ஹெல்த்
தொடர்
Published:Updated:

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19
பிரீமியம் ஸ்டோரி
News
பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழில் 4 - 5 வயதுவரையான குழந்தைகளின் வளர்ச்சிநிலைகள் பற்றிய தகவல்களைச் சொல்லப் போகிறேன்.  

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19

கதை சொல்லுங்கள்!

குழந்தைகளின் மூளை வளர்ச்சி ஐந்து வயதில் முடிந்துவிடும். எனவே, பிள்ளைகளின் அறிவுக்குத் தீனி போடும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவில், பிள்ளைகளுக்கு கதை சொல்லுங்கள். கதை கேட்டல், குழந்தைகளின் மூளை மற்றும் மன வளர்ச்சியை, நினைவுத்திறனை அதிகரிக்கும். கேட்ட கதைகளை, ஒரு கட்டத்தில் குழந்தைகள் உங்களுக்கே திருப்பிச் சொல்ல ஆரம்பிப்பார்கள். சில சுட்டிகள் கதை கேட்டுவிட்டு எதிர்பாராத கேள்விகளைக் கேட்பார்கள். பாட்டி வடைசுட்ட கதையைச் சொன்னால், ‘`காக்கா வடையைத் தூக்கிட்டுப் போச்சா... பாட்டி வடையை மூடிவைக்கலையா?’’ என்று கேட்கலாம். இதிலிருந்து, குழந்தைகளின் புத்திகூர்மையை, லாஜிக்காக யோசிக்கவைக்கும் திறனை கதைகள் அதிகரிக்கச் செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தொலைபேசி எண்களைச் சொல்லிக் கொடுங்கள்!

இந்த வயதில் மொழி வளர்ச்சி படுவேகமாக இருக்கும். ‘பொருளை எடுத்த இடத்துல திரும்ப வை’ என்றால், ‘நீயே வைம்மா’ என்று கொஞ்சலாகச் சொல்கிற அளவுக்கு வாண்டுகள் உஷாராகப் பேச ஆரம்பிப்பார்கள்.  காலையில் சாப்பிடுவது பிரேக்ஃபாஸ்ட், மதியம் லஞ்ச், இரவு டின்னர் என்று பிரித்துச் சொல்கிற அளவுக்குத் தெளிவாக இருப்பார்கள். பெற்றோர்களின் வேகமான மற்றும் கோவையான வார்த்தைகள் புரிய ஆரம்பிக்கிற வயது இது. மனப்பாடம் செய்கிற தன்மையும் வர ஆரம்பித்துவிடும். எனவே, அப்பா-அம்மாவின் தொலைபேசி எண்களைச் சொல்லிக் கொடுத்துவிடுங்கள்.

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19எழுத்தைக் கண்டுபிடிப்பார்கள்!

இன்றைக்குச் சில பள்ளிகளில் ஐந்து வயதுக்குள்ளாகவே எழுதவைக்கிறார்கள்; படிக்கவும்வைக்கிறார்கள். 4 - 5 வயதில் குழந்தைகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது என்பதே உண்மை. ‘இல்லையே என் பொண்ணு செய்யறாளே’ என்றால், இந்த வயதில் குழந்தைகள் எழுத்துகளைக் கண்டுபிடித்துவிடுவார்கள், அவ்வளவுதான்.  ‘அ’  என்றால் இப்படியிருக்கும், ‘ஆ’ என்றால் இப்படியிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதே நேரம், ‘b’-யைத் திருப்பி ‘d’-யாகப் போடுவது, ‘p’-யைத் திருப்பி, ‘9’-ஆகப் போடுவது என்றும் செய்வார்கள். நாளாக ஆக இந்தக் குழப்பம் சரியாகிவிடும்.

