மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

 மாயா டீச்சர், தீபாவளிக்காக வீட்டை  வேக்குவம் க்ளீனரால் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம், சுட்டிகள்  வீட்டுக்குள் ஆஜர் ஆனார்கள்.

''டீச்சர், வேக்குவம் க்ளீனரைக் கண்டுபிடிச்சதால நமக்கு வேலை ஈஸியா இருக்குல்ல'' என்றான் பிரசன்னா.

''ஆமாம், முக்கியமா நாம் பெருக்கும் போது ஏற்படற தூசி மண்டலம் இதில் கிடையாது. சுற்றுச்சூழலுக்கும் நல்லது. நமக்கும் டஸ்ட் அலர்ஜி ஏற்படாது. அந்த விஷயத்துல இது, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேக்குவம் க்ளீனர் முதலில் தரை விரிப்புகளை சுத்தம் செய்வதற்குத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெயரே கார்ப்பெட் க்ளீனர்தான்'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
##~##

''டீச்சர், இதைக் கண்டுபிடிச்சது யாரு?'' என்றாள் மது.

''சொல்கிறேன்... அந்தக் காலத்தில் வீடு, பங்களா, அரண்மனை போன்ற இடங்களில் தரை விரிப்புகளைப் பயன்படுத்துவதை பெருமையான விஷயமாகக் கருதினார்கள். ஆனால், அந்தத் தரை விரிப்புகளை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அவற்றைச் சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு நிறைய செலவானது. கார்ப்பெட்களை சுத்தம் செய்வதற்கென்றே நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்தச் சமயத்தில்... ஒருநாள் தரை விரிப்புகளைச் சுத்தம் செய்யும் ஒருவர், நீண்ட குழாயினால் தரை விரிப்பை ஊதி, அதில் சேர்ந்திருக்கும் தூசியை நீக்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் தரை விரிப்பை ஊதுவதற்குப் பதில் உறிஞ்சிவிட்டாராம். எல்லா தூசியும் அவருடைய வாயினுள் புகுந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்துதான் இப்படி ஒரு வழி கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று பரவலாகச் சொல்கிறார்கள்.

இருப்பினும், அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால், நாம் ஸ்ட்ரா மூலம் பாட்டிலில் இருக்கும் பானத்தை எப்படி உறிஞ்சிக் குடிக்கிறோமோ... அந்த அடிப்படையில்தான் வேக்குவம் கிளீனர் தூசியை உறிஞ்சி எடுக்கிறது. வேக்குவம் க்ளீனரைப் பொறுத்தவரையில், காற்று ஒரு தொடர் விசையாகச் செயல்படுகிறது. பெர்னோலியின் விதி இதுதான். காற்றின் வேகத்தைப் பொறுத்து இது அமையும்!'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து...

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டேனியல் ஹெஸ் என்பவர், 1860-ல் தரை விரிப்புகளைச் சுத்தம் செய்யும் இயந்திரத்தை உருவாக்கினார். இது பெரும் விசையுடன் காற்றை ஊதுவதன் மூலம், படிந்திருக்கும் தூசியை நீக்கும். இதற்கான காப்புரிமையை ஜூலை 10, 1960-ல் பெற்றார்.

சுழற்காற்றின் அடிப்படையில் அமெரிக்காவின் மெக்கஃப்பே, 1868-ல் கையினால் இயக்கப்படும் வேக்குவம் க்ளீனரை உருவாக்கினார். இந்த இயந்திரத்தை அமெரிக்கன் கார்ப்பெட் க்ளீனிங் கோ என்ற நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தினார். அவற்றை, 25 டாலருக்கு விற்பனை செய்தார். அடுத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹூபெர்ட் சி பூத், மின்சாரத்தினால் இயக்கப்படும் வேக்குவம் க்ளீனரையும் உருவாக்கினார். அதில் இருந்து இப்போது வரை பலவகையான புதுப் புது வடிவங்களில் வேக்குவம் க்ளீனர் உருவாக்கப்பட்டு, இப்போதைய நவீன வடிவத்தை அடைந்துள்ளது.'' என்றார் டீச்சர்.  

''கணேஷ், நீ இன்னும் உன் சந்தேகத்தைக் கேட்க ஆரம்பிக்கலையே..?'' என்று அவனைத் தூண்டினாள் சரண்யா.

''ஆமாம் டீச்சர்...'' என்று ஆரம்பித்த கணேஷிடம், ''மிஷினுக்குள்ளே போய்ப் பார்த்தாகணும் உனக்கு அவ்வளவுதானே?'' என்றார் டீச்சர்.

கணேஷையும், மதுவையும் சின்னஞ் சிறிய தூசியைப் போல் ஆக்கிய மாயா டீச்சர், அவர்களை வேக்குவம் க்ளீனரின் உறிஞ்சுகுழலை இயக்கி, மிஷினுக்குள் இழுத்தார். 'ஓ...’வெனக் கத்தியபடியே தூசியோடு தூசியாக இருவரும் உள்ளே சென்றனர். மந்திரக் கம்பளத்தின் சக்தியால் அவர்களுக்கு தூசியால் பாதிப்பு ஏற்படவில்லை.

மாயா டீச்சர் வேக்குவம் க்ளீனரின் செயல்பாடுகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

''பொதுவாக வேக்குவம் க்ளீனரில் ஆறு முக்கியமான செயல்பாடுகள்,  தனித்தனிப் பகுதியாக இயந்திரத்தினுள் பிரிக்கப்பட்டு இருக்கிறது.'' என்றவர் தொடர்ந்து...

