Published:Updated:

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குடும்ப வாழ்க்கை முழுமைபெற தம்பதியர் குழந்தைப்பேறு பெற வேண்டும். ஆனால், மாறிவிட்ட உணவுமுறை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு அதிகரித்துவருகிறது. குழந்தையின்மைக்கான காரணங்கள் என்னென்ன, அந்தக் குறைபாட்டை சரிசெய்வது எப்படி, சிகிச்சைகள் மற்றும் உணவுமுறை குறித்து முழுமையான தகவல்களை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் சித்ரா.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!
குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மை... இந்த வார்த்தைக்கான சரியான பொருள் பலருக்குத் தெரிவதில்லை. தாம்பத்ய வாழ்க்கை சீராக இருந்தும், ஓராண்டாகியும் குழந்தைப்பேறு அடையவில்லை என்றால், அந்த நிலையே `குழந்தையின்மை’ எனப்படுகிறது.தம்பதிக்குள் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது என்றால், அதை மருத்துவ உலகம் மூன்றாகப் பிரிக்கிறது. பெண்களுக்கான உடல்ரீதியான குறைபாடுகள் குழந்தையின்மையை ஏற்படுத்த  30 சதவிகிதம் காரணமாக இருக்கலாம். அதேபோல ஆண்களுக்கான உடல்ரீதியான குறைபாடுகள்  30 சதவிகிதம் காரணமாகலாம். இவை தவிர மீதமுள்ள 40 சதவிகிதக் குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு ஆண், பெண் இருவருக்குமான உடல்ரீதியான பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். அதேவேளையில், இருவருக்கும் எவ்விதக் குறைபாடுகளும் இல்லையென்றாலும்கூட அவர்களுக்கு ஏன் குழந்தைப்பேறு அமையவில்லை என்பதைக் கணிக்க முடியாத சூழலும் இருக்கிறது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

காரணங்கள்!

குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு நான்கு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெண்ணின் சினைப்பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை வெளியே வர வேண்டும். அப்படி மாதந்தோறும் சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியே வரவில்லையென்றால், கருவுறுதல் நிகழாது. கருக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படலாம். கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம். கர்ப்ப்பையின் வடிவம் சரியாக இல்லையென்றாலோ, ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, கர்ப்பப்பையின் உள்ளடுக்கு (Uterine Lining) சரியாக இல்லையென்றாலோ கருவுறுதல் நிகழாமல் போகலாம். கர்ப்பப்பையின் உள்ளடுக்கில் பிரச்னை இருந்தால், அதைக் கண்டறிவது சற்று சிரமம். ஆனால், இந்தப் பகுதியில் பிரச்னை ஏற்படுவது அரிது. 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

`எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis) என்ற பிரச்னையும்கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது கர்ப்பப்பையில் காணப்படும் `எண்டோமெட்ரியல்’ (Endometrial) எனப்படும்  திசுதான் ஒவ்வொரு மாதமும் மாதவிடாயாக வெளிப்படுகிறது. சில நேரங்களில் கர்ப்பப்பையின் உள்ளே இருக்கவேண்டிய அந்தத் திசு, கர்ப்பப்பையின் வெளியே வயிறு, இடுப்பு, இரைப்பை போன்ற பகுதிகளிலும் காணப்படும். அங்கிருந்து ஒவ்வொரு மாதமும் ரத்தப்போக்கு ஏற்படும். இது போன்ற நிலையை `எண்டோமெட்ரியோசிஸ்’ என்கிறோம். இந்தப் பிரச்னை இருந்தாலும், குழந்தைப்பேறு தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. இத்தகைய நான்கு காரணங்களால் பெண்களுக்கு குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது. இவற்றில் முதல் மூன்று காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

சிகிச்சைகள்!

