ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி கிச்சன்!

சுட்டி கிச்சன்!

சுட்டி கிச்சன்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... சுறுசுறுப்போடு புதிய வகுப்புக்குப் போக ஆரம்பிச்சுட்டீங்களா... இந்தச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் வருஷம் முழுக்க தொடரணும்னா, நீங்கள் சாப்பிடும் உணவு, சுவையோடு சத்தும் சேர்ந்ததாக இருக்கணும். அதிகம் அடுப்பு பற்றவைக்கும் வேலை இல்லாமல், நீங்களே செய்யும் எளிமையான மற்றும் சத்தான ரெசிப்பிகளை ஒவ்வொரு இதழிலும் பார்க்கலாம். உங்க பெற்றோர், நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு செய்துகொடுத்து, நீங்களும் சமையலில் சூப்பர் ஸ்டார்னு நிரூபிக்கலாம். ஆர் யூ ரெடி?

மசாலா மூங்தால்!

தேவையானவை:

பச்சைப்பயறு - ஒரு கப், வெள்ளரிக்காய்-அரை, பெங்களூர் தக்காளி - அரை, பெரிய வெங்காயம் - அரை, கேரட்- 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

சுட்டி கிச்சன்!

செய்முறை:

பச்சைப்பயற்றை சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து  தண்ணீரை வடித்து, துணியில் கட்டிவைக்கவும். அல்லது கிண்ணத்தில் போட்டு மூடிவைக்கவும், அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப்பயறு முளைக்கட்டிவிடும்.

முளைக்கட்டிய பயற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, உப்பு சேர்க்கவும்.

அம்மாவிடம் சொல்லி, வெள்ளரி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சின்னத் துண்டுகளாக வெட்டித் தரச் சொல்லவும். கேரட்டை சீவலாகத் துருவிக்கொள்ளவும். காய்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பயற்றுடன் சேர்த்துக் கலக்கவும்.

அவ்வளவுதான், சுவையான மசாலா மூங்தால் தயார்.

சுட்டி கிச்சன்!

கவனம்:

பச்சைப்பயற்றை வறுத்துவிட்டால் முளை கட்டாது.

பயற்றின் முளை சிறிதாக இருக்கும்போதே, தயார்செய்து சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

பச்சை மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு செய்தால், காரம் குறைவாக இருக்கும். அல்லது பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகுத்தூள் சேர்க்கலாம். 

பயன்கள்!

பச்சைப்பயற்றில் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக, முளைக்கட்டிய பயற்றில், விட்டமின் ‘சி’ நிறைந்திருக்கும்.

பிரியா பாஸ்கர்

பா.காளிமுத்து