அந்த R.N.A ஒரு செல்லைத் தாக்கும்போது இந்த வைரஸ் மற்றவருக்குப் பரவுகிறது. இந்தக் கொரோனா வைரஸ் ஒருவர் உடலில் இருந்து அதிகபட்சம் 2, 3 நபருக்கு பரவும் அளவுக்கு வீரியமிக்கது. கொரோனாவில் பல வகைகள் இருந்தாலும் சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த `SARS CoV-2' வகை கிருமிதான் இருப்பதிலேயே அதிக வீரியம் கொண்டது. காற்றில் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஒன்றரை மீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

பொதுவாக, எல்லா விலங்குகளிலுமே ஒவ்வொரு வகை கொரோனா வைரஸ் இருக்கிறது. நாய், பூனை, குதிரை எனப் பல விலங்குகளிலும் கொரோனா வைரஸ் உள்ளது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கொரோனா வைரஸ் வகைகள் இதுவரை மட்டும் 5-6 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வகைதான் மிகவும் ஆபத்தான வைரஸ் வகையாகும். இதை `குறிப்பாக வௌவாலில் இருந்துதான் வந்தது. பாம்பில் இருந்துதான் வந்தது' என்று நம்மால் துல்லியமாக சொல்லிவிட முடியாது என்கின்றனர் நுண்ணுயிர் ஆய்வாளர்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனால், விலங்குகளில் இருந்து பரவியது மட்டும் உண்மை. இந்த கொரோனா விலங்குகளின் எச்சங்களில் இருந்தும் பரவியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கிருமி உருவாகி தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து 2, 3 மாதங்கள்கூட ஆகவில்லை. இது இந்தக் கிருமியின் ஆரம்ப நிலையாகதான் மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் குறுகிய காலகட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து நாம் இவ்வளவு கண்டுபிடித்திருப்பதே அதிகம் என்பேன். இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டபின் மட்டுமே நம்மால் இந்த வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவியது என்பதை மிகச் சரியாக சொல்ல முடியும்" என்றார்.

Doubt of a common man
Doubt of a common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!