ஹெல்த்
தொடர்
Published:Updated:

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22
பிரீமியம் ஸ்டோரி
News
ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழிலும் 5 முதல் 6 வயதுவரையான குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் பற்றிதான் சொல்லப் போகிறேன். இதுவரை வேலியில்லாத உலகத்துக்குள் வாழ்ந்து வந்தவர்கள், இந்த வயதிலிருந்துதான் ஒரு வட்டத்துக்குள் வரப்போகிறார்கள். அதாவது, எல்.கே.ஜி படிக்கும்வரை மழலைகளாகப் பார்க்கப்பட்டவர்கள், யு.கே.ஜி-யில் அடியெடுத்து வைக்கும் இந்த வயதில் ‘ஸ்டூடன்ட்’ ஆவார்கள். ‘நிலா நிலா’ என்று பாடிக்கொண்டிருந்தவர்கள் எழுத்து, ஒழுங்கு மாதிரியான விஷயங்களுக்குள் என்ட்ரி ஆவார்கள். `ஊரோடு ஒத்து வாழ்’ என்கிற பருவத்துக்குள் குழந்தைகள் நுழைகிற வயதும் இதுதான். பக்குவம், பழக்கம், படிப்பு என்கிற மூன்று புதிய விஷயங்களைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இவற்றுடன் பாசம் மற்றும் பாதுகாப்பு என்கிற இரண்டு விஷயங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

‘அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல நான் அ, ஆ, இ, ஈ தப்பில்லாம சொன்னேன்’ என்று குழந்தை சொன்னால், ‘அப்படியா!’ என்று கேட்டுவிட்டு ‘அம்மாவுக்கு ஒரு தடவை சொல்லிக்காட்டு தங்கம்’ என்று கேளுங்கள். இதனால், பிள்ளை தான் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் செய்துகாட்டும். இப்படி இரண்டாவது தடவை ஒன்றைச் செய்யும்போது, அது குழந்தையின் மனதில் அழுத்தமாகப் பதியும்.

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்ளுதல் இந்த வயதில் குழந்தைகளிடம் அதிகமாகும். கிச்சனில் இருக்கிற பாத்திரம் முதல் தன்னுடைய பொம்மைகள்வரை கையில் எடுத்து, பிரித்துப்போட்டு ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதேபோல், தனக்குப் பிடிக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘வெண்டைக்காய் கொழகொழனு இருக்கு’; ‘உருளைக்கிழங்கை ஃபிரை பண்ணலைன்னா பிடிக்கலை’ என்றெல்லாம் சொல்வார்கள். இதேபோல படிப்பதில்கூட, ‘எனக்கு இந்த ரைம்ஸ்தான் பிடிச்சிருக்கு... அந்த ரைம்ஸ் பிடிக்கலை’ என்றும் சொல்ல ஆரம்பிப்பார்கள். அதனால், இனிமேல் உங்கள் வீட்டுச் சின்ன செல்லத்தையும் ஒரு தனி மனிதனாக, தனி மனுஷியாக நீங்கள் நடத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

தான் வளர்ந்ததும், தன்னுடைய அடிப்படை இயல்பு எப்படி இருக்கும் என்பதையும் இந்த வயதிலேயே குழந்தைகள் வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள்.  உங்கள் ஜூனியர் வளர்ந்த பிறகு ஆங்க்ரி பேர்டாக இருப்பாரா அல்லது அமைதிப் புறாவாக இருப்பாரா என்பதை இந்த ஒரு வருடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த வயதில் வரக்கூடிய பிரச்னைகள்

* கைகாலை உதைத்துக்கொண்டோ அல்லது தரையில் உருண்டு புரண்டு அழுதோ அடம்பிடிக்கிற இயல்பு உங்கள் பிள்ளைகளிடம் இருந்து, அது இந்த வயதிலும் தொடர்ந்தால், அதைக் கவலைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

* சில குழந்தைகள் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து சிணுங்குவார்கள். இது பிரச்னையல்ல. ஆனால், அழுகிறார்கள் என்றால், இது ஒரு வகையான பயம். இது நார்மல் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டு வந்த குழந்தையை பகலில் ஏ.சி அறையில் இரண்டு மணி நேரம் தூங்கவைத்தால், அது இரவு 11, 12 மணிவரை ஆட்டம், பாட்டம் என்று விளையாடிக் கொண்டுதான் இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு இரவில் ஆழமான தூக்கம் இருக்காது. அதனால், பகலில் நடந்த சம்பவங்களை நினைத்தோ அல்லது சின்னச் சத்தங்களுக்குக்கூட பயந்தோ எழுந்து அழ ஆரம்பிப்பார்கள். இந்தப் பழக்கங்களை எல்லாம் மாற்றிய பிறகும் குழந்தை இதேபோல தூக்கத்திலிருந்து எழுந்து அழுகிறது என்றால், உடனே மருத்துவரைப் பாருங்கள். சில குழந்தைகளுக்கு இது வலிப்புநோய் வருவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

* உங்கள் குழந்தையின் கழுத்துக்குக் கீழே இருக்கிற உறுப்புகளை வேலைசெய்ய வையுங்கள். கையும் வாயும் மட்டும் வேலை செய்தால் போதும் என்று நினைக்காதீர்கள். அவர்களை ஓடியாடி விளையாட விடுங்கள்!

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ்

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22
ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

`ஃபேட்டல் ஃபெமிலியல் இன்சோம்னியா’ (Fatal Familial Insomnia - FFI) என்பது, மரபு காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக் குறைபாடு. பெரும்பாலும் இந்தப் பிரச்னை 32 வயதிலிருந்து 62 வயதுக்குள் வெளிப்படும். இதன் முதல் அறிகுறி ஞாபகமறதி.  அடுத்த சில மாதங்களில் இறப்பை ஏற்படுத்திவிடும்.