இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

காகிதச் செடிகள்!

காகிதச் செடிகள்!

தேவை: வண்ணக் காகிதப் பட்டைகள், செலஃபன் டேப், ரப்பர் பேண்டு, மெலிதான ஸ்ட்ராக்கள், சிங்கிள் பன்ச்சிங் மெஷின், பேப்பர் கப், கோலி உருண்டைகள்.

காகிதச் செடிகள்!

1. வண்ணக் காகிதங்கள் எல்லாவற்றையும் விசிறி  மடிப்பாக  மடித்துக்கொள்ளவும்.

2. விசிறி மடிப்பை அப்படியே அழுத்தி, கைகளால் பிடித்துக்கொள்ளவும்.

3. மடித்துள்ள காகிதத்தை சிங்கிள் பன்ச்சிங் மெஷினால் துளை போடவும்.

4. மடித்து அழுத்தி இருக்கும் காகித மடிப்பை, ஸ்ட்ராவின் நீளத்துக்கு இழுத்துவிடவும்.

5. ஸ்ட்ராக்களில் காகிதப் பட்டையில் இருக்கும் துளை வழியாக ஸ்ட்ராக்களில் கோத்துவிடவும்.

6. எல்லா ஸ்ட்ராக்களிலும் இதேபோல செய்யவும்.

7. ஒரு பேப்பர் கப்பில், கோலி உருண்டைகளைப் போட்டு, ஸ்டேண்டு செய்து கொள்ளவும். ஸ்ட்ராக்களை பேப்பர் கப் ஸ்டேண்டில் செருகிவிடவும்.

வண்ணக் காகிதச் செடிகள் ரெடி!