இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட்!

ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட்!

தேவை: இரண்டு திருகாணிகள் திருகப்பட்ட பலகை, (கை விரல்களையும் பயன்படுத்தலாம்.) லூம் ரப்பர் பேண்டுகள், லூம் ஊசி ஹூக், S வடிவ ஹூக்.

1. இரண்டு திருகாணிகளிலும் சிவப்பு நிற ரப்பர் பேண்டை 8 வடிவில் செருகவும். (உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வண்ணங்களைத் தேர்வுசெய்யலாம்).

2. அடுத்து, பச்சை நிற பேண்டு, அடுத்து ஊதா நிற பேண்டு என படத்தில் உள்ளது போல மாட்டவும்.

3. ஊசி ஊக்கினால், அடியில் இருக்கும் சிவப்பு பேண்டை ஒரு பக்கமாக மேலே இழுத்துவிடவும்.

4. அடுத்த பக்கத்தில் இருந்தும் சிவப்பு பேண்டை எடுத்து மேலே விடவும்.

ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட்!

5. S வடிவ ஹூக்குடன் சிவப்பு பேண்டை மட்டும் கோக்கவும்.

6. திருகாணிகள் மீது இப்போது மஞ்சள் பேண்டை மாட்டவும்.

7. திருகாணியின் அடியில் இருக்கும் பச்சை நிற பேண்டை, இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக, மேலே இழுத்துவிடவும்.

8. அடுத்து, S வடிவ ஹூக்கை இழுக்கவும்.

9. மீண்டும் சிவப்பு நிற பேண்டைத் திருகாணிகளின் மீது மாட்டவும்.

10. இப்போது, ஊதா நிற பேண்டை மேலே இழுக்கவும்.

ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட்!

11. இதே மாதிரி, தேவையான நீளத்துக்கு ரப்பர் பேண்டுகளைச் சேர்த்துக்கொண்டே வரவும்.

12. S டைப் ஹூக் உடன் எதிர் முனை பேண்டு பின்னலைக் கோத்தால், அழகிய ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட் ரெடி!

ஐஸ் ஸ்டிக் மௌத் ஆர்கன்!

தேவை: ஐஸ்குச்சிகள் இரண்டு, அட்டைத் துண்டு, ரப்பர் பேண்டுகள், தீக்குச்சிகள்.

ஃப்ரெண்ட்ஷிப் பிரேஸ்லெட்!

1. ஒரு ஐஸ்குச்சியை அடியில் வைத்து, அதன் மீது அட்டைத் துண்டை வைக்கவும்.
2. அட்டைத் துண்டின் இரண்டு ஓரங்களிலும் தீக்குச்சிகளை வைக்கவும்.
3. இரண்டு ஐஸ்குச்சிகளின் இரண்டு ஓரங்களிலும் ரப்பர் பேண்ட் போடவும்.
4. ஐஸ் ஸ்டிக் மௌத் ஆர்கன் ரெடி!