Published:Updated:

Doctor Vikatan: மெனோபாஸ் வரப்போவதை ரத்தப் பரிசோதனையில் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா?

மெனோபாஸ்
News
மெனோபாஸ்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: மெனோபாஸ் வரப்போவதை ரத்தப் பரிசோதனையில் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மெனோபாஸ்
News
மெனோபாஸ்

என் வயது 50. பீரியட்ஸில் பிரச்னைகள் உள்ளன. மெனோபாஸ் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். என் அம்மாவுக்கு 35 வயதிலேயே கர்ப்பப்பை அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் அவரின் மெனோபாஸ் வயது தெரியாது. எனக்கு மெனோபாஸ் எவ்வளவு சீக்கிரம் வரும் என்பதை ஹார்மோன் அளவுகளுக்கான ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள். அது என்ன டெஸ்ட்? அது துல்லியமானதா, பீரியட்ஸ் ஆன எத்தனை நாளில் எந்த வேளையில் செய்ய வேண்டும்?

மெனோபாஸ்
மெனோபாஸ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா.

``மெனோபாஸ் நிலையை அடைவதற்கு முன் பீரியட்ஸ் முறைதவறிப் போவது இயல்பானதுதான். ஆனால், முறையற்ற அந்தச் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பீரியட்ஸ் நாள் தள்ளித்தள்ளிப் போனாலோ, ப்ளீடிங் குறைந்துகொண்டே வந்தாலோ அது நார்மலானது. அதுவே, அடிக்கடி பீரியட்ஸ் வருகிறது, முன்பு இருந்ததைவிடவும் ப்ளீடிங் அதிகமாக இருக்கிறது, கட்டிக்கட்டியாக வெளியேறுகிறது என்றால் அது அசாதாரண நிலை. இந்த அசாதாரண நிலை இருந்தால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து காரணங்களைத் தெரிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

டெல்பின் சுப்ரியா
டெல்பின் சுப்ரியா

பீரியட்ஸ் நிற்கத் தொடங்கும்போது அல்லது நின்றவுடன் ஹார்மோன் டெஸ்ட் செய்து பார்த்து அது மெனோபாஸ்தானா என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடியும். அந்த ஹார்மோனின் பெயர் எஃப்.எஸ்.ஹெச் ( FSH ). ஆனால், அந்த ஹார்மோன் டெஸ்ட், மெனோபாஸ் நிற்கப்போவதை அல்லது நின்றுவிட்டதை 100 சதவிகிதம் துல்லியமாகவெல்லாம் சொல்லாது. அந்த அளவுக்கு அது நம்பகமானதும் இல்லை.

எஃப்.எஸ்.ஹெச் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்து, அதன்பிறகும் பீரியட்ஸ் தொடர்வதாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதே போல அது அளவில் மாறாமல் அப்படியே இருந்தும் மெனோபாஸ் கட்டத்தை அடைந்தவர்களும் இருக்கிறார்கள். பீரியட்ஸ் நின்றதும் அடுத்த ஒரு வருடத்துக்கு பீரியட்ஸ் வராமலிருந்தால் மட்டும்தான் அதை நாம் மெனோபாஸ் என்று சொல்ல முடியும். எனவே, டெஸ்ட்டுகளை 100 சதவிகிதம் நம்பி எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.