FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

தவில் ராணி!

தவில் ராணி!
பிரீமியம் ஸ்டோரி
News
தவில் ராணி!

மு.இராகவன், படங்கள் : க.சதீஷ்குமார்

‘‘பெண்களால் முடியாதது எதுவும் இல்லைனு இந்த உலகத்துக்கு ஓங்கிச் சொல்லணும். அதுக்காகத்தான் தவில் வாசிக்க ஆரம்பிச்சேன். மூணு வருஷத்தில் இருபத்தஞ்சுக்கும் அதிகமான மேடைகளில் வாசிச்சுட்டேன்’’ என மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார் அமிர்தவர்ஷினி.

தவில் ராணி!

மன்னார்குடியைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான் மணிசங்கரின் மகள் அமிர்தவர்ஷினி. இவருடைய தாய் ஜெயந்தி, திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆசிரியை. அசோகா மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் அமிர்தவர்ஷினி, தந்தையின் ‘மங்களலயநாதம்’ நாதஸ்வர குழுவின் பிரதான தவில் வித்வான்.

அமிர்தவர்ஷினியின் தந்தை மணிசங்கர், ‘‘இசைக்கருவிகளில் ராஜ வாத்தியம் எனப்படும் தவிலை, பெண்கள் அதிகம் வாசிப்பது இல்லை. காரணம், சாமி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சியில் தவிலை கழுத்தில் மாட்டிக்கொண்டு நடந்தவாறு வாசிப்பது கடினம். ஆனால், அமிர்தவர்ஷினிக்கு தவில் மீது மிகவும் ஆர்வம் இருந்தது. ஆதிச்சபுரம் வித்வான் இராமதாஸ் மற்றும் கோயிலூர் கலைமாமணி கல்யாணசுந்தரம் அவர்களிடம் முறைப்படி தவில் கற்று வாசிக்கிறார்’’ என்றார்.

தவில் ராணி!

2014-ம் ஆண்டு தொடங்கியது அமிர்தவர்ஷினியின் தவில் கச்சேரி. விரைவிலேயே சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கச்சேரி செய்யப்போகிறார்.

‘‘தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான நாதஸ்வர இசையுடன், கர்னாடக இசையைக் கலந்துகொடுக்கும் ‘ஃப்யூஷன்’ முயற்சிக்கான பயிற்சியில் இருக்கிறேன்'' என்றபடி அமிர்தவர்ஷினி வாசிக்க ஆரம்பிக்க, இசை மழை பொழிகிறது.