மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி கிச்சன்!

சுட்டி கிச்சன்!

சுட்டி கிச்சன்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நாம் சாப்பிடும் உணவின் சுவை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சத்தும்

சுட்டி கிச்சன்!

முக்கியம். அடிப்படை உணவு மட்டும் இல்லாமல், கொறிக்கும், குடிக்கும் உணவுகளும் ஆரோக்கியமாக இருக்கணும். அவற்றை நாமே செய்தால், சுவையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். வாங்க சமைப்போம்... சுவைப்போம்!

தேவை: புளிப்பு இல்லாத தயிர் - 100 மில்லி, மாதுளம் பழ முத்துக்கள் - ஒரு மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு மேஜைக்கரண்டி, உலர்ந்த திராட்சை - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், பாதாம் - 2, முந்திரி - 2

செய்முறை: தயிரை நன்றாக பீட்டரில் அடித்துக்கொள்ளவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய ஆப்பிளைச் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சையைச் சேர்க்கவும். இறுதியாக, தேனைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். சுவையான ஃப்ரூட் லஸ்ஸி ரெடி.

சுட்டி கிச்சன்!

குறிப்பு: ஃப்ரூட் லஸ்ஸி தயாரிக்கும்போது உப்பு சேர்க்க வேண்டாம். பாலைவிட தயிரில்தான் நோய் எதிர்ப்புசக்தி அதிகம். அதிக புரோட்டீன் தயிரில் உள்ளது.  தயிரை மிக்ஸியில் கடைவதைவிட, மத்தினால் கடைந்தால் சுவையாக இருக்கும்.

- பிரியா பாஸ்கர் படங்கள்: பா.காளிமுத்து

மாடல்: ஜோஷிதா