மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உறுதிமொழி

உறுதிமொழி

லியாண்டர் அட்ரியன் பயஸ்... 42 வயதிலும் கலக்கும் டென்னிஸ் புயல்.இவர் சொன்ன சுறுசுறு வரிகள் இவை...

உறுதிமொழி

•  இலக்குகள், அழுத்தங்கள் எனக்கு இல்லை. இந்தக் கணத்தில் செய்வதை நேசித்துச் செய்கிறேன்.

•  ஒன்றை செய்யக் காரணம், முனைப்பு ஆகியவை இருக்கும் என்றால், நாம் பொதுவாக அதில்  வெற்றிபெறுவோம்.

•  இந்தியாவுக்காக ஆடுகிறேன் என்பது கிளர்ச்சி தந்து வெல்லத் தூண்டுகிறது. ரசிகர்கள் அனைவரின் கையிலும் வெற்றிக் கோப்பையைத் தரவே ஆசை.

உறுதிமொழி

•  தோற்றால் கோபம், மனத்தளர்ச்சி வேண்டாம். உங்கள் மட்டையைக் கம்பீரமாகப் பேச விடுங்கள்.

•  வயது, ஓர் எண் மட்டுமே. நான் ஆட ஆரம்பித்தபோது, கனவுகளை மட்டுமே  துரத்தினேன். மற்றவை தானே நடந்தன.

•  உடலை கட்டுக்குள் வைத்திருப்பதே இத்தனை காலம் ஆடுவதன் காரணம். தீவிரப் பயிற்சி, சீரான உணவு, வாழ்க்கை முறையே வெற்றியின் ரகசியம்.

உறுதிமொழி

•  104 டிகிரி காய்ச்சல், மூளைக்கட்டி தந்த வேதனையை, விம்பிள்டன் என்கிற உன்னதத்தை அடையப்போகிறேன் என்பது தூரத்தள்ளி உத்வேகம் தந்தது.

•  சிறுவனாக இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் 10,000 முறை ஸ்கிப்பிங் செய்து, குதிகால் எலும்புகள் உடைந்தன. இன்றும் பயிற்சி செய்வதைத் தீவிரப்படுத்திதான் இருக்கிறேன்.

உறுதிமொழி

•  வாழ்க்கை, பல கணங்களில் டென்னிஸ் போலத்தான். இலக்குகளை ஓரமாக வைத்துவிட்டுக் கையில் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

•  ஒவ்வோர் இளம் இந்தியக் குழந்தையும் தன் கனவுகளோடு வாழ வேண்டும். மகத்தான மாற்றங்கள் நிச்சயமாக நிகழும்.

- பூ.கொ.சரவணன் ஓவியம்: பாரதிராஜா