கருக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை எக்ஸ்-ரே மூலம் எளிதாகக் கண்டறியலாம். மேலும், அப்போது ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியே வருகிறதா என்பது கண்காணிக்கப்படும். குறிப்பாக, மாதந்தோறும் மாதவிலக்கு சரியாக வருகிறதென்றால், அது கருமுட்டை ஒழுங்காக வெளியே வருவதற்கான அறிகுறி. சந்தேகம் ஏதும் இருந்தால், மாதவிலக்கான இரண்டு வாரங்கள் கழித்து ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். சினைப்பையில் கருமுட்டை உருவாகி வெளியே வந்துவிட்டதா என்பது கண்டறியப்படும். அதேபோல கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதையும் ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கலாம். ஆனால், நான்காவதாகக் குறிப்பிட்ட `எண்டோமெட்ரியோசிஸ்’ பிரச்னையைக் கண்டறிவது சற்று சிரமம். ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்போது ரத்தம் சேர்ந்து கட்டிபோலக் காட்சியளித்தால், `எண்டோமெட்ரியோசிஸ்’ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். `லேப்ராஸ்கோப்பி’ பரிசோதனை மூலம் இதை ஓரளவு கண்டறியலாம்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

எண்டோமெட்ரிக் லைனிங்!

குழந்தையின்மைக் குறைபாடு நான்கு காரணங்களைச் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. இவற்றைத் தாண்டி வெளியேவரும் கருமுட்டை நன்றாக இருக்கிறதா, அதன் மூலம் கருத்தரிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதேபோல் கருமுட்டை தரமாக இருந்தாலும், கருக்குழாய்களின் உள்ளே ஏதும் பிரச்னை இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. கர்ப்பப்பையில் பிரச்னைகள் இல்லை என்றாலும், அதன் எண்டோமெட்ரிக் லைனிங் எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. கருமுட்டை உருவாகி வெளியே வருவதும், கருக்குழாய்கள் திறந்திருப்பதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். மற்றபடி உள்ளே நடக்கும் விஷயங்களை நம்மால் கண்டறிய முடியாது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

டே த்ரீ ஸ்கேன்!

மாதவிலக்கு வந்த மூன்று அல்லது நான்காவது நாள் ஸ்கேன் செய்வதன் மூலம் கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். இதை `டே த்ரீ ஸ்கேன்’ (Day 3 Scan) என்போம். அதன் பிறகு மாதவிலக்கான 14-வது நாள் மறுபடியும் கருமுட்டை உருவாகி வெளியே வருகிறதா என்பதை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். அதற்கு அடுத்த மாதவிலக்குச் சுழற்சியில் கருக்குழாய்கள் இரண்டும் திறந்திருக்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும். இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதற்கான சிகிச்சை அளிப்பார்கள். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மூன்று, நான்கு மாதவிலக்கு சுழற்சிக்குப் பிறகும் கருவுறவில்லையென்றால் `லேப்ராஸ்கோப்பி’ முறையில் மயக்க மருந்து கொடுத்து, சிறு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையின் உள் பகுதி எப்படி இருக்கிறது என்பது கண்டறியப்படும்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

ஹார்மோன் பரிசோதனை!

மாதந்தோறும் கருமுட்டை வரவில்லையென்றால், ஏன் கருமுட்டை உருவாகவில்லை என்பதைக் கண்டறிய ஹார்மோன் பரிசோதனை செய்யப்படும். தைராய்டு, ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (Follicle  Stimulating Hormone - FSH), புரோலாக்டின் (Prolactin), லூட்டினைஸிங் ஹார்மோன் (Luteinizing Hormone - LH ) ஆகிய நான்கு முக்கிய ஹார்மோன்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

வயது முக்கியம்!

குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு வயது ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு 45 வயதிலேயே மாதவிலக்கு நிற்கத் தொடங்கும். சிலருக்கு 50 வயதில் மாதவிலக்கு நிற்கும். முழுமையாக மாதவிலக்கு நிற்க, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீரற்ற மாதவிலக்கு வரும். அப்போதிருந்தே கருவுறும் தன்மை சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கும். அதனாலும் குழந்தையின்மைக் குறைபாடு உண்டாக வயது ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. சாரசரியாக ஒரு பெண் 15 வயதில் பருவமடைந்தால், அப்போதிருந்தே 25, 30 வயதுவரை அவருக்குக் கருவுறும் திறன் உச்சத்தில் இருக்கும். இதை `பீக் ஃபெர்ட்டிலிட்டி’ (Peak Fertility) என்கிறது மருத்துவ உலகம். அதன் பிறகு சுமார் 30 வயது முதல் கருவுறும் திறன் குறைய ஆரம்பிக்கும். 35 முதல் 40 வயதுவரை கருவுறும் திறன் மேலும் குறைய ஆரம்பிக்கும். 40 முதல் 45 வயதுவரை மிகவும் குறைந்த அளவே கருவுறும் திறன் இருக்கும். அதன் பிறகு கிட்டத்தட்ட கருவுறும் திறன் இல்லாமல்கூடப் போய்விடும். அதனால்தான் `கருவுறும் திறனுக்கும் வயதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது’ என்கிறார்கள்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

தடை செய்யும் காரணிகள்!

இன்றைய பெண்கள் கருவுற மிகப் பெரிய தடையாக இருப்பவற்றில் மிக முக்கியமானது `பிசிஓடி’ (PCOD) எனப்படும் `பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ பிரச்னை. இளம் பெண்களிடையே மிகப் பரவலாகக் காணப்படும் இந்தப் பிரச்னைக்கு உடல் எடை அதிகரிப்பு முக்கியக் காரணமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் வீடுகளுக்கு வெளியே ஓடி ஆடி விளையாடுவதில்லை. ட்யூஷன், மியூசிக் கிளாஸ் என்று செல்கிறார்களே தவிர விளையாடச் செல்வதில்லை. இதனால் அவர்களது உடல் எடை அதிகரித்து  14, 15 வயதுப் பெண் பிள்ளைகள்கூட `பிசிஓடி’ பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறையால் இன்றைய பெண் பிள்ளைகளின் சராசரி உடல் எடை அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் 15 வயதுப் பெண் பிள்ளைகள் சராசரியாக 45 கிலோதான் இருப்பார்கள். ஆனால், இன்றைய பெண் பிள்ளைகளில் பலர் மிகச் சாதாரணமாக  60 கிலோ எடைவரை காணப்படுகிறார்கள். பெண் குழந்தைகளின் எடை அதிகரிக்க உடலுழைப்பு குறைந்துபோனது ஒரு காரணமாக இருக்க, துரித உணவுப்பழக்கம் வேறொரு காரணமாக இருக்கிறது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

பாரம்பர்ய உணவு!

காய்கறிகளைச் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் சாதம் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்கள் பெண் பிள்ளைகளின் உடல் எடையைத் தாறுமாறாக அதிகரித்துவிடுகிறது. பருப்பு, நெய், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர் போன்ற நம் பாரம்பர்ய உணவுமுறையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் இருக்கின்றன. அவற்றை நம் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடாமல் தவிர்ப்பது, அதீத மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற அனைத்தும் ஒன்று சேர்வதால் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டு, குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு காரணமாகிறது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

பர்த் கன்ட்ரோல் பில்ஸ்!

மூன்று, நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மாதவிலக்கு வராமலிருந்தால், `பர்த் கன்ட்ரோல் பில்ஸ்’ (Birth Control Pills) என்ற மாத்திரையைக் கொடுத்து மாதவிலக்கு வரவைப்பது மட்டுமே தீர்வாக இருக்கிறது. முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னை பெரும்பாலும் வராது. ஆனால், தற்போது பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு இந்த `பர்த் கன்ட்ரோல் பில்ஸ்’ கொடுத்தே மாதவிலக்கு வரவைக்கவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் 22 வயதில்தான் பெண்ணுக்குத் திருமணம் ஆகும். அதன் பிறகு 25 வயதுக்குள் குழந்தை பெற்று, அந்தப் பெண் அடுத்த வாழ்க்கைக்குத் தயாராகிவிடுவாள். ஆனால், இன்றைக்கு ஒரு பெண் படித்து முடித்ததும் வேலைக்குச் சென்று, அதிலும் இரவு நேரப் பணியாக இருந்தால் அதையும் பார்த்துவிட்டு, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் உழைக்கவேண்டியிருக்கிறது. இதற்கிடையே ஹார்மோனல் இம்பேலன்ஸ் காரணமாக ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்து 25 வயதுக்கு மேல்தான் திருமணமே செய்கிறாள்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

