Published:Updated:

ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!
ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!

அவள் ஸ்பெஷல் ஸ்டோரிஅறிவோம்... தெளிவோம்கு.ஆனந்தராஜ் - படங்கள் : செ.விவேகானந்தன்

பிரீமியம் ஸ்டோரி

ப்ரல் 2 - ‘ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர்’ (Autism spectrum disorder - ASD) விழிப்பு உணர்வு தினம். 1990-ம் ஆண்டுவரை எங்கோ, யாருக்கோ வரும் குறைபாடு இது எனப் பேசப்பட்டது. இன்று, பல குழந்தைகளும் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் தொடர்பான விரிவான விளக்கங்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பு மருத்துவ உளவியல் நிபுணர், டாக்டர்
பி.எஸ்.விருதகிரிநாதன். 

ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!

`ஏஎஸ்டி’ என்றால் என்ன?

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ஏஎஸ்டி), குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய பிரச்னை. தன்னிச்சையாகத் தன் உலகில் செயல்படக்கூடிய திறன் அளவுகளினாலும் பெற்றோர் வளர்ப்பு முறையினாலும் குழந்தைக்குக் குழந்தை இப்பிரச்னையின் தன்மை வேறுபடுகிறது. பிறந்த பத்து மாதங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு நன்றாக ரியாக்ட் செய்வது (உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது), கத்துவது, அழுவது, சிரிப்பது, நன்றாகத் தவழ்ந்து படிப்படியாக நடக்க ஆயத்தமாவது, தானாகக் கீழே உட்கார்ந்து எழுவது, நம் விரலை நீட்டினால் தன் பிஞ்சுக் கைகளால் பற்றிக்கொள்வது, பொம்மையைக் காட்டினால் சிரித்து விளையாடத் தயாராவது உள்ளிட்ட செயல்பாடுகளைக் குழந்தைகள் செய்ய வேண்டும். எதிர்வினை காட்டாத, எதிர்வினை காட்டுவதில் சுணக்கம் அல்லது சிக்கல் என, குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற சோஷியல் எமோஷனல் பிஹேவியர்களை வெளிப்படுத்தாமல் இருப்பதே, ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர்.

காரணம்?


மரபுவழியாக வருவது, இயல் பாக நடக்கவேண்டிய இயக்கச் செயல்பாடுகளில் பின்தங்கிய வளர்ச்சி (தாமதமாக நடப்பது, பேசுவது உட்பட பல), கர்ப்ப காலத்தின் முதல் நான்கு மாதங் களில் தாய்க்கு உண்டாகும் அதீத மன உளைச்சல், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல் களினால் குழந்தையின் மூளைக் குச் செல்லவேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைவது போன்ற காரணங் களால், பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிஸப் பாதிப்பு ஏற்படுகிறது.

கணிக்கும் வழிமுறை?

துல்லியமான கணிப்பு முறைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஏஎஸ்டி குறைபாட்டை சோதனை செய்யவும், அதன் அளவை மதிப்பீடு செய்யவும் அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் குழுவினர் வெளியிட்ட அறிக்கைப்படி, உலகளவில் மருத்துவர்கள் உபயோகிக்கும் அளவுகோல், டிஎஸ்எம் 5 - 2013 (DSM - The Diagnostic and Statistical Manual of Mental Disorders). அதன் அடிப்படையில், பெற்றோர் கூறக்கூடிய குழந்தையின் இயல்புத்தன்மை அறிகுறிகளைப் (Symptoms) பொறுத்து சோதனைகள் செய்யப்படும். இதன் முடிவில், 0 - 100 சதவிகிதத்துக்கு ‘ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம்’ அளவுத்திறன் மதிப்பிடப்படும். குறைபாட்டுக்கான அறிகுறிகள் (Presence of number of symptoms), தன்மை (Intensity) ஆகியவற்றைப் பொறுத்து, இக்குறைபாடு மைல்ட் (மிதம்), மாடரேட் (நடுத்தரம்), சிவியர்  (தீவிரம்) என மூன்று வகைகளாகக் கணிக்கப்படும்.

அறிகுறிகள்?

ஒரு வயதாகும் குழந்தை நார்மலாகப் பத்து வார்த்தை களாவது மழலை மொழியில் பேச வேண்டும். நம் கேள்விகளுக்கு ரியாக்‌ஷனை வெளிப்படுத்த வேண்டும். நம் அருகிலேயே உட்கார்ந்திருந்தும், நாம் பேசும்போது அதற்கு முறையான எதிர்வினை காட்டாமல் இருப்பது முதல் அறிகுறி. இந்தத் தன்மையைப் பெற்றோர் பலர், குழந்தைக்குச் செவித்திறன் பிரச்னை உள்ளது என நினைத்துக்கொள்வார்கள். இந்தச் சந்தேகம் களைய, வீட்டின் காலிங் பெல்லை அழுத்துவது, செல்போனில் பாடல்கள், ரிங்டோன் ஒலிக்கவிடுவது மற்றும் சத்தமாகப் பேசுவது போன்றவற்றைச் செய்து, அவற்றுக்கெல்லாம் குழந்தை உடனடியாக ரியாக்ட் செய்கிறதா என்று பார்க்கவும். அப்படிச் செய்தால், அக்குழந்தைக்கு செவித்திறன் பிரச்னை இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.  

ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!

ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப செய்தல், முகத்தைப் பார்த்துப் பேசாதது, தலையை ஆட்டிக்கொண்டே இருப்பது, நாம் சொல்வதைக் கேட்காமல் நடப்பது, அம்மா உள்ளிட்ட வளர்ப்பாளர்களிடமே நெருங்கிப் பழகாதது, மற்றவர்களுடன் பழகாமல் இருப்பது, பிறர் தொட்டாலே விலகிச்செல்வது, பிடித்த பொருளுடன் அடிக்கடி பேசி, விளையாடுவது, தன் முன் அல்லது தனக்கு நிகழும் ஒரு செயலின் தன்மைக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது (அடிபடுவது, காயம் ஏற்படுவது போன்றவை), தன் செயலின் எதிர்வினைகள் பற்றித் தெரியாமல் நினைத்ததைச் செய்வது, பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது, அடிக்கடி உரக்கக் கத்திப்பேசுவது அல்லது ஒருவிதமான சத்தத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவது, கை கால் உள்ளிட்ட உறுப்புகளை அசைத்துக்கொண்டே இருப்பது, திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செய்வது, நாம் சொல்வதையே உடனே நமக்குத் திருப்பிச் சொல்வது உள்ளிட்ட அறிகுறிகளை வைத்து `ஏஎஸ்டி’ குறைபாடு உள்ளதை யூகிக்கலாம்.

அடுத்து?

மேற்கண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவை குழந்தையின் 10 - 12 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாமதிக்கும் நேரம், குறைபாட்டைச் சரிசெய்யும் வாய்ப்பைத் தாமதப்படுத்தும். ஐக்யூ லெவல் (மூளைத்திறன்) 70-க்கு கீழிருந்தால், அறிவுத்திறன் குறைபாடு (Mental subnormality) என்போம். 70 - 90 என்பது குறைவான சராசரி (Low average). 90-க்கு மேல் இருந்தால், நார்மல். 

ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத்தலாம்!

பெரும்பாலான ஆட்டிஸக் குழந்தைகளுக்கு நான்-வெர்பல் ஐக்யூ லெவல் (கண்பார்த்து செய்யக்கூடிய திறன்) மிகவும் நன்றாக இருக்கும். வெர்பல் ஐக்யூ (கேட்டு, அதைச் செயல்படுத்துதல்) மட்டும் குறைவாக இருக்கும். அதனால் சோஷியல், எமோஷனல், கம்யூனிகேஷன் உள்ளிட்ட திறமைகளில் பின்தங்கியிருப்பார்கள். இதற்கான பயிற்சி கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.

சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள்?

கண்டறியப்பட்ட ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் அளவீட்டைப் பொறுத்து சிகிச்சை மற்றும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சல், தலைவலிபோல, ஒரு சில நாள்களில் நிவர்த்தியாகும் குறைபாடு அல்ல ஏஎஸ்டி. பல மாதங்களில் தொடங்கி, குறைபாடு சரியாக பல வருடங்கள் வரைகூட ஆகலாம். முதலில் ஏஎஸ்டி பற்றிய முழுமையான புரிந்து உணர்வும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், குழந்தையை நிச்சயம் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையும் பெற்றோருக்கு மிகவும் அவசியம்.

உட்கார, நடக்க, விளையாட, பேச, சிரிக்க, எழுத, படிக்க என இயல்பான வேலைகளைச் செய்ய (நார்மல் குரோத் டெவலப்மென்ட் ஸ்கில்) பயிற்சி கொடுக்க வேண்டும், பிறகு, சாப்பிட, குளிக்க, மலம் கழிக்க, உடை மாற்றிக்கொள்ள உள்ளிட்ட தன் வேலைகளைச் சுயமாகத் தானே செய்துகொள்வதற்கான பயிற்சிகளை (செல்ஃப் ஹெல்ப் டெவலப்மென்ட் ஸ்கில்) கற்றுக்கொடுக்கலாம்.

அதிக நேரத்துக்குக் குழந்தைகளைப் படுக்கவைக்கக் கூடாது. ஆட்டிஸ ஸ்பெக்ட்ரம் அளவீடு அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து மாத்திரைகள் கொடுக்கலாம். எலெக்ட்ரானிக் விளையாட்டுச் சாதனங்கள், டி.வி மற்றும் கம்யூட்டர் சாதன வீடியோ காட்சிப் பயிற்சிகள் மற்றும் பயன்பாடுகளை ஆட்டிஸக் குழந்தைகளுக்குத் தரக் கூடாது.

