FA பக்கங்கள்
Published:Updated:

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’
பிரீமியம் ஸ்டோரி
News
கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

த.ராம், படங்கள்: ரா.ராம்குமார்

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

‘‘எந்த ஒரு புது விளையாட்டாக இருந்தாலும் ஒரு கை பார்த்துடணும்னு இறங்கிடுவேன். அப்படி ஒரு கை... இல்லே... இல்லே... ஒரு கால் பார்த்த விளையாட்டுதான் இது!’’ எனச் சிரிக்கிறார் ஆதவன்.

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

நாகர்கோவில், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஆதவன், பல்வேறு விளையாட்டுகளில் வாங்கிய விருதுகள் 28. சமீபத்திய சாதனையாக, சீனாவில் 13 நாடுகள் கலந்துகொண்ட ‘சைனீஸ் இறகுப்பந்து’ போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

சைனீஸ் ஃபுட் தெரியும்... அதென்ன சைனீஸ் இறகுப்பந்து?

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

‘‘இறகுப்பந்தை கால்களால் தட்டி விளையாடும் விளையாட்டு. சீன மொழியில் ‘ஜியான்ஸி’ (Jianzi) எனச் சொல்லுவாங்க. இந்த விளையாட்டு 2008-ம் வருடத்தில்தான் இந்தியாவுக்கு அறிமுகம் ஆச்சு. இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுதான்’’ என்கிறார் ஆதவனின் பயிற்சியாளர் அருள்பிரகாஷ்.

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’
கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

‘‘ஏழு வயசுல யோகா கத்துக்கப் போனேன்.அப்புறம், ஃபுட்பால் மேலே ஆர்வம் வந்துச்சு. பலமுறை மாவட்ட அளவிலான ஃபுட்பால் போட்டிகளில் விளையாடி ஜெயிச்சிருக்கேன். ஸ்கூலில் நடக்கும் ரன்னிங் ரேஸ்ல முதல் ஆளாக பெயர் கொடுக்கிறது நான்தான். நாகர்கோவிலில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் இரண்டு முறை கலந்துகிட்டு இருக்கேன். ஒருநாள், டி.வி-யில் ஜிம்னாஸ்டிக் விளையாடுறவங்களைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்துச்சு. அடுத்த வாரமே ஜிம்னாஸ்டிக் கிளாஸில் சேர்ந்தேன். அதே மாதிரிதான் கால்களால் இறகுப்பந்தைத் தட்டி விளையாடுறதை ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்த்தேன். அப்பாகிட்டே சொன்னேன். அதைப் பற்றி விசாரிக்கப்போனா, நிறைய பேருக்கு அப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதே தெரியலை. ஒருழியா அருள்பிரகாஷ் சாரைப் பிடிச்சோம். நேஷனல் கோச், ‘களரி’ செல்வராஜ் சாரும் நிறைய ஐடியாக்களைச் சொல்லித்தந்தார். இந்தியா சார்பில், சீனாவில்  விளையாடும் வாய்ப்பும் கிடைச்சது. என்னோடு விருதுநகர் மற்றும் கோயம்புத்துரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் விளையாடினாங்க. அவங்களுக்கும் கிடைச்ச விருதுதான் இது’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் ஆதவன்.

கால்களால் ஆடலாம் இறகுப் பந்து! - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’

‘‘இந்தியாவில் இப்போதுதான் விளையாடப்படும் விளையாட்டு என்பதால், அரசு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. சொந்தச்  செலவில்தான் சீனா வரை சென்று வந்தோம். இதுபோன்ற புதிய விளையாட்டுகளைக் கண்டறிந்து அரசு ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்கிறார்கள் ஆதவனின் பெற்றோர்.

‘‘இந்த சைனீஸ் இறகுப்பந்து விளையாட்டில் இன்னும் நிறைய சாதனை செய்யணும். இதுக்கு நடுவுல வேற புது விளையாட்டு என் கண்ணில் பட்டால், அதையும் விளையாடிப் பார்த்துடணும்’’ என்கிற ஆதவன் கண்களில் உற்சாகம் பொங்குகிறது.