திருமணமானாலும் சில பெண்கள் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் குழந்தைப் பிறப்பை சில காலம் தள்ளிப் போடுகிறார்கள். அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயன்றாலும், சிக்கல் ஏற்படுகிறது, குழந்தைப் பிறப்பிலும் சிக்கலாகிறது. 22 வயதில் மிகவும் எளிமையாக நடக்கவேண்டிய ஒரு நிகழ்வை மாறிவரும் வாழ்க்கைமுறையால் பல பெண்கள் சிக்கலாக்கிக்கொள்கிறார்கள். ரசித்து ரசித்துக் குழந்தை பெறுவதை விட்டுவிட்டு ஒரு கடமைபோல அதை மாற்றிவிடுகிறார்கள்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

உடல் எடை!

குழந்தைப்பேறு பெற உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும். எந்த உடல் எடையில் உங்களது மாதவிலக்கு சீராக வருகிறதோ, அந்த நார்மல் எடையைத் தொடர்ந்து பராமரித்தால் போதும். அதற்கு மேல் உடல் எடையை அதிகரிக்கவிடக் கூடாது. அதேபோல சில பெண்கள் தினமும் ஒரு மணி நேர நடைப்பயிற்சியோ அல்லது ஜிம்முக்கோ சென்றுவிட்டு மீதி நேரம் முழுக்க கணினிமுன் அமர்ந்து வேலை பார்ப்பார்கள். இல்லாவிட்டால் வேலை எதுவும் செய்யாமலிருப்பார்கள். இது தவறான அணுகுமுறை. நாள் முழுக்க சீரான இயக்கம், சரியான உணவுமுறை மட்டுமே உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும். பருவமடைந்த காலம் முதலே சில பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்காது. அவர்கள் திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெறுவதை தள்ளிப்போடக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் படிப்பு, லட்சியம் போன்றவை மிக முக்கியம்தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நம் உடலுக்கு அவை எதுவும் தெரியாது. ஆகவே, குழந்தை விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

`ஐயுஐ’ - `ஐவிஎஃப்’

குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் ஆண்கள் புகைபிடிக்கக் கூடாது. அதேபோல லேப்டாப்பை தொடையில் வைத்தபடி நீண்ட நேரம் வேலை செய்யக் கூடாது. அதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைவதுடன், அவற்றின் எண்ணிக்கையும் குறையலாம். பெண்களைப்போலவே ஆண்களும் ஐ.டி துறையில் இரவு, பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள். இதனால் நேரத்துக்குத் தூங்க முடியாமலும், சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாமலும் போகிறது. இதன் காரணமாக ஹார்மோனல் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, குழந்தையின்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படக் காரணமாகும் சீரற்ற மாதவிலக்கு, பிசிஓடி பிரச்னை, ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்றவற்றை மருத்துவச் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். அதேபோல ஆணின் விந்தணுவைச் சுத்தம் செய்து, பதப்படுத்தி, அதை, பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி, கருவுறுதலை நிகழவைக்கும் `ஐயுஐ’ (Intra Uterine Insemination - IUI) சிகிச்சை முறையும் இருக்கிறது. குழந்தையின்மை சிகிச்சையின் உச்சமாகக் கருதப்படுவது `ஐவிஎஃப்’ (In Vitro
Fertilisation - IVF) சிகிச்சை.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

கருக்குழாய்கள் இரண்டிலும் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அவற்றைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், அந்த அறுவை சிகிச்சையின் வெற்றி சதவிகிதம் மிகவும் குறைவே. அதாவது கருக்குழாயில் எந்தெந்த இடங்களில் அடைப்புகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே வெற்றி அமையும். அதனால் கருக்குழாய் அடைப்புகளை சரிசெய்ய முடியாத சூழலில் `ஐவிஎஃப்’ சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்கிறது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

ஐவிஎஃப் இக்சி!