''இப்ப நம்ம கணேஷ§ம், மதுவும் முதல்ல தூசி உறிஞ்சப்படும் வாய்ப் பகுதில இருக்காங்க. இதில் உறிஞ்சப்படும் பகுதியில், சுத்தம் செய்யப்படும் இடத்துக்கு ஏற்றமாதிரி குழாயோ, பிரஷ்ஷ§டன் கூடிய உருளையோ அல்லது கம்பிகளாலான கை போன்ற அமைப்போ இருக்கும். உறிஞ்சுகுழலின் முனையில் இருக்கும் பிரஷ், தரை விரிப்பு, சோபா போன்றவற்றில் படிந்திருக்கும் தூசியைக் கிளறிவிடும். அதனால்... படிந்துள்ள தூசி, அழுக்குகள் மேலெழும்போது உறிஞ்சுகுழல் உறிவதற்கு எளிதாக இருக்கும். இப்படி உறிஞ்சப்பட்ட தூசி, அடுத்த பகுதியான வெளியேற்றும் பகுதிக்கு வரவேண்டும். இங்குள்ள மோட்டார் இயக்கப்படுவதால், உள்ளே இருக்கும் ஃபேன் சுழலத் தொடங்கும். இந்த ஃபேன் எக்ஸாஸ்ட் ஃபேன் போல செயல்பட்டு, உறிஞ்சு குழல் மூலம் சேர்ந்த தூசியை, மேலே சேமிப்புப் பகுதிக்கு அனுப்பும். வெளியே இருக்கும் காற்றின் அழுத்தத்தை விட, உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். அங்கே இருக்கும் மெல்லிய துணி அல்லது காகிதத்தால் ஆன வடிகட்டித் திரையினால், தூசியும் காற்றும் வடிகட்டப்படும். தவிரவும் இங்கு உராய்வு விசை ஏற்படுவதால், காற்று உள்ளே இழுக்கும் பொருட்கள் கனமான தூசி, மண்துகள்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று உரசியபடியே சென்று சேமிக்கும் பையில் சேருகின்றன. இந்த சேமிப்புப் பை, வேக்குவம் க்ளீனரில் தூசியை உறிஞ்சும் பகுதிக்கு அடுத்து எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். வேக்குவம் க்ளீனரின் வடிவமைப்பைப் பொறுத்தே இந்தப் பை வைக்கப்படும். வெப்பமடைந்த காற்று மட்டும் உயர்ந்து, அதற்கான வழியில் வெளியேறிவிடும். தூசி சற்று கனமானவை என்பதால், அவை அங்கு இருக்கும் சேமிப்புப் பையில் தங்கிவிடும். இப்போது நாம் சுத்தம் செய்யும் வேலை முடிந்தவுடன் சேமிப்புப் பையைத் தனியே எடுத்து, சேர்ந்துள்ள தூசியைப் பெரிய காகிதத்தில் கொட்டி மடித்து, வீட்டில் அல்லது வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம்'' என்று நிறுத்தினார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

டீச்சர் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், மிஷினால் உறிஞ்சப்பட்ட வேகத்தில் உள்ளே சென்ற கணேஷ§ம், மதுவும் அடுத்ததாகச் சென்றது... தூசியை வெளியேற்றும் பகுதிக்கு. அங்கே பொருத்தப்பட்டிருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேனின் உதவியால் காற்றுடன் சேர்ந்து இவர்களும்... அடுத்த பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.  இங்கிருக்கும் சிறிய மோட்டார், ஃபேனை இயங்கச் செய்கிறது. ஃபேன்... எக்ஸாஸ்ட் ஃபேன் போல செயல்படுவதால், உறிஞ்சப்படும் தூசியை அது மேலே இழுத்து வெளியே தள்ளுகிறது. இப்படி தள்ளப்பட்ட தூசியுடன் உள்ளே சென்றவர்கள், அங்கிருந்த ஃபில்ட்டர் திரையால் வடிகட்டப்பட்டு நிறுத்தப்பட்டார்கள். 'அப்பாடா!’ என மூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த சேமிப்புப் பையில் வந்து விழுந்தனர். உள்ளே, ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மாயா டீச்சர் மிஷினை நிறுத்தி, பிறகு மேலே உள்ள குமிழைத் திருகி, தூசியும் சுட்டிகளும் கலந்திருந்த சேமிப்புப் பையை வெளியில் எடுத்தார். அப்போதுதான் இருவருக்கும் உயிரே வந்தது போல இருந்தது.

''டீச்சர், வேக்குவம் க்ளீனர்கள் வீட்டு உபயோகத்துக்கு மட்டும்தானா?'' என்று தன் ஆடைகளில் படிந்திருந்த தூசியைத் தட்டியபடி கேட்டான் கணேஷ்.

''இப்போது எல்லாம் வேக்குவம் க்ளீனர்கள்... வீடுகளில் மட்டும் அல்லாமல் பெரிய தொழிற்சாலைகள், சாலைகள் போன்ற இடங்களைச் சுத்தப்படுத்துவதற்கும் ஏற்ற மாதிரி, பெரிய பெரிய அளவில் மற்றும் அதற்கான பாகங்களுடன் தயாரிக்கப்பட்டுவருகின்றன. மேலும், மனிதர்கள் செயல்பட முடியாத மிகுந்த வெப்பமான இடங்களில்... நுட்பமான சென்சார் மூலம் இயக்கப்படும் ரோபோ வேக்குவம் க்ளீனர்கள் வரை இது உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன'' என்றார் டீச்சர்.

''சரி டீச்சர், வீட்டுக்குப் போய் ஒரு குளியல் போட்டால்தான் சரிப்படும்'' என்றபடியே கிளம்பினார்கள் சுட்டிகள்.