Published:Updated:

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20
பிரீமியம் ஸ்டோரி
கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

Published:Updated:
கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20
பிரீமியம் ஸ்டோரி
கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

ந்த இதழிலும் நான்கு முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளின் வளர்ச்சிநிலைகள் பற்றித்தான் பேசப்போகிறேன்.  

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

குழந்தையின் இயல்பைக் கண்டுபிடிக்கலாம்!

உங்கள் பிள்ளைக்குக் கூச்ச சுபாவமா அல்லது கலகலப்பான சுபாவமா என்பதை இந்த வயதில்தான் கண்டுபிடிக்க முடியும். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகள் வேண்டியதைக் கேட்கத் தயங்குவார்கள். கேட்டாலும், இவர்கள் குரல் மிக மெலிதாக இருக்கும். இந்த இயல்பை மெள்ள மெள்ள மாற்ற, சமூகத்துடன் இயல்பாகப் பழகவிட வேண்டும். கலகலப்பான குழந்தைகள், பிற்காலத்தில் வெளியுலகத்துடன் நல்ல தொடர்பிலிருப்பார்கள். சொல்ல விரும்புவதைத் தயக்கமில்லாமல் பிறரிடம் சொல்வார்கள். கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் செய்கை கலந்து தங்களை வெளிப்படுத்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20சுட்டிகளுக்கும் ஸ்பேஸ் வேண்டும்!

ஒரே வயதுள்ள குழந்தைகளுடன் பழகவிடுங்கள்; விளையாடவிடுங்கள். `சின்னக் குழந்தைதானே’ என்ற நினைப்பில் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுக்காமல் இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களைச் சார்ந்தே இருப்பார்கள். சில குழந்தைகள், ‘மத்தவங்க செய்வாங்க... நாம எதுக்குக் கஷ்டப்படணும்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். சில குழந்தைகள், தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய முடியவில்லையே என்று கோபப்படுவார்கள். குழந்தைகளுக்கு ஸ்பேஸ் கொடுக்கவில்லையென்றால், நீங்களும் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் அப்பா கேரக்டர் மாதிரி என்பதை நினைவில்கொள்ளுங்கள்.    
    
தனியாக டாய்லெட் போக மறுக்கிறார்களா?

குழந்தைகள் தனியாக டாய்லெட் போக மறுத்தால், நீங்கள் அதற்கான பயிற்சியைத் தராததும் காரணமாக இருக்கலாம். அதனால், டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். 

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

பல மொழிகள் பேச ஆரம்பிக்கும் வயது!

மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மூன்றும் வளரும் வயது இது. நாளொன்றுக்கு 400 முதல் 500 வார்த்தைகள் பேசுவார்கள். சிலர் நண்பர்கள் பேசுகிற வேற்றுமொழியைக்கூடப் பேசுவார்கள். ‘எனக்குச் சிவப்பு கலர் சட்டை போட்ட, பிங்க் கலர் தொப்பி போட்ட பொம்மை வேணும்’ என்று வர்ணனையோடு சொல்வார்கள். இதுவரை  குழந்தைகள் வரைந்த கோடுகளும் வட்டங்களும் வீடு, மலை, சூரியன் என ஓவியங்களாக மாற ஆரம்பிக்கும். அவர்களின் கற்பனையைத் தூண்டவேண்டிய பொறுப்பு உங்களுடையது.

அவர்களுக்கும் ரோல் மாடல் உண்டு!

காக்கா, குருவி கதைகளைத் தாண்டி, தொலைக்காட்சியில் பார்க்கிற நாயகன், நாயகிகளைத் தங்கள் ரோல் மாடல்களாக நினைத்துக்கொண்டு அவர்களைப் போலவே பாட்டு, டான்ஸ் எனக் கலக்க ஆரம்பிப்பார்கள். ‘நான் டாக்டர் ஆவேன்’ முதல் ‘லாரி ஓட்டணும்’ என்பதுவரை அவர்களைக் கவர்ந்த விஷயங்களையெல்லாம் சொல்வார்கள். இவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும் இயல்புதான்.