ஆண்களில் சிலருக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு அவற்றின் நகரும் திறன் குறைவாக இருக்கும். எனவே, திறன் அதிகமுள்ள விந்தணுக்கள் உள்ள ஆணிடமிருந்து விந்தணுக்கள் பெறப்பட்டு அவற்றை கருமுட்டையுடன் இணைத்து கரு உண்டாகிறதா என்று பார்க்கப்படும். அப்படி உருவாக்கப்படும் கரு, பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை முறைக்கு `ஐவிஎஃப் இக்சி’ (IVF ICSI) என்று பெயர். குழந்தையின்மைக் குறைபாடு இருக்கிறது என்றால், முதலில் பயம், பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். எடுத்தவுடன் `ஐவிஎஃப்’ சிகிச்சை மையங்களை நோக்கிச் செல்லக் கூடாது. நன்றாகத் தெரிந்த மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து உங்கள் பிரச்னைகள் மற்றும் கவலைகளை அவரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களைப் பரிசோதித்துப் பார்த்து, உங்களுக்குச் சிறிய அளவில் உடல்ரீதியான பிரச்னைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்துவிடுவார். வேறு ஏதேனும் பெரிய பிரச்னைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய வேறு ஒரு மருத்துவரைப் பரிந்துரைப்பார். இப்படியாக நம்பிக்கைக்குரிய ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின்பேரில் சிகிச்சையை மேற்கொள்வதே நல்லது.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குடும்பத்தினரின் பங்கு!

குழந்தை பிறக்கத் தாமதமானால் சம்பந்தப்பட்டவர்களிடம் அதைப் பற்றிப் பேசி அவர்களை நோகடிக்கக் கூடாது. `இனி குழந்தை பிறக்காது’ என்பது போன்ற எதிர்மறையான வார்த்தைகளை அவர்கள் முன் ஒருபோதும் பேசக் கூடாது. அவர்களை இயல்பாக மகிழ்ச்சியாக இருக்கவிட்டாலே அவர்களின் குழந்தைக் கனவு நனவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மைக்கு யோகா கைகொடுக்குமா?

குழந்தையின்மை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து முதலில் கவனிக்க வேண்டும். சிலருக்கு `பிசிஓடி’ பிரச்னை காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகலாம். இன்னும் சிலருக்கு சினைப்பை அல்லது கர்ப்பப்பையில் உண்டாகும் கட்டிகள் காரணமாகத் தள்ளிப் போகலாம். இன்னும் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமலேயே குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகலாம். இப்படி ஒரு பெண்ணுக்கு கருவுறுதல் நடைபெறாமல் இருக்கக் காரணங்கள் பல இருக்கின்றன. யோகாவுக்கும் கருவுறுதலுக்கும் நேரடியாக என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம். யோகா செய்வதால் கருவுற முடியும் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு பெண் கருவுறத் தடையாக இருக்கும் பல்வேறு பிரச்னைகளை யோகா மூலம் சரிசெய்யலாம். உதாரணமாக, அதிக உடல் எடை காரணமாக கருவுறுதல் தள்ளிப் போகலாம். அது மட்டுமல்ல உடல் எடைக்கும் தைராய்டு பிரச்னைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தைராய்டு பிரச்னையை முழுமையாகத் தீர்க்காத பட்சத்தில் அதன் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும். இத்தகையச் சூழலில் யோகா செய்தால், அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கலாம்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!
குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

