சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சாதனை

சாதனை
பிரீமியம் ஸ்டோரி
News
சாதனை

சாதனை

சாதனை

ரிப்போர்ட்டர் லிஷியாக்! 

அமெரிக்காவின் செலின்ஸ்க்ரோவ் என்கிற சிறிய நகரத்தில், ‘ஆரஞ்சு ஸ்ட்ரீட் நியூஸ்’ என்கிற ஒரு பத்திரிகையை நடத்திவருகிறார், 11 வயதான ஹில்டே கேட் லிஷியாக்.

லிஷியாக்கின் தந்தை மேத்யூ லிஷியாக், பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவரைப் பின்பற்றி தன் குடும்பத்துக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கியபோது, ஹில்டேயின் வயது 9. அந்தக் குடும்பப் பத்திரிகையில் தங்கை ஜூலியட் பிறந்திருப்பதை வெளியிட்டார் லிஷியாக். தற்போது, செலின்ஸ்க்ரோவ் பகுதிக்காக பிரத்யேகமாக ‘ஆரஞ்சு ஸ்ட்ரீட் நியூஸ்’  என்ற பத்திரிகையை நடத்திவருகிறார். அக்கம் பக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகள், காவல் நிலையத்துக்கு நேரடியாகச் செய்தி சேகரிப்பது என எல்லாமே ஹில்டேதான். குழந்தைகளுக்கான செய்திகளோடு க்ரைம் செய்திகளையும் சேகரிக்கிறார். இந்தப் பத்திரிகைக்கு வெப்ஸைட் மற்றும் யூடியூப் சேனலும் இருக்கிறது. ‘‘ஹில்டே கேட் லிஷியாக் ஃபார் ஆரஞ்சு ஸ்ட்ரீட் நியூஸ்’ என்று களத்தில் அசத்துகிறார்.

- ரமணி மோகனகிருஷ்ணன்

சாதனை

சூப்பர் சீரியல் ஷெல்டன்!

அமெரிக்காவில் செம்ம ஹிட் அடித்த ‘பிக் பேங்க் தியரி’யின் ‘பிக்ரியூல்’தான் ‘யங் ஷெல்டன்’ சீரியல். ‘பிக் பேங்க் தியரி’ சீரியலில் அதிமேதாவியாக வரும் ஷெல்டன் கூப்பர், சிறுவயதில் எப்படி இருந்தான் என்பதை காமெடி கலந்து கூறுவதுதான் இந்த சீரியலின் மையக் கதை. ஒன்பது வயதாகும் ஷெல்டன் கூப்பர், ஓர் அதிபுத்திசாலி. இந்தப் புத்திசாலித்தனம் அவனை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. ஹைஸ்கூல் படிக்கும் தன் அண்ணனின் வகுப்பிலேயே சேர்கிறான். இவனுடைய புத்திசாலித்தனத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் ஆசிரியர்கள். ‘கொஞ்சம் உன் புத்திசாலித் தனத்தைக் கம்மி பண்ணு’ என்று கெஞ்சுகிறது குடும்பம். ஆனால், கால்பந்துப் போட்டியின் நுணுக்கங்களைக் கணிதத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது, மதத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு பற்றி விவாதிப்பது எனக் கலக்குகிறான் குட்டி ஷெல்டன். ஐந்து எபிஸோடுகளே ஒளிபரப்பாகியிருக்கும் இந்த சீரியல், அமெரிக்காவில் பல லட்சம் பேரின் மனதில் தற்போதே இடம் பெற்றுவிட்டது.

-எம்.ஆர்.ஷோபனா

சாதனை

டாக்டர் ஆகாஷ்

 மாரடைப்பு அபாயத்தைக் கண்டறிய ஒரு புதுமையான கருவியை வடிவமைத்திருக்கிறார் ஆகாஷ். 

இவர் கண்டுபிடித்திருக்கும் கருவி எளிமையானது. இந்த முறையில், உடலில் எங்கேயும் துளையிட வேண்டிய(Non-invasively) அவசியமில்லை. முக்கியமாக இது, கிராமப்புற மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து, அவர்களுக்குs சிகிச்சை கொடுக்க உதவியாக இருக்கும். இன்னும் பெயரிடப்படாத கருவியைk குறைந்த விலையில் எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே ஆகாஷின் லட்சியம். 

- பாலு சத்யா

சாதனை

வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் ராபர்ட் ஸ்மித்!

வனப் புகைப்படக் கலைஞன் ராபர்ட் இர்வின் என்றதும்,  பெயரைக் கேள்விப்பட்டது போல இருக்கிறதா? ஆம் முதலை மனிதன் என அழைக்கப்பட்ட ஸ்டீவ் இர்வினின் மகன்தான் இந்த ராபர்ட் இர்வின்.

சாதனை

அப்பாவுடன் சின்ன வயதிலேயே காடுகள், மலைகளில் வாழ்ந்த ராபர்ட் இர்வின், தன்னைவிடக் கனமான கேமராவைத் தூக்கிக்கொண்டு சின்னச்சின்னப் பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்க

சாதனை

ஆரம்பித்தார். இப்போது ராபர்ட்டின் இன்ஸ்டாகிராம் முழுக்கப் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்கள் நிறைந்து, பார்ப்பவர்களைச் சொக்கவைக்கிறது. வனப் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுவரும் ராபர்ட், தன் அப்பாவைப்போல அதிரடி கிளப்பிவருகிறார்.

- ஆ.சாந்தி கணேஷ்

தெரியுமா?

* கிளிமாஞ்சாரோ மலை, தான்சானியா நாட்டில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டவர், சகுந்தலா தேவி.