FA பக்கங்கள்
Published:Updated:

ரியல் ஹீரோ ரியான்!

ரியல் ஹீரோ ரியான்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரியல் ஹீரோ ரியான்!

என்.மல்லிகார்ஜுனா

‘‘உங்களுடைய ஹாபி என்ன?’’ என்று கேட்டால்... கிரிக்கெட், ஓவியம் வரைதல், நீச்சல் என அடுக்குவோம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 7 வயது ரியான் ஹிக்மேன், ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது’ எனச் சொல்லி வியக்கவைக்கிறான்.

ரியல் ஹீரோ ரியான்!

கலிஃபோர்னியாவில் பிறந்த ரியான் ஹிக்மேன், சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில், கண்ணாடி பாட்டில் என எந்தப் பொருள் கண்ணில்பட்டாலும் சேகரிக்கிறான். அப்பா உதவியுடன் அவற்றை மறுசுழற்சிக்கு விற்பனை செய்துவருகிறான்.

ரியல் ஹீரோ ரியான்!

பெற்றோரின் சம்மதத்துடன் பலரையும்  ஒருங்கிணைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அவரவர் வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் ரியான், ‘Ryan’s Recycling’ என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கி அசரவைத்திருக்கிறான்.

தனது கம்பெனி மூலம் 10,000 டாலர் வருமானம் ஈட்டியுள்ள ரியான், அடுத்துச் செய்து இருப்பதுதான் தி கிரேட் லெவல். அந்த வருமானத்தின் பெரும்பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவருகிறான்.

‘‘என்னுடைய இந்தச் செயலால் சுற்றுச்சூழல் காக்கப்படுவதாக நம்புகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை என்னுடைய கல்லூரிப் படிப்புக்குத் திட்டமிட்டுச் சேமித்து வருகிறேன். சொந்தமாக ஒரு குப்பை லாரியை வாங்கவும் போகிறேன்’’ என்று மழலை மொழியில் அடுக்குகிறான் ரியான்.

ரியல் ஹீரோ ரியான்!

‘Pacific Marine Mammal Center’ என்கிற நிறுவனம், ரியானை இளம் வயது சுற்றுச்சூழல் தூதுவராக நியமித்து கௌரவித்துள்ளது.

வெல்டன் ரியான்!