சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

தேசிய மாசுக் கட்டுப்பாடுத் தினம்

 1984-ம் ஆண்டு மத்தியப்பிரதேசத் தலைநகர் போபால், விஷவாயுக் கசிவால் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “யூனியன் கார்பைடு கெமிக்கல் பிளான்ட்” தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு 3,787 பேரைப் பலிகொண்டது. இது உடனடி மரணம். ஆனால், இந்தப் பாதிப்பின் விளைவாகப் பல ஆயிரம் பேர், அதன்பின் தொடர்ச்சியாக இறந்தனர்.

இந்த நாள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கவேண்டி உலக நாடுகளை வலியுறுத்தும் நாள்தான், உலக மாற்றுத்திறனாளிகள் தினம். 1981-ம் ஆண்டு, உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இவர்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல; உலகை மாற்றும்
திறனாளிகள் என்பதே உண்மை!

இந்த நாள்

உலக மண் தினம்

2007-ம் ஆண்டு, சர்வதேச மண் அறிவியலுக்கான அமைப்புதான், இந்த நாளை ‘உலக மண் தின’மாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. நீர் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான பூமித்தாய்க்கு விழா எடுப்பது நல்ல விஷயம்தானே!

இந்த நாள்

சார்க் நிறுவப்பட்ட தினம்

 தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதான் சார்க். இதில், இந்தியாதான் பெரிய நாடு. டிசம்பர் 7,    1985-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. வங்காள தேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் உட்பட 8 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றன.

இந்த நாள்

சர்வதேச மலைகள் தினம்

உலகில், அதிகப்படியான சிறுபான்மையினர் மலைப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். மலைப் பகுதிகளின் கலாசாரத்தைப் பாதுகாக்கவே இந்த நாள். உலகின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், கிட்டத்தட்ட 350 கோடி மக்கள் மலை வளங்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.

இந்த நாள்

பாரதியார் பிறந்த தினம் -1882

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தமிழ் மீது தீராத காதல்கொண்டு பாடியவர், மகாகவி பாரதியார். ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மீது பற்றுக்கொண்டு, ஷெல்லிதாசன் என்று புனைப் பெயர் வைத்துக் கொண்டார். தமிழ் நாட்டில் முதன் முதலாக, ‘இங்கிலீஷ் கிளப்’ ஒன்றை ஷெல்லி பெயரில் தொடங்கினார்.

இந்த நாள்

தெரியுமா?

* ஆனைமுடி சிகரம்தான் தென்னிந்தியாவின் உயரமான சிகரம்.