இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

குட்டி பக்கெட்!

குட்டி பக்கெட்!

குட்டி பக்கெட்!

குட்டி பக்கெட்!

தேவை: பேப்பர் கப், மெலிதான கம்பி, சார்ட் துண்டுகள் 2.

1&2. பேப்பர் கப்பின் இரண்டு பக்கங்களிலும்  கைப்பிடிக்கான காதுகளை சார்ட் துண்டுகளில் செய்து ஒட்டவும். கம்பியை வளைத்து, காதுகளுக்குள் பொருத்தவும்.
3. ரப்பர் பேண்ட், சேஃப்டி பின் போன்ற எடை குறைவான பொருட்களைப் போட்டு, வேடிக்கையாகத் தூக்கிச்செல்ல குட்டி பக்கெட் ரெடி!  

உணவு உண்ணும் கோழிகள்!

குட்டி பக்கெட்!

தேவை: நான்கு ஸ்ட்ரா துண்டுகள், மெல்லிய கட்டுக் கம்பி, ஊசி, படம் வரைய சார்ட்.

1. ஸ்ட்ராக்களை சட்டம் (frame) போல வைத்து, நான்கு இணைப்பு மையங்களிலும் துளையிட்டு, கம்பியால் கோத்து, முடுக்கவும்.
2. ஒரு சார்ட்டில், இரண்டு கோழிகள் மற்றும்  உணவுக் கிண்ணத்தை வரையவும்.
3. படத்தில் காட்டியபடி, ஸ்ட்ராக்களின் மேல் முனைகளில், கோழியின் கால்களை நுழைத்து, ஒட்டவும். உணவுக் கிண்ணத்தை இரண்டு கோழிகளுக்கு நடுவில் ஒட்டவும்.
4. இரண்டு ஸ்ட்ராக்களின் வலது பக்கங்களை, மாறி மாறி மெதுவாக இழுத்தால், கோழிகள், கிண்ணத்தில் உணவு உண்பது போல இருக்கும்.

பந்துப் பூச்சி!

குட்டி பக்கெட்!

தேவை: தலைக்கு அணியும் (ஹேர்)கிளிப், பிளாஸ்டிக் பந்து, கூக்ளி ஐ 2.

1. ஹேர் கிளிப்பின் மீது பிளாஸ்டிக் பந்து ஒன்றைப் பாதியாக வெட்டி ஒட்டவும். பந்தின் இரண்டு பக்கங்களையும் மெலிதாக வெட்டி, பூச்சியின் மீசையாக மாற்றவும்.
2. கூக்ளி கண்களை மீசைக்கு மேலே ஒட்டவும்.
அட்டகாசமான பந்துப் பூச்சி ரெடி!