ஸ்ட்ரா பூக்கள்!
தேவை: வளைக்கக்கூடிய ஸ்ட்ராக்கள், கத்தரிக்கோல், செலஃபன் டேப், மெலிதான குச்சி.

1. ஸ்ட்ராக்களில் இருக்கும் வளைக்கக்கூடிய பகுதிகளைத் தனியாக வெட்டி எடுக்கவும்.
2,3. அவற்றை நேராக்கி, இயன்ற வரை இழுத்து நீட்டிக்கொள்ளவும்.
4,5. நீண்டு இருக்கும் வளைய ஸ்ட்ராத் துண்டுகளைச் சரிபாதியாக வெட்டவும். ஸ்ட்ரா குழாயின் உள் பகுதியில் கத்தரியை நுழைத்து, நீளவாக்கில் வெட்டவும்.
6,7 . ஸ்ட்ரா துண்டை தட்டையாக மடிக்கவும். அடுத்து அதைச் சரிபாதியாக மடிக்கவும்.
7. மடித்திருக்கும் ஸ்ட்ரா துண்டை இலை வடிவில் வெட்டவும்.

8. வெட்டப்பட்ட ஸ்ட்ரா துண்டுகள், இலை வடிவில் அழகாக இருக்கும். அதன் மடிப்புகள் இலையின் நரம்புகளாக இருக்கும்.
9. இலைகளை தேவையான எண்ணிக்கையில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
10.ப்ளைனாக இருக்கும் ஸ்ட்ரா துண்டுகளை, ஓலை வடிவில் ஸ்ட்ரா வெட்டிக்கொள்ளவும்.
11. குச்சியின் மேல் முனையில், நான்கு பக்கங்களிலும் ஓலை வடிவத் துண்டுகளை வைத்து டேப்பால் ஒட்டவும்.
12. குச்சியில், ஓலைக்குக் கீழே இலைகளை வைத்து ஒட்டவும்.
அழகான ஸ்ட்ரா பூக்கள் ரெடி!