சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

விலங்குகள்

விலங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விலங்குகள்

என்.மல்லிகார்ஜுனா

விலங்குகள்

என்ன விலங்கு?

‘ஆஃப்கன் ஹௌண்ட்’ (Afghan Hound) என்ற பெயர் கொண்ட நாய்தான் இது. நீளமான கூந்தலே இதற்குச் சிறப்பு. அதிக வெப்பம், குளிர் போன்ற இயற்கைத் தொந்தரவுகளைச் சமாளிக்க இது உதவுகிறது. ஆஃப்கானிஸ்தானில் காணப்படும் இந்த இனம், பூமியில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. இந்த நாய், மணிக்குச் சுமார் 65 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியதாம்.

விலங்குகள்

மங்கி ஸ்கூல்!

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள தொன்கயிங்கில் (Dongying), குரங்குகளுக்காக பிரத்யேகப் பள்ளி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கு, சல்யூட்  அடிப்பது, ஷேக்ஹேண்டு கொடுப்பது, எண்களை எண்ணுவது போன்றவற்றைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும் சொல்லித்தருவதோடு, பலவிதமான வேலைகளைச்செய்யவும் பயிற்சியளிக்கப் படுகிறது. சீனர்கள் தாங்கள், செல்லமாக வளர்க்கும் குரங்குகளை இந்தப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

விலங்குகள்

சிங்கத்தோடு செல்ஃபி!

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள நேஷனல் ஜூ அண்டு அக்வேரியத்துக்குச் சென்றால் அங்குள்ள ‘ஜமாலா வனவிலங்கு ரெஸ்டாரன்ட்டில்,’ சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளுடன் நெருக்கமாக போட்டோ எடுத்துக்கொள்ளும்படி அறைகளை அமைத்து இருக்கிறார்கள். விலங்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக, தடிமனான கண்ணாடிச் சுவர் அமைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி வழியாக விலங்குகளை அருகில் பார்த்து ரசிக்கலாம். அந்தக் கண்ணாடிச் சுவரில் உள்ள சிறிய துளை வழியே சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு உணவு கொடுத்து, கூடவே செல்ஃபியும் எடுத்து, ஃப்ரென்ட்ஸுக்கு ஷேர் செய்யலாம்.

விலங்குகள்

கற்களில் உருவங்கள்!

இத்தாலியைச் சேர்ந்த சஸி டாட்டோர் Sassi D’autore என்பவர்  பீச்சில் விதவிதமாகக் கிடைக்கும் கற்களைச் சேகரித்து, அவற்றைக்கொண்டு, அவரின் கற்பனையில் தோன்றியதைக்  கற்களின் வடிவங்களுக்கு ஏற்ப மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அடுக்கி, பார்ப்பவர்களை அசத்திவருகிறார். இவர் வடிவமைத்த கல்சித்திரங்களுக்கு நெட்டிசன் களிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

விலங்குகள்

தெரியுமா?

* மேற்கு வங்காள மாநிலத்தின் தேசிய விலங்கு, மீன்பிடி பூனை (Fishing cat)

* எறும்புகளால் தன் உடல் எடையைவிட 20 மடங்கு எடையைத் தூக்கமுடியும்.