சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

பூம்...பூம்...பூசணி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!


பெரிய பூசணிக்காயை உருவாக்குவதில் யார் கில்லாடி என்று, அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் போட்டி நடக்கும். ஒரு லாரியில் ஒரே ஒரு பூசணிக்காயை மட்டும் எடுத்துச்செல்லும் அளவுக்குப் பிரமாண்டமான பூசணிக்காயைப் பயிர் செய்வது அங்கே சர்வ சாதாரணம். அப்படி, இந்த ஆண்டு அமெரிக்காவின் இடாஹோ நகரைச் சேர்ந்த விவசாயி ஜிம் லோவி (Jim lowe) நிலத்தில் விளைந்த பூசணிக்காயின் எடை, 1400 பவுண்டு. அதாவது, 635 கிலோ. இதற்குமுன்பு இந்த நகரில் அதிகபட்சமாக 552 கிலோ பூசணிக்காயைப் பயிர்செய்ததே சாதனையாக இருந்துள்ளது. அதை முறியடித்துள்ளார் ஜிம் லோவி.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடல் வெப்பமும் மீன்களும்! 

அதிகரித்துவரும் கடல் வெப்பத்தால், மீன்களின் உடல் அளவு முன்பு இருந்ததைவிட 30 சதவீதம் வரை சுருங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு, கடல் வெப்பத்துக்கும் மீன்களின் வளர்ச்சிக்குமான தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியது. அதில்தான் இந்த அதிர்ச்சியான விஷயம் வெளிப்பட்டுள்ளது. ‘மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். ஆனால், கடல் நீரின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகப்பதால், அதில் வாழும் மீன்களின் உடல் வளர்ச்சி 30 சதவிகிதம் சுருங்குகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

உயரத்தில் ஒரு சிக்ஸர்!

ஹிமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர், செயில்(Chail). இங்கே 1893-ம் ஆண்டு பூபேந்தர் சிங் மகாராஜாவால் அமைக்கப்பட்ட மைதானம்தான், உலகிலேயே உயரமான (2,444 மீட்டர்) கிரிக்கெட் மைதானம் ஆகும். செயில் மிலிட்டரி பள்ளியின் பகுதியாக இருக்கும் இங்கே, கோடை விடுமுறை சமயங்களில் போலோ விளையாட்டும் நடத்தப்படும். இந்த உயரமான மைதானத்துக்கு ஒருமுறை விசிட் அடிச்சு ஒரு சிக்ஸர் அடிச்சுட்டோம்னா, அதை உலகின் உயரமான சிக்ஸர்னு சொல்லிக்கலாம் ஹி... ஹி...

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடல் சிலந்தி!

மனிதன் உள்படப் பல உயிர்களுக்கு ஜீரண உறுப்பு வயிற்றுப் பகுதியிலேயே அமைந்துள்ளது. ஆனால், பான்டோபோடா (Pantopoda) எனப்படும் கடல் சிலந்திக்கு, அதன் கால்கள் வரை ஜீரண உறுப்புகள் பரவியுள்ளதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘கரன்ட் பயலாஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், கடல் சிலந்திகளின் இதயம் மிகவும் மெதுவாகவே ரத்தத்தை உந்துகிறது. எனவே, உடல் உழுவதும் பரவியிருக்கும் ஜீரண உறுப்பும், ரத்தத்தை உந்திச் செலுத்தும் பணியைச் செய்வதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகம் சுற்றும் தீபாவளி!

தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி இருப்பீர்கள். தீபாவளி நாளின் நினைவுகள் இன்னமும் உங்கள் மனதில் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டின் அரசும் தீபாவளியை மரியாதை செய்யும் வகையில், விதவிதமான தபால்தலைகளை வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர், இலங்கை, கனடா, இஸ்ரேல், அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளிலிருந்து தபால்தலைகளாக உலகம் சுற்றுகிறது நமது தீபாவளி பண்டிகை.