இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

“வருங்கால மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா ஆவதற்கான முதல் படியாக, இந்த ஜிம் வாசலில் இருக்கும் படியில் கால் வைப்போம்” என ஜாலியாகஉள்ளே நுழைந்தார்கள் அந்த பாய்ஸ்.

ஈரோட்டில் உள்ள நீல்கிரிஸ் (Nilgiris) உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த பயிற்சியாளர் தங்கராசு என்பவரிடம், ‘‘அங்கிள் நாங்களும், இந்த தம்புல்ஸ்ஸை எடுக்கலாமா?” எனக் கேட்டான் நிகில்.

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

‘‘நான் 10 வருடமா உடற்பயிற்சி செய்றேன். பல போட்டிகளில் கலந்துக்கிட்டு இருக்கேன். நான் பயன்படுத்துறது ரொம்ப வெயிட்டான தம்புல்ஸ். இதை நீங்க பயன்படுத்தக் கூடாது. ஒருத்தரோட உடல் எடையைத் தாங்கக்கூடிய அளவுலதான், உபகரணங்களைப் பயன்படுத்தணும். அதுவும் முறையான பயிற்சியாளர் மூலம்தான் செய்யணும்” என்றார் தங்கராசு.

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

அந்த உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் செந்தில் வேலன், “நீங்க ஓடி ஆடி விளையாடுறதே நல்ல உடற்பயிற்சிதான். இந்த வயசில் அதைச் செய்தாலே போதும்.    சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தினமும் சாப்பிடணும். 14 வயசுக்கு அப்புறமா, பயிற்சியாளரிடம் ஆலோசனை செய்து, வீட்டில் இருந்தபடியே தண்டால் எடுங்க. தண்டால் செய்யும்போது, கைகள் உடலோடு சேர்ந்த நிலையில் இருக்கணும். வெளியே விரிந்த நிலையில் இருக்கக் கூடாது” என்றவர், தண்டாலை எப்படி எடுக்க வேண்டும் என செய்து காட்டினார்.

வீட்டில் இருந்தே செய்யக்கூடிய, ரொம்பவே எளிமையான, சிறந்த உடற்பயிற்சி, ஸ்கிப்பிங். அதை யார் வேண்டுமானாலும்  செய்யலாம்.

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

‘‘சரியான எடை, ஆரோக்கியமான உடல், இதெல்லாம் வந்த பிறகு ஜிம்மில் பின்னி எடுக்கலாம். எலாஸ்டிக் ரப்பரைப் போல இருக்கும் ரெசிஸ்டென்ஸ் பேண்ட் (Resistance band), தெரா பேண்ட் (Thera band) ஆகியவற்றை ஆரம்ப கால பயிற்சியாகப் பயன்படுத்தலாம். கால்கள் மற்றும் தசைகள் வலிமையுடன் இருக்க உதவும். இதில், லைட், மீடியம், ஹெவி என மூன்று வகைகள் இருக்கும். உடல் எடை மற்றும் வலிமைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். இப்போ, பல வீடுகளில், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன் ஷாப்பிங் மூலம், ஜிம் பை-சைக்கிளை வாங்கறாங்க. சிறுவர்களுக்கு அதைக் கொடுத்து பயன்படுத்துறாங்க. இது, ரொம்பவே தப்பு. இந்த சைக்கிள்களில் மினிமம், மேக்ஸிமம் என வேகத்திறன் இருக்கும். இது தெரியாமல் பயன்படுத்தினால், சில நாட்களில் காலில் வலி உண்டாக்கி, பிரச்னையை விலை கொடுத்து வாங்கின மாதிரி ஆகிடும்” என்றார் தங்கராசு.

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

அங்கே இருந்த ஜிம் சைக்கிளில் ஏறி, ‘‘சும்மா ஒரு போஸ்தான், போட்டோ எடுங்க அங்கிள்” என்றான் அஷ்வந்த்.

சம்மருக்கு ஒதுங்கிய ஜிம் பாய்ஸ்!

அடுத்து, சிறிய தம்புல்ஸ்களைக் கொடுத்து பயிற்சி எடுக்கக் கற்றுத்தந்த தங்கராசு, ‘‘சிறுவர்களான நீங்கள் 1 முதல் 3 கிலோ வரையிலான எடை உள்ள தம்புல்ஸைப் பயன்படுத்தலாம். அதற்கு மேலான எடை கூடவே கூடாது. குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓய்வு எடுக்கணும். பெரியவர்களாகவே இருந்தாலும் பயிற்சியாளர் இல்லாமல் ஜிம்மில் எந்தக் கருவியையும் பயன்படுத்தக் கூடாது. மொத்தத்தில், உடற்பயிற்சி செய்றது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம், எந்த வயசில் செய்யலாம் எனபது. இல்லைனா உடல் வலி, தசைப்பிடிப்பு என அவஸ்தைதான் மிஞ்சும்” என்றார் செந்தில் வேலன்.

‘‘அதாவது, சிக்ஸ் பேக் வராது... சிக்கல் பேக் வரும்னு சொல்லுங்க” என்று சிரிப்புடன் சொன்னார்கள் நம்ம ஜிம் பாய்ஸ்.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்