அம்மா பின்னால் ஒளிகிற பருவத்திலிருந்து, சமூகத்துடன் கலந்து பழகுகிற பக்குவம் மெள்ள மெள்ள வர ஆரம்பிக்கும். `பெயர் என்ன?’, `எந்த ஸ்கூல்ல படிக்கிறே?’ போன்ற கேள்விகளுக்கு இயல்பாக பதில் சொல்வார்கள். `பிறவி மேதை’ என்கிற தன்மையும் இந்த வயதில்தான் வரும். பல நாடுகளின் தலைநகரங்ககள், திருக்குறள்களைச் சொல்லுதல் என்று சில பிள்ளைகள் அசத்துவதும் இந்த வயதில்தான்.

இந்த வயதில் இவை முக்கியம்!

இந்த வயதில் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதை இன்னும் தூண்டுவதற்கு சமைக்காத காய்கறிகள் (கேரட், தக்களி), பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என்று கொடுக்க ஆரம்பியுங்கள்.

மலத்துவாரப் பூச்சிகள் உஷார்!

குழந்தைகள் வயிற்றிலிருக்கிற பூச்சிகள் இரவில் மலத்துவாரத்தில் வந்து முட்டையிடும். அதனால், அந்த இடத்தில் நமைச்சல் ஏற்பட்டுச் சொறிந்துவிடுவார்கள். சொறிந்த கையைத் தெரியாமல் வாயில் வைத்துவிட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி என வரிசைகட்டி நிற்கும். சில குழந்தைகள் அம்மாவைச் சொறிந்துவிடச் சொல்வார்கள். அப்படிச் சொறிந்த கையை சோப்பு போட்டுக் கழுவாமல் சமைத்தால், வயிற்றுப்போக்கு, வாந்தி குடும்பத்திலிருக்கிற அனைவருக்கும் வரும்.  முட்டையைத் தொட்ட கையால் அரிசி களைந்தால், கொதிக்கிற தண்ணீரின் சூட்டுக்கும் அந்தக் கிருமி சாகாது. உணவின் வழியாக வயிற்றுக்குள் போய்விடும். அதனால், கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவரிடம் கேட்டு வருடத்துக்கு இரண்டு முறை பூச்சி மருந்து கொடுங்கள்.

பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன் என்கிறார்களா?

இந்த வயதில் அடம்பிடிப்பது குறைய ஆரம்பிக்கும். அடம்பிடித்தால், `டைம் அவுட்’டைக் கையில் எடுங்கள். வழிக்கு வந்துவிடுவார்கள். ‘ஸ்கூலுக்குப் போக மாட்டேன்’ என்று தினமும் சொன்னால், என்ன பிரச்னை என்று விசாரியுங்கள்.

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19

உண்மையாகவே பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள்!

‘அவன்தான்மா மொதல்ல கிள்ளினான்’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். அவை பாதிப்பில்லாத வகை என்றால் சிரித்துக்கொண்டே கடந்து செல்லுங்கள்!

இதுவும் தெரிய ஆரம்பிக்கிற வயது! 

தங்களின் பிறப்புறுப்பு பற்றித் தெரிய ஆரம்பிக்கும். இதை ‘சைல்ட்ஹுட் செக்ஸுவல் பிஹேவியர்’ என்போம். இது இயல்பானதே.

சரியாகத்தான் வளர்கிறார்களா உங்கள் செல்லங்கள்?


அதிக பயம், வெட்கம், கோபம், படபடப்பு போன்றவை இருந்தால், அவை கவலைப்படவேண்டிய அறிகுறிகள். அவர்களின் உணர்வுகளில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். காரணத்தை மருத்துவரின் உதவியுடன் கண்டறிய வேண்டும். மற்ற குழந்தைகளோடு விளையாட பயப்படுவது, கண்ணுடன் கண் நோக்கிப் பார்க்க மறுப்பது, மனநிலை அடிக்கடி மாறுவது என்று இருந்தால், அவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ்

பிறவி மேதை ஆகிற வயது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 19

உளவியல் உண்மைகள்!

ங்களிடம் பேசுபவா், பேசிக்கொண்டே இருக்கும்போது பார்வையை விலக்கிக்கொண்டால் அல்லது மூக்கை அவ்வப்போது சொறிந்தால் அவா் `பொய் சொல்கிறார்’ என அா்த்தம்.