Published:Updated:

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்
குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் 2 வயது மகள் நித்யா. இந்தக் குழந்தைக்கு  பிறவியில்  இருந்தே காது கேட்காது. ராஜேஷ், தினக் கூலி. பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்க ஆசையில்லாமல் இருக்குமா. குழந்தை நித்யாவுக்கு பேச்சு வரவழைக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுவருகின்றனர்.  கடனை வாங்கி குழந்தைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள காது கேட்புக் கருவியை கஷ்டப்பட்டு வாங்கினர். அதுவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்தான் வாங்கியுள்ளனர். கருவியை மாட்டிய பிறகு குழந்தை நித்யாவுக்கு  ஓரளவுக்கு பேச்சு கேட்கத் தொடங்கியது. குழந்தை தட்டித் தடுமாறி பேசவும் செய்தது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கண்ணூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்னை  ரயிலில் தாயாருடன் நித்யா சென்றபோது, திருடர்கள் குழந்தையின்  காது கேட்புக்  கருவியை திருடிச் சென்றுவிட்டனர். மகளுக்காக கஷ்டப்பட்டு வாங்கிய  கருவியும் திருடு போனதால், பெற்றோர் நொந்துபோனார்கள். தங்கள் மகளுக்கு மீண்டும் காது கேட்காமல் போனதைக் கண்டு கடும் வேதனை அடைந்துள்ளனர். 

ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்தக்  கருவியை மதிப்புமிக்க பொருள் எனக் கருதி திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம். இந்தப் பொருளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு அதை வீசி விடவோ அல்லது விற்று விடவோ முயல்வார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தக் கருவியை  கண்டெடுத்தால், 9847746711 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.