FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

நாற்று நடலாம் எளிதாக! - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

நாற்று நடலாம் எளிதாக!  - அரசுப் பள்ளி மாணவியின்  அசத்தல் கண்டுபிடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
நாற்று நடலாம் எளிதாக! - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

த.க.தமிழ்பாரதன், படங்கள் : க.சதீஷ்குமார்

ருமுறை சர்தார் வல்லப பாய் படேல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். “உங்கள் கல்ச்சர் என்ன?'' என கேட்கப்பட்டபோது, “அக்ரிகல்ச்சர்” என்றார்.

நாற்று நடலாம் எளிதாக!  - அரசுப் பள்ளி மாணவியின்  அசத்தல் கண்டுபிடிப்பு

இன்று நலிவடைந்து வரும் விவசாயத்துக்கு பங்களிப்பு செய்யவேண்டியதும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி புத்துணர்வு அளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாக மாறிவருகிறது. அப்படி, தனது கண்டுபிடிப்பால், பங்களித்துள்ளார் சரண்யா.

நாற்று நடலாம் எளிதாக!  - அரசுப் பள்ளி மாணவியின்  அசத்தல் கண்டுபிடிப்பு



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி சரண்யா. எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல், எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார்.

‘‘என்னோட ஊர் செம்பரவன்காடு. இங்கே விவசாயம்தான் தொழில். என்னுடைய விளையாட்டு, பொழுதுபோக்கு எல்லாமே வயலைச் சார்ந்ததுதான். அதனால், விவசாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்’’ என பக்குவமும் அக்கறையும் கலந்த குரலில் பேசுகிறார் சரண்யா.

நாற்று நடலாம் எளிதாக!  - அரசுப் பள்ளி மாணவியின்  அசத்தல் கண்டுபிடிப்பு

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இன்ஸ்பையர் அறிவியல் போட்டிக்காக, பள்ளியில் பங்கேற்க சொன்னபோது, தனது ‘நாற்று நடும் எளிய இயந்திரம்’ யோசனையைச் சொல்லி இருக்கிறார் சரண்யா.

‘‘ஐடியாவை சொன்னதும், ‘இந்தச் சமுதாயத்துக்கு மிகவும் அவசியமான கருவியாக இது அமையும்’னு ஆசிரியர்கள் பாராட்டினாங்க. வழிகாட்டியாக இருந்து நிறைய உதவினாங்க. எல்லோரின் ஊக்கத்தில் இதை வடிவமைத்தேன். வழக்கமாக ஒருவர் 200 நாற்றுகள் நடுவதற்கு அரை மணி முதல் முக்கால் மணி நேரம் ஆகும். ஆனால், இந்தக் கருவி மூலம் 10 நிமிடங்களில் நட்டுவிடலாம்’’ என்கிறார் சரண்யா.

பல வருடங்களுக்கு முன்பே நாற்று நடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்,  பிளைவுட் ஷீட், போம் ஷீட், சைக்கிள் ஃப்ரீவீல், சைக்கிள் செயின், மரப்பலகைகள் என எளிமையான பொருட்கள் மூலமே இந்தக் கருவியைச் சரண்யா உருவாக்கி இருக்கிறார் என்பதுதான் இதன் சிறப்பு.

‘‘மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கு செல்லும் முன், நேரடியாக வயலில் பரிசோதனை செய்தோம்.   எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட்டது’’ என முகத்தில் மகிழ்ச்சியை அறுவடை செய்கிறார் சரண்யா.

நாற்று நடலாம் எளிதாக!  - அரசுப் பள்ளி மாணவியின்  அசத்தல் கண்டுபிடிப்பு

‘‘இந்தக் கண்டுபிடிப்பு மாவட்ட அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சி’ போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.   மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் சிறந்த கண்டுபிடிப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் ராமேஸ்வரத்தில் நடந்தது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கையால் ‘நாளைய கலாம்’ விருது சரண்யாவுக்கு கிடைத்தது. சரண்யா எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார் என்பதைவிட, விவசாயிகளின் தோழியாக மாறி இருக்கிறார் என்பதுதான் மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோதண்டராமன்.

சபாஷ் சரண்யா!