ஃபேஸ் ஆஃப் பேப்பர் கப்ஸ்!
தேவை: பேப்பர் கப்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், கத்தரிக்கோல்.
1. பேப்பர் கப்பின் வெளிப்புறத்தில் பெண்ணின் முகம், கண் மற்றும் வாய்ப் பகுதிகளின் அவுட்லைன் வரைந்துகொள்ளவும்.
2. தலைமுடி மற்றும் காதுகளுக்கு வண்ணம் தீட்டிக்கொள்ளவும்.

3. அவுட்லைனில் இருக்கும் கண் மற்றும் வாய்ப் பகுதியை மட்டும்வெட்டி எடுத்துவிடவும். பேப்பர் கப்பில், பெண் முகம் வரையப்பட்டு இருக்கும் பகுதிக்கு நேர் எதிரே, ஆண் முகத்தையும் வரைந்து, கண் மற்றும் வாய்ப் பகுதியை வெட்டி எடுக்கவும்.
4. முதல் பேப்பர் கப் இப்படி வெட்டப்பட்டு இருக்கும்.
5. இன்னொரு பேப்பர் கப்பில் (இது உட்புறமாக வைக்கப்படவேண்டிய கப்) மகிழ்ச்சி, சோகம், கோபம் என வெவ்வேறு முக பாவனைகளை வரைந்து கொள்ளவும். (கண்கள் மற்றும் வாய்ப் பகுதி வெட்டப்பட்டு இருக்கும் இடத்துக்கு சரியான உயரத்தில், இந்தக் கப்பிலும் படங்கள் வரைய வேண்டும்). உள்ளே வர வேண்டிய முகபாவனைகளுடன் கூடிய கப், வெளியே இருக்கவேண்டிய கண்கள் மற்றும் வாய்ப் பகுதி வெட்டப்பட்டிருக்கும் கப் ரெடி.

6. பாவனைகள் வரைந்திருக்கும் கப்பை, முகம் வரைந்திருக்கும் கப்பின் உள்ளே பொருத்தவும்.
7. சிரிக்கும் பெண் முகம் தெரியும்.
8. உள் கப்பைச் சுழற்றச் சுழற்ற வெளியே இருக்கும் மகிழ்ச்சி, கோபம், சோகம் என முகத்தின் பாவனைகள் மாறிக்கொண்டே வரும்.