உடல்நிலை சரியாக இருந்தாலும், மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் கருவுறுதல் தாமதமாகும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வந்துவிடுமோ என்ற பயமும், இன்னும் தாய்மையடையவில்லையா என்று உறவுகள் கொடுக்கும் அதீத அழுத்தமும் ஒரு பெண்ணை கடுமையான மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கும். இது போன்ற சூழலில் யோகா உதவும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ப பிராணாயாமம், தியானம் மற்றும் மனதை லகுவாக வைத்துக்கொள்ளும் சில பயிற்சிகளைக் கற்றுத் தருவோம். அவரவர்க்குப் பிடித்த ஒரு பொருளை அல்லது ஓரிடத்தை அல்லது ஒரு நிகழ்வை அல்லது அவர்களுக்கு விருப்பமான ஒரு கடவுளைப் பற்றி நினைத்து அதில் மனதை லயிக்கச் செய்வது போன்ற மிகவும் எளிமையான பயிற்சிகள் மூலமாக மனதை அமைதிப்படுத்துவோம். 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

இந்தப் பயிற்சிகள் அவர்களுக்கு மிகவும் ஆறுதலளித்து, அவர்கள் மனதுக்கு இதமளிக்கும். கருவுறுவதற்காக அவர்கள் ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் எடுக்கும்பட்சத்தில் இத்தகைய யோகப்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும். அதுமட்டுமல்ல கருவுறும் நேரத்தில் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம். மலச்சிக்கலைச் சரிசெய்யவும் யோகாவில் வழிகள் இருக்கின்றன. 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

கருத்தரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் யோகப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு எல்லா நேரமும் ஒரே மாதிரியான பயிற்சிகளைச் சொல்லித்தர மாட்டோம். மாதவிடாய் முடிந்ததும், அதையடுத்த காலகட்டங்களில் கர்ப்பப்பையை வலுப்படுத்தும் பயிற்சிகள் சொல்லித் தரப்படும். அதேபோல் மாதவிடாய் வருவதற்கு முன்னர் எளிமையாகச் செய்யும் மூச்சுப்பயிற்சிகள் கற்றுத்தரப்படும். கூடவே மனதுக்குள் நேர்மறை சிந்தனைகளைப் பெற உதவும் எளிமையான பயிற்சிகள் அளிக்கப்படும். அடுத்த மாதவிடாய் வரும்வரை அவர்கள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படுவார்கள். ஏனென்றால் எப்போது அவர்கள் கருவுறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, `ஓவுலேஷன்’ எனப்படும் மாதவிடாய் காலத்தின் இடைப்பட்ட நாள்களில் கவனத்துடன் பயிற்சிகள் அளிக்கப்படும். மற்ற நேரங்களில் இடுப்பு மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்படும்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

கருவுறுதல் நிகழாமலிருப்பது ஒருபுறம் என்றால், அடிக்கடி கருச்சிதைவு நிகழ்வதால் சில பெண்களுக்குத் தாய்மை வரம் தள்ளிப் போவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் யோகப்பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால், கருவுறாமல் இருக்கும்போதே தகுந்த யோகா நிபுணரின் ஆலோசனையின்பேரில் அவர்கள் யோகப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கரு தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதைவிட்டுவிட்டு கரு உண்டானதும், அதைத் தக்கவைக்க திடீரென யோகா செய்தால் அது எதிர்பார்த்த பலனைத் தராது. அதேபோல கருத்தரித்த 90 நாள்கள்வரை தேவையான ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகே யோகா செய்ய வேண்டும். அப்போதுதான் கரு ஓரளவு தங்க வசதியான சூழல் ஏற்படும். அதன் பிறகு அவரவர் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப மெள்ள மெள்ள சில யோகப்பயிற்சிகளைச் சொல்லித் தருவோம். இது டெலிவரிக்கு முன்னர் வரை தொடரும்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