சீக்கிரம் தூங்கப் பழக்குங்கள்!

பகலில் விழிப்பு, இரவில் தூக்கம் என்ற சரியான தூக்க முறைக்கு அவர்களைப் பழக்குங்கள். இரவில் சீக்கிரமாகத் தூங்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் ஞாபகசக்தி வலிமையாகும்.

கற்றுக்கொடுங்கள்!


துணியை மடித்துவைப்பது, கொக்கியில் மாட்டுவது, அழுக்குக் கூடையில் போடுவது, காரில் ஸீட் பெல்ட் போடுவது, பைக்கில் அப்பாவையோ அம்மாவையோ கட்டிக்கொள்வது, வெளியே கிளம்பும்போது தாழ் போடுவது, பேனாவைத் திறந்தால் மூடிவைப்பது என அத்தனை விஷயங்களையும் சொல்லிக்கொடுங்கள்.

ஆராய்ச்சி மனப்பான்மை வளரும்!


இன்றைய குழந்தைகள் செல்போனையும், அதன் எழுத்துகளையும் பயன்படுத்த (கீ பேட்) அவர்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். இது, தன்னார்வம். இதேபோல, அவர்கள் பார்க்கும் புதுப் பொருள்களை,  `பரிசோதித்துப் பார்க்கிறேன்’ என்று உடைத்தும்விடலாம். சில குழந்தைகள் எத்தனை பொம்மைகள் வாங்கிக் கொடுத்தாலும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துவிடுவார்கள். அதற்குக் காரணம் ஆராய்ச்சி மனப்பான்மைதான். அதற்காகக் கோபித்துக்கொள்ளாதீர்கள்.

அவர்கள் முன்னால் சண்டை போடாதீர்கள்!

பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். அதனால் தவறியும் சின்னக் கெட்ட வார்த்தைகளைக்கூடப் பேசி விடாதீர்கள். நல்லதைவிடக் கெட்டதை டக்கென்று பிடித்துக்கொள்வார்கள்... கவனம்!

அடிப்பதைத் தவிருங்கள்!

குழந்தைகளை அடிப்பதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். அவர்கள் கேட்டதைக் கொடுக்காமல் இருப்பதும், ‘ரூம் மூலையில அப்படியே நில்’ என்பதும் தண்டனைதான். கோபமாகத் தப்பைச் சுட்டிக்காட்டி, கண்ணோடு கண் பார்த்து, கையைப் பிடித்து அதட்டினாலே, அவர்களுக்கு ‘நாம் செய்தது தவறு’ என்று புரிய ஆரம்பித்துவிடும்.

பேசுவதில் பிரச்னையா?


சில குழந்தைகள் எழுத்துகளைத் திருப்பி எழுதுவார்கள். இது பார்வையிலிருக்கும் சிரமமாகவும் இருக்கலாம். கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில குழந்தைகளுக்கு பேசுவதில் சிரமம் இருந்தால் அது பல் அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம். பதறாமல் ஸ்பீச் தெரபிஸ்ட்டை அணுகுங்கள்.

(வளர்த்தெடுப்போம்...)


ஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: சி.சுரேஷ்பாபு

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 20

பொடுகு போக்கும் ஆஸ்பிரின்

லைவலிக்கு மட்டுமல்ல, தலையில் உருவாகும் பொடுகை விரட்டவும் ஆஸ்பிரின் சிறந்த மருந்து. காரணம் அதிலிலுள்ள சாலிசிலிக் அமிலம். பொடுகு விரட்டும் ஷாம்பூக்களில் இதுதான் பிரதானமாகச் சேர்க்கப்படுகிறது. இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடித்து அதே அளவு சாதாரண ஷாம்பூவில் குழைத்துத் தலைக்குத் தேய்த்து இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். மைல்டான ஷாம்பூ உபயோகித்து நிறைய தண்ணீர்விட்டுக் கூந்தலை அலசவும்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism