இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

பல்புக்குள் பட்டாம்பூச்சி!

பல்புக்குள் பட்டாம்பூச்சி!

தேவை: பல்பு, பாட்டிலின் கழுத்துப் பகுதி, பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி, பல்குச்சி, மணிகள், பிளாஸ்டிக் க்ளே.

பல்புக்குள் பட்டாம்பூச்சி!


1. பல்பின் மேல் பாகம் மற்றும் பாட்டிலின் கழுத்துப் பகுதி (இவை இரண்டையும் பெரியவர்களை வெட்டித் தரச் சொல்லி வாங்கவும்).
2. பல்பின் விளிம்பில் பசையைத் தடவவும்.
3. பாட்டிலின் கழுத்து விளிம்பில் பசையைத் தடவவும்.
4. பல்பையும் பாட்டில் கழுத்தையும் சேர்த்து ஒட்டவும்.
5. பிளாஸ்டிக் பட்டாம்பூச்சியை பல்குச்சியுடன் சேர்த்து ஒட்டவும்.
6. பட்டாம்பூச்சி இருக்கும் பல்குச்சியை பிளாஸ்டிக் க்ளேவில் செருகி வைக்கவும்.
7. பாட்டில் மூடியைத் திறந்து, பட்டாம்பூச்சியை மடித்து, பல்பினுள் நுழைத்துச் செருகவும்.
8. பல்பினுள் பட்டாம்பூச்சியை நுழைத்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும்.
9. பாட்டில் மூடியால் பல்பை மூடவும்.
10. பாட்டிலுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி ரெடி!

பேனா ஸ்டேண்டு!

தேவை: ஸ்ட்ராக்கள், பல்குச்சி, மணிகள், சிறிய அட்டை.

பல்புக்குள் பட்டாம்பூச்சி!

1. எல்லா ஸ்ட்ராக் களையும் ஒரே அளவில் வெட்டவும். அவற்றின் இரண்டு முனைகளிலும் ஒரே இடத்தில் ஊசியால் துளை போடவும். பல்குச்சிகளை நிற்கவைத்து, அதில் ஸ்ட்ராக்களை சட்ட வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும்.

2. பல் குச்சி + ஸ்ட்ரா செட் அப்பை தலைகீழாகத் திருப்பி, சிறிய அட்டையில் செருகி நிறுத்தவும்.

3. பேனா ஸ்டேண்டு ரெடி!