பொதுவாக ஒரு பெண்ணுக்குக் குழந்தை இல்லையென்றால், அந்தப் பெண்ணின் உடல்நிலையைப் பரிசோதிப்பதுடன் உடல் ஆரோக்கியம் சார்ந்த அவரது குடும்ப வரலாறு பற்றித் தெரிந்துகொண்ட பிறகே யோகப்பயிற்சிகள் சொல்லித் தரப்படும். அதாவது குடும்பத்தில் யாருக்கேனும் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் இருக்கிறதா, வலிப்புப் பிரச்னை இருக்கிறதா, சம்பந்தப்பட்ட நபர் தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்காக மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்கிறாரா என்பன போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகே தகுந்த யோகப்பயிற்சிகள் கற்றுத்தரப்படும். 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

யோகப்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்ததும், தாய்மைப்பேறு கிடைத்துவிடும் என்று நினைக்கக் கூடாது. கருவுறுவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளி வைத்துவிட்டு, குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தொடர்ந்து யோகப்பயிற்சிகள் செய்ய வேண்டும். அதன் பிறகு அதிக உடல் எடை, மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, தைராய்டு, மனஅழுத்தம் போன்றவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் சரியானால், இயல்பாகக் கருவுறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

அதுமட்டுமல்ல, யோகப்பயிற்சிகளைத் தாண்டி, சரியான நேரத்தில் தூங்குவது, சரியான உணவுமுறை, நேர்மறையான மனநிலை, கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிந்துணர்வு ஆகியவையும் கருவுறுதலுக்கு துணைபுரியும். ஹார்மோனல் இம்பேலன்ஸும் கருவுறுதலைத் தாமதப்படுத்தும் முக்கியமான காரணிகளில் ஒன்று. எனவே, இது போன்ற சூழலில் சரியான மருத்துவச் சிகிச்சையுடன் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டால் வெகு சீக்கிரம் குழந்தையின்மைக் குறைபாட்டிலிருந்து வெளிவரலாம்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

ஒரு பெண் கருவுறவில்லை என்றால், அவளிடம் மட்டுமே குறைபாடு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்பும் சமூகம் நம்முடையது. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். ஏனென்றால் உடல்ரீதியான குறை ஆண், பெண் இருவருக்கும் இருக்கலாம். அதுமட்டுமல்ல குழந்தை இல்லாதது குறித்த மனஅழுத்தம் என்பது மனைவிக்கு மட்டுமல்ல, கணவனுக்கும் இருக்கும். எனவே, யோகப்பயிற்சிகளை கணவன், மனைவி இருவரும் மேற்கொள்ள வேண்டும். இவற்றுடன் நல்ல தூக்கம், சரியான உணவுமுறை, புரிந்துணர்வுடன் கூடிய தாம்பத்யம் அமைந்தால், தாய்மையின் கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

`பிசிஓடி’ மற்றும் `சாக்லேட் சிஸ்ட்’  போன்ற பிரச்னை இருப்பவர்கள் சரியான மருத்துவச் சிகிச்சையுடன் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டால் தாய்மைக்குத் தடையாக இருப்பவை அனைத்தும் விலகும். `ஐவிஎஃப்’ போன்ற செயற்கைக் கருவுறுதல் முறையைப் பின்பற்றுபவர்கள்கூட முறையான யோகப்பயிற்சிகள் மூலமாக பயம், பதற்றத்தைக் குறைத்து சரியான உணவுமுறை, வாழ்க்கைமுறை, நல்ல தூக்கம் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால், `ஐவிஎஃப்’ சிகிச்சை முயற்சி வெற்றியடைய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.      

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

குழந்தையின்மைக் குறைபாடுகளைக் களைய என்ன சாப்பிடலாம்?

கருவுறுதலுக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னர் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையுடன் இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதேபோல் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருக்கிறதா என்பதையும் சுய பரிசோதனையாகச் செய்து பார்க்கவேண்டியது அவசியம். இதையடுத்து முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவருவதுடன் அதே எடையைத் தொடர்ந்து தக்கவைக்க, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அத்துடன் கீழ்க்காணும் உணவுப்பொருள்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.   

