ஒரு தேதி...ஒரு சேதி!
தினம் ஒரு தகவல் கேட்டு, குறிப்புகள் எடுத்துக்கொண்டால், 30 நாட்களில் ஒரு நூலைப் படித்ததற்குச் சமம். எனவே, தினம் ஒரு தேதியில்... ஒரு சேதி கேட்கத் தவறாதீர்!

எம்.ஆர்.ராதா: எழுத, படிக்கத் தெரியாத ஒருவர், தம் நடிப்பால் பலரின் சமூகச் சிந்தனைகளைத் தூண்டினார் என்றால், ஆச்சர்யமான விஷயம் அல்லவா? பெரியாரின் கருத்துக்களை தான் நடித்த நாடகம், திரைப்படம் வழியே மக்களிடையே கொண்டுசேர்த்தவர். ‘பொருட்கள், மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, ஆடம்பரத்தைக் காட்டுவதாக இருக்கக் கூடாது’ என்றவர். தன்னிடம் இருந்த இம்பாலா காரில், வைக்கோல் ஏற்றி அனுப்பியவர். அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!
பில் கேட்ஸ்: கம்ப்யூட்டர் என்றால், இவரின் பெயரே நினைவுக்கு வரும் அளவுக்கு பிரபலமானவர்.

பள்ளியில் படிக்கும்போதே, கம்ப்யூட்டர் மீது ஆர்வம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, வழக்குரைஞராக ஆக வேண்டும் என நினைத்தார். அங்கு அவருக்குக் கிடைத்த பால் ஆலனின் நட்பு, அவரின் பாதையை மீண்டும் கம்ப்யூட்டர் பக்கம் திருப்பியது. சேவை மனப்பான்மை கொண்டவர். இவருடைய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய், போலியோ போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செலவிடும் இவரைப் பற்றி இன்னும் அறிந்துகொள்வோமா?

இந்திரா காந்தி: பெண்கள் அரசியலில் சாதிக்க முடியுமா? எனும் சந்தேகத்தை உடைத்து, இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. இவரின் தந்தை ஜவஹர்லால் நேரு இவருக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை. அந்தக் கடிதங்கள் வழியே பல்வேறு கருத்துக்களைக் கற்றுக்கொண்டார். இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, பல விமர்சனங்கள் கூறப்பட்டாலும், துணிச்சலோடு முடிவுகளை எடுத்தவர்.
இந்தத் துணிச்சல் நாயகியின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோமா?