Published:Updated:

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

பிரியா ராஜேந்திரன், டயட்டீஷியன்ஹெல்த்

ம்மாக்கள், தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு முதன்மையாகச் செய்யவேண்டியது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது. அதற்கான அன்றாட உணவுப் பரிந்துரையை வழங்குகிறார், டயட்டீஷியன்  பிரியா ராஜேந்திரன்.  

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

* குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி, தாயின் வயிற்றில் கருவாக வளரும்போதிலிருந்தே தொடங்குகிறது என்பதால், கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளுக்கு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்  தன்மை அதிகம்.  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழங்களைக் குழந்தையின் உணவுப் பட்டியலில் சேர்க்கவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!



* நட்ஸில் ஒமேகா கொழுப்பு அமிலம் (Omega Fatty Acid) இருப்பதால், உடலிலுள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து, குழந்தைகளைச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் செயல்படவைக்கும். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை `தினமும் ஐந்து’ என்ற எண்ணிக்கையில் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தை என்றால், நட்ஸுடன் உலர் திராட்சையையும் சரிசமமாக எடுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து, லட்டுகளாக்கிக் கொடுக்கலாம்.

* புரதச்சத்து நிறைந்த உணவுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், எனர்ஜியுடன் செயல்படவும்வைக்கும். தினமும் ஒரு முட்டையைக் குழந்தையின் மதிய உணவில் பழக்கமாக்கவும். வேகவைத்த பருப்பு வகைகள், சுண்டல் வகைகளை அன்றாட உணவில் சேர்க்கவும். ஆறு வயதுக்குப் பின்னர் முளைகட்டிய தானியங்களையும் வாரத்துக்கு மூன்று முறை கொடுக்கலாம்.  

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் உணவுகளான பேரீச்சை, கீரை வகைகள், கேழ்வரகு போன்றவற்றை வாரத்துக்கு மூன்று முறையாவது குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்க்கவேண்டியது அவசியம்.

* வைட்டமின், மினரல்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை குழந்தை பிறந்த ஏழு மாதத்திலிருந்தே பழக்கப்படுத்துங்கள். இவற்றைச் சாப்பிட அடம்பிடித்தால் சூப் அல்லது ஜூஸ் செய்து கொடுக்கலாம்.

* ஆந்தோசயனின், பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவுகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை; அவற்றில் சாலட் செய்து கொடுக்கலாம்.

* தயிர் மற்றும் மோரில் நல்ல பாக்டீரியா நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் இவற்றைச் சேர்ப்பதன் மூலம் அடிக்கடி உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

* உணவு தவிர, காலை நேரச் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, தூக்கம், விளையாட்டு போன்றவையும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை.

சு.சூர்யா கோமதி