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!
குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் அனைத்திலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் அதிகமிருக்கின்றன. அத்துடன் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகின்றன. அவை அல்லாமல் இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, உணவுப் பொருள்களில் ஒட்டியிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென்னின் செயல்பாடுகளை பாதிக்கும். இதன் காரணமாக ஹார்மோனல் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, அதனால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படலாம். எனவே, தாய்மையடைய நினைப்பவர்கள் இயற்கைமுறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதே நல்லது. விதைகள் மற்றும் பழங்களை அரைத்துப் பெறப்படும் எண்ணெய்களான கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல ஆர்கானிக் வெண்ணெய் மற்றும் நெய்யை மிதமான அளவு பயன்படுத்தலாம். 

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

தினை, சாமை, வரகு, ராகி போன்ற சிறுதானியங்களையும் சிவப்பரிசி, பார்லி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல பயறு வகைகளின் தோலை நீக்காமல் அப்படியே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் தோலில் அபரிமிதமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. தினமும் ஏதேனும் ஒரு முளைக்கட்டிய பயறு சுண்டல் அல்லது சாலட் சாப்பிடலாம். விலங்குகளிலிருந்து பெறப்படும் புரதங்களைத் தவிர்த்துவிட்டு, தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதங்களை எடுத்துக்கொண்டால் கருவுறுதலுக்கு இவை உதவியாக இருக்கும். அதுமட்டுமல்ல, உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை சமைத்து உண்ணலாம். இந்த வகை உணவுகளும் கருவுறுதலைத் தூண்டும்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

தினமும் உணவில் பச்சைநிறக் காய்கறி அல்லது கீரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த உணவுகள் கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் சில பைட்டோநியூட்ரியன்ட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. ஆனால், ஒரே வகையான கீரை அல்லது பச்சைக் காய்கறிகளை தினமும் உணவில் சேர்க்கக் கூடாது. சுழற்சி முறையில் தினம் ஒரு கீரை, தினம் ஒரு பச்சைக் காய்கறி என மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலுக்கு எல்லாவிதமான சத்துகளும் கிடைக்கும். குறிப்பாக, நீங்கள் எடையைக் குறைக்கவேண்டிய கட்டாயத்திலிருந்தால், சாப்பாட்டுத் தட்டில், பாதி சமைத்த அல்லது பச்சைக் காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

பழங்களை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். எல்லா வகையான பழங்களும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியவையே. எனவே, எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். குறிப்பாக வாரம் ஓரிருமுறை பட்டர் ஃப்ரூட் போன்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், அதிலிருக்கும் நல்ல கொழுப்பானது இனப்பெருக்கத்தை அதிகரிக்க உதவும். தயிர் போன்ற பால் உணவுகள் கால்சியம், புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தவை என்பதால் உடல் ஆரோக்கியம் பேண அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கருவுற நினைப்பவர்கள் நட்ஸ் வகைகளையும், விதைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. வால்நட், ஆளி விதை, எள், பாதாம், பூசணி விதை, தர்பூசணி விதை போன்றவற்றில் இருக்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின் இ சத்து, இனப்பெருக்க இயக்கங்களைச் சிறப்பாக்கும் திறன்கொண்டவை. இயற்கையான அயோடின் உள்ள ராக் சால்ட் அல்லது கடல் உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலின் தைராய்டு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

பதப்படுத்திய எண்ணெய் மற்றும் கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட பருப்பு வகைகள், பாக்கெட் பால், பாக்கெட் தயிர் மற்றும் சீஸ், சோயா, ஆல்கஹால், வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆர்கானிக் வெல்லம், பனை வெல்லம் போன்றவற்றை மிகமிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது போன்ற சரியான உணவுமுறைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தைப்பேறு அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

- சு.கவிதா

குழந்தையின்மை காரணங்கள்... தீர்வுகள்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.