மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

அழிப்பான் - துடைப்பான்

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

வொயிட்னர்: பேனாவில் எழுதும்போது செய்யும் தவறுகளை அழிக்கும் வொயிட்னரைக் கண்டுபிடித்தது, பெட்டி நெஸ்மித் (Bette Nesmith). இந்த வெண்ணிற மை, ‘Mistake out’ என அழைக்கப்பட்டது. Mistake out and co என்ற நிறுவனத்தைத் தொடங்கி, வொயிட்னரைத் தயாரித்து விற்றார் நெஸ்மித்.

பட்ஸ்: காது அழுக்கைத் துடைக்கப் பயன்படுத்தும் பட்ஸைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லியோ கெர்சென்ஸ்சாங் (Leo Gerstenzang). அவர் மனைவி, குழந்தையின் காதுகளில் உள்ள அழுக்கைத் துடைக்க, டூத்பிக் முனையில் பஞ்சு உபயோகிப்பாராம். அதைப் பார்த்து 1923-ம் ஆண்டு பட்ஸைக் கண்டுபிடித்தார் லியோ.

வி.தனேஷ்,  ஸ்ரீநாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

தூசு அல்ல!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ட்டாம்பூச்சிகளும் விட்டில்பூச்சிகளும் லெபிடோப்டேரா (Lepidoptera) என்ற இனத்தைச் சேர்ந்தவை. ‘லெபிடோப்டேரா’ என்றால், ‘செதில் சிறகுகள்’ என்று பொருள். பட்டாம்பூச்சியின் சிறகுகளில் தூசு போன்று படிந்திருப்பதைக் காணலாம். பல நுண்ணிய செல்கள் சேர்ந்ததே அது.

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

வீன கலைக்கான அறிவியல் களஞ்சியங்களில் ஒன்று, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பொம்பிடோ (Pompidou). இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் இரும்பு, கண்ணாடி, வர்ணக் குழாய்களால் 1977-ல் கட்டப்பட்டது. வெப்பம் மற்றும் குளிரை சிறந்த முறையில் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போதே, சுமார் 1,000 மில்லியன் ஃபிரான்ஸ் பணம் இதற்காகச் செலவிடப்பட்டது.

ப.பரக்கத் நிஷா, YWCA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எண்1, டோல்கேட்,  திருச்சி.

விரல்களினால் சார்ஜர்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஸ்மார்ட்போனைத் தொட்டாலே சார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள். ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை, சீக்கிரமே சார்ஜ் தீர்ந்துவிடுவது. இந்தக் குறையை நீக்க, பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆர்கானிக் பாலிமர் (Organic Polymer) மூலம் உருவாக்கியுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் திரையைத் தொட்டாலே நம் உடல் உஷ்ணத்தால் சார்ஜ் ஏறும். மழைத்துளி திரையில் விழும்போதும், அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும். ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இதைச் செய்கின்றன.

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

வெற்றிமொழி!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

மெரிக்கத் தொழிலதிபர் மற்றும் மிகச்சிறந்த கொடை வள்ளல், ஜான் டி ராக்ஃபெல்லர். 20-ம் நூற்றாண்டின் பெட்ரோலிய சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஏழ்மை ஒழிப்பு மற்றும் கல்விக்காகப் பெருமளவில் நன்கொடைகள் வழங்கியவர். தனது வாழ்நாளில் 500 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாக அளித்தவர். அவருடைய புகழ்பெற்ற வெற்றி மொழிகளில் சில...

• பணக்காரராக வேண்டும் என்பது மட்டுமே ஒரே இலக்காக இருந்தால், உங்களால் ஒருபோதும் அதை அடைய முடியாது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

• சிக்கனம் என்பது நன்கு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு அவசியம்.

• மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் ஒருவித முதலீடுதான்.

• ஒவ்வொரு தோல்வியையும் வாய்ப்பாக மாற்றுவதற்கு எப்போதும் முயற்சிக்கிறேன்.

• செல்வத்தைப் பற்றிய ஒரே கேள்வி என்னவென்றால், அதை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய் என்பதே.

• தேவையில்லாமல் மற்றொருவரின் நேரத்தை ஆக்கிரமிக்க ஒரு மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆர்.யாழினி, அன்னை ஈவா மேரி கோக் பெண்கள்  மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.