மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மூதாதையர் கண்டுபிடிப்பு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகருக்கு அருகில், குகை ஒன்றில் அகழ்வாராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு முந்தைய மூதாதையர்களைக் குறிப்பிடும் ‘நலெடி’ (Naledi) என்ற மனிதனைப் போன்ற உயிரினத்தின் படிமங்களைக் கண்டுபிடித்து, அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இது, மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கனவு கார்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஜப்பானில், உலகக் கனவு கார் ஓவியப் போட்டி, 7 முதல் 15 வயது வரை உள்ள சுட்டிகளுக்கு நடத்தப்பட்டது. இதில், 80 நாடுகளிலிருந்து 8 லட்சம் சுட்டிகள் பங்கேற்றனர். வருங்காலத்தில், தங்களுடைய கார் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக வரைந்தார்கள். எரிபொருள் இல்லாமல் சோலாரில் இயங்கும் கார்கள், பறக்கும் கார்கள் என, நவீன கற்பனை கார் ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மிகவும் சிறப்பாக வரைந்த குழந்தைகளுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிப் பரிசுகளும், ஜப்பானை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

பா.பவன் சுப்பு
பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல், திருவான்மியூர், சென்னை-41

சால்ட் லைட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உப்பு நீரில் எரியும் புதிய விளக்கைக் கண்டுபிடித்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது

சுட்டி ஸ்டார் நியூஸ்!

  பிலிப்பைன்ஸ். அங்கே,  பெரும்பாலான தீவுகளில் மின் வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கும், மெழுகுவத்தியுமே   பயன்படுத்துவதால்,  செலவு அதிகம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், புதிய ‘சால்ட் விளக்கை’க் கண்டுபிடித்துள்ளனர். இதில், யு.எஸ்.பி கேபிள் மூலம், ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றுக்கும் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த விளக்கு, 2016-ல் விற்பனைக்கு வரும்.

காந்தமலைச் சவாரி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பெட்ரோல் இல்லாமல் பைக்  மற்றும் கார்களை ஹாயாக ஓட்ட வேண்டுமா? ஜம்மு காஷ்மீரின் லடாக் மாவட்டத் தலைநகரான ‘லே’ அருகே அமைந்துள்ளது ‘மேக்னடிக் ஹில்’ எனப்படும் காந்தமலைப் பகுதி.   இங்கே, செல்லும் வாகனங்கள்  இன்ஜின்களை நிறுத்திவிட்டாலும், மலையில் உள்ள காந்த விசை

சுட்டி ஸ்டார் நியூஸ்!

காரணமாகத் தானாக நகரும். இந்த காந்தமலைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து இழுக்கிறது.

சிரிக்கும் பறவை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மனிதர்கள் போலவே சிரிக்கும் பறவைகள் இருக்கின்றன என்றால் நம்புவீர்களா? ஆஸ்திரேலியாவில் வாழும் ‘குக்கூபரா’ என்ற இந்தப் பறவைகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால், கூட்டம் கூட்டமாக அமர்ந்து குரல் எழுப்பும். அது மனிதர்கள் சிரிப்பது போலவே இருக்கும். மனிதர்களில் ஆண், பெண் சிரிப்பு

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வித்தியாசம் போலவே இவற்றுக்கும் இருக்கும் என்பது  மேலும் ஆச்சர்யம்.

ரிசர்வ் வங்கி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நாட்டின் பணப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, ரிசர்வ் வங்கி பணத்தாள்களில் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இதன்படி, 100 ரூபாயில் முக்கோணம், 500 ரூபாயில் வட்டம், 1,000 ரூபாயில் டைமண்ட் (Diamond) குறியீடுகள் ரூபாய்த் தாளின் இருபுற ஓரங்களிலும் இருக்கும். அதன் நம்பர், சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக இடமிருந்து வலமாக அமைக்கப்பட்டுள்ளது. பார்வைத்திறன்  குறைபாடு

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உடையவர்கள் எளிதில் அடையாளம் காண்பதற்கும், கள்ள நோட்டுக்கள் வராது தடுக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.