நிரந்தரத் தீர்வு?

சரியாகப் புரிந்துகொள்ளாமல், பொறுமையில்லாமல், சமூக வலைதளங்களில் படித்தவை மற்றும் பிறரிடம் கேட்டு, மாறுபட்ட தெரபி மற்றும் சிகிச்சைகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் நல்ல மாற்றம் கிடைக்காது. நம் குழந்தைக்கு ஒரு குறைபாடு உள்ளது என்பதைப் பெற்றோர் முழுமையாகப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, குறைபாட்டைச் சரிசெய்ய முறையாகச் செயல்பட வேண்டும். பிறந்த இரண்டு ஆண்டுக்குள் குறைபாட்டை உறுதிசெய்து சிகிச்சையைத் தொடங்கினால், சில வருடங்களிலேயே 50 - 70 % குறைப்பாட்டை சரிசெய்துவிடலாம். பிறகு தொடர்ச்சியான சிகிச்சையால், குறைபாட்டைப் பொறுத்து சிகிச்சை கொடுத்தால் முழுமையாக இதைக் குணப்படுத்த முடியும். 20 வயதுக்குப் பிறகு, மூளையின் பயலாஜிக்கல் ஐ.க்யூ (Biological IQ) லெவல் குறையத் தொடங்கும். மேற்கொண்டும் வளராது. அதனால், மிகத் தாமதமான பயிற்சி மற்றும் சிகிச்சை நிறைவான பலனைத் தராது.

ஏஎஸ்டி Vs ஏடிஹெச்டி?

ஏடிஹெச்டி (Attention Deficit Hyperactivity Disorder - ADHD) குறைபாடு உள்ள குழந்தைகள், தாங்கள் செய்யும் செயல்பாடுகளால் என்ன விளைவுகள் வரும் என முழுமையாக யோசித்துச் செய்யாமல், அதிக துறுதுறுப்பு மற்றும் கவனச்சிதறலுடன் இருப்பார்கள். இதுவும் குழந்தைகளின் வளர்ச்சியில் வரக்கூடிய பிரச்னைதான். ஆனால், ஏஎஸ்டி-யும் ஏடிஹெச்டி-யும் வெவ்வேறானவை. ஏடிஹெச்டி  பிரச்னையைப் பெற்றோர்கள் பலர் ஏஎஸ்டி என நினைத்துக்கொண்டு மாறுதலான பயிற்சி மற்றும் சிகிச்சைகளைக் கொடுப்பார்கள். இதனால், பிரச்னையின் தீவிரம் அதிகமாகுமே தவிர சரியாகாது.

ஆட்டிஸக் குழந்தைகளுக்கான பெற்றோரின் அரவணைப்பு எப்படி இருக்க வேண்டும், குழந்தைகளுக்குப் பயன்தரும் எளிய சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகள், அவர்களை சாதனையாளர்கள் ஆக்கும் வழிகள், ஆட்டிஸத்தை மையப்படுத்தி பெருகிவரும் வணிகக் கும்பலிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல தகவல்கள்...

- அடுத்த இதழில்...

நார்மல் பள்ளிதான் பெஸ்ட்!

ட்டிஸக் குறைபாடுடைய குழந்தைகளை 2 - 3 வயதில் வீட்டுக்கு அருகிலுள்ள பிளே ஸ்கூலுக்குப் படிக்க அனுப்பலாம். அதனால் ஓரிரு ஆண்டுகளில் நல்ல மாற்றம் வரும். பிறகு, 5 - 6 வயதில் குழந்தையை ரெகுலர் பள்ளியில் சேர்க்கலாம். ஆட்டிஸக் குழந்தைகளை ஸ்பெஷல் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்ப்பதாலும், வீட்டில் வைத்துப் பெற்றோரே சொல்லிக்கொடுப்பதாலும் பலன் கிடைக்காது. நார்மல் பள்ளிக் குழந்தைகளுடன் படிக்கவைக்கும்போது, ஆரம்பத்தில் சில வாரங்களுக்குச் சிரமமாகத்தான் இருக்கும். பிறகு மெள்ள மெள்ள ஆட்டிஸக் குழந்தைகளின் திறனும், நார்மல் குழந்தைகள்போல மாற ஆரம்பிக்கும். ‘ரைட்ஸ் ஆஃப் பெர்சன்ஸ் வித் டிசபிலிட்டிஸ் ஆக்ட் 2016’ என்ற மத்திய அரசின் சட்டதிருத்தப்படி, ஏஎஸ்டி உள்ளிட்ட கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையில் தனி இடஒதுக்கீடும், உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடும் தரப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு