Published:Updated:

தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்
தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்

எஸ்.சரவணக்குமார், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர்ஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி நேரத்தில் பட்டாசுகள், சமைக்கும் எண்ணெய் போன்றவற்றால் குழந்தைகளுக்குக்  காயங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்தத் தருணங்களில் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள், காயங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய  முதலுதவி நடவடிக்கைகள் போன்ற அடிப்படைத் தகவல்களைத் தருகிறார் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.சரவணக்குமார்.

தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்

காயம்பட்டால்..!

* தீபாவளி நேரத்தில் எண்ணெய்க் கொப்புளங்கள், பட்டாசுத் துகள்கள் உடலில்படுவதால் காயங்கள், ஆடைகளில் தீப்பற்றிக்கொள்வதால் தீப்புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எந்த மாதிரியான காயம் ஏற்பட்டாலும் உடனே குழாய்த் தண்ணீரால் காயம்பட்ட இடத்தை நனைத்துவிட வேண்டும். இது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும்.

தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்



* கைகால் எனக் காயம் ஏற்பட்ட இடத்தில் வீக்கமோ அல்லது கொப்புளங்களோ ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், அணிகலன்கள் ஏதேனும் அணிந்திருந்தால் உடனே அகற்றிவிடுவது நல்லது.

* கண்ணில் காயம் ஏற்பட்டால், தண்ணீர் நிறைந்த ஒரு பக்கெட்டில் கண்களை விரித்துப் பார்க்கவும். பின்னர் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும். எந்தக் காரணத்துக்காகவும் கண்களைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது.

தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்

* தீக்காயம்பட்ட இடத்தைத் தண்ணீரில் நனைத்த பின்னர், சில்வர் சல்ஃபாடயாஸின் (Silver Sulfadiazine) என்ற களிம்பை வாங்கித் தடவி முதலுதவி சிகிச்சை செய்த பின்னர்  மருத்துவரை அணுகவும்.

பெற்றோர்கள் கவனிக்கவும்!

* பட்டாசு எதிர்பாராத நேரத்தில் வெடிக்கும் தன்மை உடையது என்பதால், எந்தக் காரணம்கொண்டும் குழந்தைகள் பட்டாசைக் கைகளில் பிடித்துத் தூக்கிப்போடுவதை அனுமதிக்காதீர்கள்.

* பட்டாசு டப்பாவின் அருகிலேயே மெழுகுவத்தி, ஊதுவத்தி, தீபம் போன்றவற்றைவைத்து பட்டாசைத் தீப்பற்றவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், பட்டாசுகள் நிறைந்த அந்த டப்பாவில் தீப்பற்றிக்கொண்டு விபத்து நேரலாம்.  

தீக்காயம் இல்லாத தீபாவளி! - எளிய வழிமுறைகள்

* பட்டாசு வெடிக்கும்போது குழந்தை களுக்கு கனமான ஷூ அல்லது செருப்பு அணிவித்துவிட வேண்டும். வெடித்த பின்னரும் தீ அணையாமல் தரையில் கிடக்கும் பட்டாசுகளைத் தவறுதலாக மிதிக்க நேர்ந்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து இது காக்கும்.

* வெடிக்காத வெடிகளையெல்லாம் கும்பலாக ஒரே இடத்தில் குவித்து வைத்து, பற்றவைக்கக் கூடாது, அது ஆபத்துக்கு வழிவகுக்கும். என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

* பட்டாசு வெடிக்கும்போது சிந்தெடிக் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, எளிதில் தீப்பற்றும் பருத்தி ஆடைகளையும் தவிர்க்கலாம். மாறாக, ஜீன்ஸ் போன்ற கடினமான துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைக்  குழந்தைகளுக்கு அணிவித்துவிடலாம்.

* வெடிக்காத பட்டாசுகள் சில நேரங்களில் தாமதமாகக்கூட வெடிக்கலாம் என்பதால், அவற்றில் தண்ணீர் ஊற்றி அணைத்துவிடுவது நல்லது.

தவிர்க்கவேண்டியவை!

* காயம்பட்ட இடத்தில் மை, மாவு, மஞ்சள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்கவும். இதனால் மருத்துவரால் காயத்தின் ஆழத்தை அறிய முடியாமல் போகும். மேலும், சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் காயம்பட்ட இடத்தைச் சுத்தப்படுத்துவதற்கும் அதிக நேரம் ஆகும்.

* கொப்புளங்களை குத்திவிடக் கூடாது. அதனால், உடலின்  மற்ற இடங்களில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

முன்னெச்சரிக்கை!

* பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ளலாம். காயங்கள் ஏற்பட்டால் தண்ணீரைத் தேடி ஓடாமல் காயம்பட்ட இடத்தை உடனே தண்ணீரில் நனைக்க இது உதவும்.

* கம்பி மத்தாப்பு போன்ற வெடித்த பட்டாசுகளை கங்கு அணைந்த பின்னர், மண் நிறைந்த ஒரு பக்கெட்டில் சேர்க்கவும்.

* தரையில் புரளும்படியான ஆடைகள், காற்றில் பறக்கும் துப்பட்டாக்கள் ஆபத்தானவை. உடம்போடு சேர்ந்திருக்கும் ஆடைகள் பாதுகாப்பாக இருக்கும்.

* பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக்கு கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

* ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழாய் பிரச்னைகள் இருப்பவர்கள் மூக்குக்கு மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

- சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு