தோட்டம் அமைப்போம்
தோட்டம் வளர்ப்பதும் பராமரிப்பதும் இயற்கையோடு நம்மை நெருங்கச் செய்யும் சிறந்த பொழுதுபோக்கு. தோட்டம் அமைக்க இரு வகை வழிமுறைகளைக் கையாளலாம்.

முதலில், உங்கள் வீட்டைச் சுற்றிலும் அதிகமான இடம் இருந்தால், பெரிய தோட்டம் அமைக்கலாம். இடம் இல்லாதபோது, தொட்டிச் செடிகளை வளர்க்கலாம்.
உங்கள் பகுதியில் நன்றாக வளரக்கூடிய தாவரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடர்த்தியாக வளரும் தாவரங்களை, சரியான இடைவெளியில் அமைப்பது, பூ வகைத் தாவரங்களை வளர்ப்பதா, காய்கறிகள், பழச் செடிகளை வளர்ப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். படரும் தாவரங்களை வளர்ப்பதாக இருந்தால், அதன் அருகில் வலுவான மரங்களை ஊன்றுவது அவசியம்.
தோட்டக்கலை வளர்ப்பு முறைகளைப் படிப்பதில் இருந்து இந்தப் பொழுதுபோக்கைத் தொடரலாம். பின்னர், விதைகளை விதைப்பது, செடிகளைப் பதியன் இடுவது, தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுவது, சரியான இடைவெளியில் பாத்தி அமைப்பது, களைச் செடிகளை அகற்றுவது ஆகியவற்றைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ளுங்கள். வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையில் செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது.
பெரிய தோட்டம் அமைக்க இடம் இல்லாதபோது, பால்கனி, ஜன்னல் பகுதிகளில் தொட்டிச் செடிகளை அமைக்கலாம். தற்போது மொட்டைமாடியில் தோட்டம் அமைப்பது பிரபலமாகி வருகிறது. நமக்குத் தேவையான மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை நாமே உருவாக்கும்பொது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
- இனியன்